ஷீலா ஈசுவரமூர்த்தி

ஷீலா ஈசுவரமூர்த்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் முதுநிலைப் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரும் வெ. குருமூர்த்தி என்பவரும் இணைந்து எழுதிய “நிறுவன அமைப்பில் வளர்ச்சி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீலா_ஈசுவரமூர்த்தி&oldid=3614137" இலிருந்து மீள்விக்கப்பட்டது