ஷேக் ஜாயித் சாலை

ஷேக் ஜாயித் சாலை (in Arabic: شارع الشيخ زايد). (E11 Sheikh Zayed Road) அமீரகத்தின் துபாய் நகரின் முக்கிய நெடுஞ்சாலையாகும் இது (E11 சாலை ) எனவும் குறிப்பிடப்படுகின்றது. துபாய் வர்த்தக மைய ரவுண்டானாவில் தொடங்கி, அபுதாபி எமிரேட்சின் எல்லையான ஜெபல் அலி வரை 55 கிலோமீட்டர் (34 மைல்) கடற்கரைக்கு இணையாக இந்த நெடுஞ்சாலை பயணிக்கிறது.

வரலாறு

தொகு

1993 ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை இச்சாலை பாதுகாப்பு சாலை என்று அழைக்கப்பட்டது. 30 கிலோமீட்டர் (19 மைல்) சாலை விரிவாக்கப்பட்டதை தொடர்ந்து அப்போதைய துபாயின் ஆட்சியாளரான சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம் இச்சாலைக்கு அப்போதைய ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவரான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பெயரால் ஷேக் ஜாயித் சாலை என பெயரிட்டார்.

பிரதான கட்டிடங்கள்

தொகு

துபாயின் பெரும்பாலான வானளாவிய கட்டிடங்கள் ஷேக் ஜாயித் சாலையில் உள்ளது (முக்கியமான கட்டிடங்கள் : துபாய் மால், புர்ஜ் கலிஃபா). பாம் ஜுமேரா மற்றும் துபாய் மெரினா போன்ற பிற புதிய மையங்களையும் இந்த நெடுஞ்சாலை இணைக்கிறது. இந்த சாலையில் துபாய் மெட்ரோவின் சிகப்பு லைன் பெரும்பாலானவை இயங்குகின்றன. இந்நெடுஞ்சாலையின் பெரும்பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் ஏழு முதல் எட்டு தடங்கள் பாதைகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேக்_ஜாயித்_சாலை&oldid=2947441" இலிருந்து மீள்விக்கப்பட்டது