சோலே
(ஷோலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோலே அல்லது ஷோலே 1975இல் வெளிவந்த இந்தி அதிரடி-சிலிர்ப்புத் திரைப்படமாகும். ரமேஷ் சிப்பி இயக்கிய இப்படத்தில் சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, அமிதாப் பச்சன், அம்ஜத் கான், ஹேம மாலினி, செய பாதுரி பச்சன் ஆகியோர் நடித்திருந்தனர். ராகுல் தேவ் பர்மன் இசையமைப்பு செய்தார். இப்படம் 3.25 மணி நேரம் ஒடக்கூடிய பெரிய திரைப்படம் ஆகும். 2005இல் நடைபெற்ற 50ஆம் பிலிம்பேர் விருதுகளில் இப்படத்தை ஐம்பது ஆண்டுகளில் தலைசிறந்த திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டது. இந்திய வரலாற்றில் மிகுந்த வசூல் பெற்ற திரைப்படங்களில் சோலேயும் ஒன்று.[2] இப்படம் பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக மார்ச் 2015இல் திரையில் வெளியிடப்பட்டது.
சோலே शोले | |
---|---|
இயக்கம் | ரமேஷ் சிப்பி |
தயாரிப்பு | ஜி. பி. சிப்பி |
திரைக்கதை | சலீம்-ஜாவேத் |
இசை | ராகுல் தேவ் பர்மன் |
நடிப்பு | தரமேந்திரா சஞ்சீவ் குமார் அமிதாப் பச்சன் ஹேம மாலினி செய பாதுரி பச்சன் அம்ஜத் கான் |
ஒளிப்பதிவு | துவார்க்கா திவேச்சா |
படத்தொகுப்பு | எம். எஸ். சிண்டே |
கலையகம் | யுனைட்டட் ப்ரொட்யூசர்ஸ் சிப்பி பிலிம்ஸ் |
விநியோகம் | சிப்பி பிலிம்ஸ் |
வெளியீடு | 15 ஆகத்து 1975 |
ஓட்டம் | 204 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sholay (PG)". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013.
- ↑ ஷோலே திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள்