ஷெய்கா யூசுப் ஹசன் அல் ஜுஃபைரி

ஷெய்கா யூசுப் ஹசன் அல் ஜுஃபைரி (Sheikha Yousuf Hasan Al Jufairi) (Arabic: شيخة بنت يوسف الجفيري) ஓர் கத்தார் அரசியல்வாதி ஆவார். இவர் விமான நிலையத் தொகுதியிலிருந்து கத்தார் நாட்டின் மத்திய நகராட்சி மன்றத்திற்கு (சி.எம்.சி) தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் வளைகுடா நாடுகளில் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். [1]

இவர் 2007 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தனது தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[2] 2011 ஆம் ஆண்டில், அல் ஜுபைரி சி.எம்.சியில் தனது இடத்தை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தக்க வைத்துக் கொண்டார். 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற அனைவரைக் காட்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 806. இவரது எதிர் போட்டியாளரான பாத்திமா அல் குவாரி பெற்ற வாக்குகள் 62. மூன்று வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.[ மேற்கோள் தேவை ]

2015 நகராட்சித் தேர்தலிலும் மிக அதிக வாக்குகளைப் பெற்று தனது தொகுதியை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டார்.[3]

குறிப்புகள்

தொகு
  1. Jack Kelly, "Qatar ruler pushing nation toward democracy" Pittsburgh Post-Gazette April 09, 2003
  2. "Debra Shushan on "The Female Face of Qatar's Municipal Elections"". Georgetown University Qatar's Center for Interregional and Regional Studies. 10 May 2011. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Qataris elect two women for first time". Agence France-Presse. 14 May 2015. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 14 May 2015.