ஷில்பா ஷிண்டே

இந்திய திரைப்பட நடிகை

ஷில்பா ஷிண்டே (Shilpa Shinde) 1977 ஆகஸ்ட் 28இல் பிறந்த[1] இவர் ஒரு இந்திய நடிகை ஆவார். ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான "பாபி" (2002–08) நெடுந்தொடரில் நடித்ததற்காகவும் "ஆன்கூரி பாபி" மற்றும் "பாபி ஜி கர் பர் ஹை" போன்ற தொலைகாட்சித் தொடர்களில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார்.[2][3] 2017இல், தொடங்கிய இந்திய ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான "பிக் பாஸ் 11" என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார்.[4] 2019 பிப்ரவரி 5 அன்று ஷிண்டே இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மும்பையில் அவர் போட்டியிடுவார் எனத்தெரிகிறது[5][6]

ஷில்பா ஷிண்டே
பிறப்பு28 ஆகத்து 1977 (1977-08-28) (அகவை 46)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணி
  • நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999 – தற்போது வரை
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

தொழில் தொகு

1999 இல் ஷிண்டே தொலைக்காட்சியில் அறிமுகமானார். "பாபி" (2002-08) என்றத் தொடரில் அவரது பாத்திரத்திற்காக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.[2][3] அடுத்தடுத்து நடித்த "கபி ஆயே நா ஜூடாய்" (2001-03) ,பின்னர் சஞ்சிவினி என்ற தொலைக்காட்சித் தொடரில் (2002) சித்தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[7] 2002 ஆம் ஆண்டில் "ஆம்ராபலி" தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார், பின்னர், "மிஸ் இந்தியா" (2004) நிகழ்ச்சியில் இன்னொரு பாத்திரத்தில் நடித்தார். ஜனவரி 2004 இல், ஷிண்டே தேசிய தொலைகாட்சியான தூர்தர்ஷனில் "மெஹர்" நிகழ்ச்சியில் "மெஹர்" என்ற பாத்திரத்திலும் , கஹானி ஹக் அர் ஹக்கிகேக் கி" என்ற தலைப்பில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜீ தொலைக்காட்சித் தொடரான "ரப்பா இஸ்க் ந ஹோவ்" என்பதில் 2006 இறுதி வரை நடித்து வந்தார். பின்னர்,ம் அவர் "பேட்டியான் அப்னி யா பராயா தன்" தொடரில் "வீரா" பாத்திரத்திலும் " ஹரி மிர்ச்சி லால் மிர்ச்சி" என்ற தொடரில்[8] "காயத்திரி"யாகவும் தோன்றியுள்ளார். தாசரி நாராயண ராவின் "சின்னா" மற்றும் சுரேஷ் வர்மாவின் "சிவானி" ஆகிய இரண்டு தெலுங்கு படங்களில் ஷின்டே நடித்துள்ளார்.[9]

திருப்பம், வெற்றி மற்றும் இடைவெளி (2014-2016) தொகு

சாப் தொலைகாட்சியில் கோயல் நாராயணனின் இயக்கத்தில் "சித்தியா கர்" என்ற தொடர் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.[10][11][12][13][14] ஷிண்டே தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களால் மார்ச் 2013 இல் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினார், அதற்கு மாற்றாக சுபாங்கி ஆத்ரே ஒரு வருடம் நடித்துள்ளார்.[15] ஷிண்டே "நான் நிறைய விஷயங்களில் உறுதியாக இருந்தேன், அந்த பாத்திரம் ஒரு சுவாரஸ்யமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் தயாரிப்பாளர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார், நான் என் பாதையில் மிகவும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் விலகுகிறேன் எனத் தெரிவித்தார்.[16] ஜனவரி 2015 இல், ஷிண்டே "சிட்காம்" என்ற ஒரு புதிய தொலைக்காட்சியில் பாபி ஜி கர் பர் ஹய்" என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்பட்டது.

