ஏ. சி. அகார் முஹம்மத்

(ஷெய்க் அகார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏ. சி. அகார் முஹம்மத் (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்) இலங்கை முஸ்லிம் கல்வியியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.இலங்கையின் இஸ்லாமிய அழைப்புப் பணியில் காத்திரமான பங்களிப்பினைச் செய்து வருகிறவர்.மிகச் சிறந்த பேச்சாளர்.இலங்கையின் முஸ்லிம் அறிஞர்களில் முதன் முதலாக தனக்கெனப் பிரத்தியேகமான [இணையத்தை] கொண்டவர் ஷெய்க் அகார் முஹம்ம்த்.இஸ்லாத்தின் அதிகார பிரதிகளில் இரண்டாம் நிலையாகக் கொள்ளப்படுகின்ற ஹதீஸ் துறையை தனது சிறப்புத் துறையாகக் கொண்டவர்.

ஏ. சி. அகார் முஹம்மத்
பிறப்புஏப்ரல் 23, 1960
தோரயாய
பெற்றோர்அப்துல் கரீம், தாயார் கமறுன் நிஹார்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் 1960ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருணாகலை நகருக்கு அண்மையில் உள்ள 'தோரயாய' எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் கரீம், தாயார் கமறுன் நிஹார். மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட இவர் குடும்பத்தில் மூன்றாமவர். 1988ம் வருடம் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கல்வி

அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்; தனது ஆரம்பக்கல்வியை தோரயாய அத்தாரிக் முஸ்லிம் வித்யாலயத்திலும் பின்னர் பக்மிகொல்ல அல்மினா முஸ்லிம் மகா வித்யாலயத்திலும் தெலியாகொன்ன ஹிஸ்புல்லா முஸ்லிம் மகா வித்தியாலயம் என்பவற்றிலும் பெற்றுக் கொண்டார். 1976ம் ஆண்டு தனது உயர்கல்வியை தொடர்வதற்காக பேருவலை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் பிரவேசம் பெற்ற இவர் 1983ம் ஆண்டு முதற்தர சித்தியுடன் நளீமியா பட்டச்சான்றிதழை பெற்றுக்கொண்டார். 1984ம் அண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் (வெளிவாரி) பொதுக் கலைமாணிப் பட்டப்பரீட்சையில் 2ம் தர உயர் சித்தியடைந்தார். 1994ஆம் ஆண்டு முதுதத்துவமாணி பாடநெறிக்காக தன்னை பதிவு செய்து கொண்ட இவர் 1995ஆம் ஆண்டு அதன் எழுத்துப் பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த நிலையில் உள்ளார்.

சிந்தனையும் ஆளுமையும்

தொகு

இஸ்லாமிய எழுச்சி, சமூகமாற்ற தளங்களில் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களில் பங்கெடுத்துள்ள இவர் தான் முன்வைக்கும் சிந்தனைக்கு முழுப்பொறுப்புள்ளவராக நடந்துகொள்கிறார். இஸ்லாமிய சிந்தனையில் நடுநிலைப் போக்கைக் கடைப்பிடிக்கும் இவர் பிரதான நீரோட்டத்தில் பணிபுரிவதையும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையும் வலியுறுத்தி வருகின்றார். இஸ்லாமிய அமைப்புக்களுக்கிடையில் இடைவினையாற்றுதல், சகஜீவன நிலை நின்று இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பல்வேறு நாகரிக, மதப் பண்பாடுகளுக்கிடையில் உரையாடல்களை நிகழ்த்துதல் இவரது அக்கறைக்குரிய விடயங்களாகும்.

இஸ்லாமியத்துறையை அதன் நியமங்களுக்கேற்பவும் அந்த நியமங்களிலிருந்து வழுவாமலும் அதற்குரிய ஒழுகலாற்று நடைமுறையை மீறாமலும் கொண்டு செல்லும (Discipline) இவர் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் அடிநாதமாக விளங்குகின்றது. அதாவது விதிமுறை நோக்கு தவறா பயில்முறையே இவர் கடைபிடிக்கும் நடைமுறையாகும்.

எளிமை, தெளிவு, மரபில் புத்துயிர்ப்பாக்கம், சர்வதேசத்தன்மை இவர் எழுத்திலும் பேச்சிலும் விரவிக்கிடக்கும் ஆளுமைப்பண்புகளாகும்.

பங்களிப்புக்கள்

தொகு

தஃவா

தொகு

ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் மாணவப் பருவம் முதலே இஸ்லாமிய அழைப்புப் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இலங்கை இஸ்லாமிய தஃவா களத்தின் முன்னோடி தாஈகளில் ஒருவர். தமிழ், சிங்களம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையுள்ள இவர் நாடறிந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் தஃவா பயிற்றுவிப்பாளராகவும் அறியப்பட்டுள்ளார். இஸ்லாமிய தஃவா தொடர்பில் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

எழுத்துத்துறை

தொகு

நளீமிய்யாவின் முத்திங்கள் வெளியீடான இஸ்லாமிய சிந்தனையின் முன்னால் நிர்வாக ஆசிரியரான இவர் தற்போது அதன் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இஸ்லாமிய சிந்தனை, அல்ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளில் இவர் தொடர் கட்டுரைகளை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய நாளிதழான தினகரனிலும் இவரது கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்துள்ளன. இவர் இஸ்லாமிய சிந்தனையில் தொடராக எழுதிய ஹதீஸ் விளக்கம், பிக்ஹுஷ்ஷரிஆ, வானொலி முஸ்லிம் சேவை உரைகள் பின்னர் நூல்களாக வெளிவந்துள்ளன.

நூல்கள்

தொகு

இஸ்லாமிய சிந்தனைத் தெளிவை வழங்கும் வகைளில் இவர் எழுதியுள்ள நூல்கள் வருமாறு:

  • நபிவழி 1,2
  • சன்மார்க்க சட்டவிளக்கம்
  • இஸ்ரா, மிஃராஜ் ஒரு புதிய பார்வை
  • கல்வி, கற்றல், கற்பித்தல் இஸ்லாமிய நோக்கு
  • ஹலால், ஹராம் விதிமுறைகளும் உணவு, உடை வரையறைகளும்
  • நாளும் ஓத நபிகளாரின் திக்ருகள்

நபிவழி, சன்மார்க்க சட்டவிளக்கம், கல்வி கற்றல் கற்பித்தல் ஆகிய நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றதுடன் பல பதிப்புக்களை கண்டுள்ளன. [1] பரணிடப்பட்டது 2010-02-13 at the வந்தவழி இயந்திரம்

மேலும் அறிய

தொகு

http://www.sheikhagar.net/about-sheikh-agar பரணிடப்பட்டது 2009-10-09 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சி._அகார்_முஹம்மத்&oldid=3612064" இலிருந்து மீள்விக்கப்பட்டது