பிக் பாஸ் தொகு

அக்டோபர் 2017 ல், ஷிண்டே தொலைக்காட்சிக்குத் திரும்பி, ரியாலிட்டி நிகழ்ச்சியான "பிக் பாஸ் 11" போட்டியில் பங்கேற்றார்.[17] ஷிண்டே மற்ற மூன்று போட்டியாளர்களை வென்று 2018 ஜனவரி 14 இல் "பிக் பாஸ் 11" போட்டியில் வெற்றி பெற்றார்.[18]

இந்தி திரைப்படங்கள் (2018-தற்போது வரை) தொகு

2018இல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, லூலியா வன்டூருடன் "ராதா க்யான் கோரி மேயின் க்யான் காலா" என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்தார்.[19]

பிற பணிகள் தொகு

இந்திய அரசியலில் நுழைதல் (2019-தற்போது வரை) தொகு

பிப்ரவரி 2019 ல், ஷிண்டே இந்திய தேசிய காங்கிரஸில் சஞ்சய் நிரூபம் முன்னிலையில் சேர்ந்தார்.[5]

சொந்த வாழ்க்கை தொகு

ஷில்பா ஷிண்டே 1977 ஆகஸ்ட் 28 அன்று மகாராஷ்டிர மத்தியதர குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, டாக்டர் சத்யாதோ ஷிண்டே, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார், அதே நேரத்தில் அவரது தாயார் கீதா சத்யாதோ ஷிண்டே இல்லத்தரசியாவார்.[20] அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் இளைய சகோதரர் உள்ளனர். மும்பை கே.சி, கல்லூரியில் ஷிண்டே ஒரு உளவியல் மாணவராக இருந்தார் , ஆனால் அவர் இளங்கலை பட்டம் பெற தவறிவிட்டார்.[21] ஷிண்டே சட்டம் படிக்க வேண்டுமென அவரது தந்தை விரும்பினார், ஆனால் அந்த விஷயத்தில் அவருக்கு ஆர்வம் இல்லை.[20]

ஷிண்டே நடிகர் ரோமிட் ராஜுவை "மாயாக்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி சந்தித்துக் கொண்டார். இருவரும் விரைவில் ஒருவருக்கொருவர் பொருத்தம் வலுப்படுத்துதலில் ஈடுபட்டனர். 2009 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தின் கோரிக்கைகளை ஷிண்டேவால் ஏற்க இயலாததால் திருமணம் நடைபெறவில்லை.[22][23]

2013 ஆம் ஆண்டில் ஆல்சைமர் நோய் காரணமாக அவரது தந்தை இறந்துவிட்டதால் ஷிண்டே மனச்சோர்வடைந்தார். அவருடைய தந்தை நடிப்பை ஒரு தொழிலாகக் கொண்டு இவர் செயல்படுவதை விரும்பவில்லை. ஷிண்டே, "அவர் என்னை நடிக்க வைக்க விரும்பவில்லை, ஆனால் என்னை வலியுறுத்திக் கொண்டிருந்தபோது அவர் எனக்கு ஒரு வருடம் கொடுத்தார், நான் ஒரு நடிகையாக இருந்தேன். கடந்த இரண்டு மாதங்களில் நான் அவருடன் இரவும் பகலும் இருந்தேன், இப்போது அவர் போய்விட்டார்.”[24]. எனக் கூறினார்.

குறிப்புகள் தொகு

  1. "Bigg Boss 11 contestants name list: Who is Shilpa Shinde? Know about Angoori Bhabhi participating in Salman Khan show". The Financial Express. 1 October 2017. http://www.financialexpress.com/entertainment/bigg-boss-11-who-is-shilpa-shinde-the-girl-is-famously-known-as-angoori-bhabhi-bhabi-ji-ghar-par-hai/877819/. பார்த்த நாள்: 14 January 2018. 
  2. 2.0 2.1 "Kamya Punjabi replaced by Shilpa Shinde in television show - The Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2013-08-28. Archived from the original on 2013-08-31. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. 3.0 3.1 "Angoori Bhabhi".
  4. "Bigg Boss 11: Shilpa Shinde to Hina Khan, celebs to be locked inside the house | The Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
  5. 5.0 5.1 "Shilpa Shinde joins Congress, wants Rahul Gandhi to be PM | India Today". India Today. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
  6. "Shilpa Shinde Joins Congress Ahead of Lok Sabha Elections". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. February 5, 2019.
  7. "Metro Plus Delhi / Personality : At ease with the world". The Hindu. 2004-11-11. Archived from the original on 2005-01-13. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. "Court rules in favour of actress Shilpa Shinde". Zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "An artiste set to dazzle". The Hindu. 2002-07-11. Archived from the original on 2003-06-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
  10. "Shilpa Shinde quits `Chidiya Ghar`". Zeenews.india.com. Archived from the original on 2013-10-03. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
  11. "The Sunday Tribune - Spectrum - Television". Tribuneindia.com. 2002-07-21. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
  12. "The Hindu Business Line : A rarity called professionalism". Thehindubusinessline.in. 2002-09-16. Archived from the original on 2013-11-22. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
  13. "The Sunday Tribune - Spectrum". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
  14. "She is known for doing such things: Shilpa Shinde". Hindustan Times. 2013-05-28. Archived from the original on 2015-07-25. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
  15. "Shilpa Shinde aka Koyal is back in ‘Chidiya Ghar’". The Indian Express. 10 June 2014. http://indianexpress.com/article/entertainment/television/shilpa-shinde-aka-koyal-is-back-in-chidiya-ghar/. பார்த்த நாள்: 15 January 2018. 
  16. Maheshwri, Neha. "Chidiya Ghar: Shilpa Shinde quits again; Aditi Sajwan to take her place this time - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Chidiya-Ghar-Shilpa-Shinde-quits-again-Aditi-Sajwan-to-take-her-place-this-time/articleshow/43087729.cms. பார்த்த நாள்: 15 January 2018. 
  17. "'Bigg Boss 11': Controversy Queen Shilpa Shinde Is Unapologetic & That Makes Her The Perfect Pick For The Show". www.mensxp.com. https://www.mensxp.com/entertainment/news/40056-lsquo-bigg-boss-11-rsquo-controversy-queen-shilpa-shinde-is-unapologetic-that-makes-her-the-perfect-pick-for-the-show.html. 
  18. "Bigg Boss 11 Grand Finale: Shilpa Shinde Is The Winner Of The Show". NDTV.com. https://www.ndtv.com/entertainment/bigg-boss-11-grand-finale-shilpa-shinde-is-the-winner-of-the-show-1799986. பார்த்த நாள்: 14 January 2018. 
  19. "EXCLUSIVE! Bigg Boss 11 winner Shilpa Shinde EXCITED to work in Radha Kyon Gori Main Kyun Kaala that stars Iulia Vantur". Bollywood Life. October 28, 2018.
  20. 20.0 20.1 "Did You Know That Shilpa Shinde Went into Depression After Her Father’s Death? These Lesser Known Facts About the Controversial Girl Will Surely Leave You Amazed!". dailybhaskar. 29 November 2017. https://daily.bhaskar.com/news/ENT-TV-shilpa-shinde-unknown-facts-5757414-PHO.html?seq=2. பார்த்த நாள்: 15 January 2018. 
  21. Banerjee, Urmimala. "Bigg Boss 11 winner Shilpa Shinde dedicates win to late father - view pic!". bollywoodlife.com. பார்க்கப்பட்ட நாள் 19 January 2018.
  22. "Bigg Boss 11: Shilpa's Ex Romit Calls Her Real Winner, Shares Adorable Post For The Actor". News18. January 14, 2018. http://www.news18.com/news/movies/bigg-boss-11-shilpa-shinde-ex-romit-raj-calls-her-real-winner-shares-adorable-post-for-the-actor-1631567.html. பார்த்த நாள்: 14 January 2018. 
  23. "Bigg Boss 11: When Shilpa Shinde's ugly break-up with co-star Romit Raj made news". India Today. 4 October 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
  24. Team, Tellychakkar (31 August 2013). "Shilpa Shinde's father passes away". Tellychakkar.com. Archived from the original on 16 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷில்பா_ஷிண்டே&oldid=3765533" இலிருந்து மீள்விக்கப்பட்டது