ஷ்
ஷ் (ṣ) என்பது கிரந்த எழுத்து முறையின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் மொழியில் ஆரம்பத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கு இவ்வெழுத்துப் பயன்படுத்தப்பட்டு, இன்று பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.[1]
ஷ் | |
---|---|
தமிழில் பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துகள் | |
ஷகர உயிர்மெய்கள்
தொகுஷகர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள வரிசைப் பட்டியல் காட்டுகின்றது.
சேர்க்கை | உயிர்மெய்கள் | |
---|---|---|
வரிவடிவம் | பெயர் | |
ஷ் + அ | ஷ | ஷானா |
ஷ் + ஆ | ஷா | ஷாவன்னா |
ஷ் + இ | ஷி | ஷீனா |
ஷ் + ஈ | ஷீ | ஷீயன்னா |
ஷ் + உ | ஷு | ஷூனா |
ஷ் + ஊ | ஷூ | ஷூவன்னா |
ஷ் + எ | ஷெ | ஷேனா |
ஷ் + ஏ | ஷே | ஷேயன்னா |
ஷ் + ஐ | ஷை | ஷையன்னா |
ஷ் + ஒ | ஷொ | ஷோனா |
ஷ் + ஓ | ஷோ | ஷோவன்னா |
ஷ் + ஔ | ஷௌ | ஷௌவன்னா |
பயன்பாடு
தொகுமணிப்பிரவாள நடையில் எழுதும்போதும் பிற மொழிச் சொற்களை எழுதும்போதும் ஷகர உயிர்மெய்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுகளாக, ஷங்கர், ஷாங்காய், ஷில்லாங், ஷீலா, ஷுட், ஷூ, ஷெல்ட், ஷேக்ஸ்பியர், ஷைலக், ஷொப்பிங், ஷோனா, ஷௌட், காஷ்மீர் முதலிய சொற்களைக் குறிப்பிடலாம்.
கிரந்தக் கலப்பற்ற தமிழ்
தொகுஷகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் தனித்தமிழ் நடையில் எழுதும்போது ஷகரத்தை டகரமாக எழுதுவது பெருவழக்கு.
ஆனால், மொழிக்கு முதலில் ஷகர உயிர்மெய் வரும்போது தனித்தமிழ் நடையில் அதனைச் சகர உயிர்மெய்யாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஷங்கர்-சங்கர், ஷாங்காய்-சாங்காய்).
சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஷகர உயிர்மெய் வந்தால் அதனை டகரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: விஷயம்-விடயம், புஷ்பம்-புட்பம்). சில இடங்களில் அதனைச் சகரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: பொக்கிஷம்-பொக்கிசம், போஷாக்கு-போசாக்கு).[3]
சொல்லின் ஆரம்பத்தில் ஷ் வந்தால் அதனைச் சி என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: ஷ்ரேயா-சிரேயா). சொல்லின் இடையில் ஷ் வந்தால் அதன் பின் வரும் எழுத்தின் மெய் எழுத்தை எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டு: சஷ்டி-சட்டி). சொல்லொன்றின் இறுதியில் ஷ் வருமாயிருந்தால் அதனைச் சு என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: பங்களாதேஷ்-பங்களாதேசு).
விதிவிலக்காக பாஷா என்னும் சொல் பாழை எனத் திரிவதுண்டு.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 6.5 வரலாற்று நோக்கில் எழுத்துச் சீர்திருத்தம்
- ↑ "தமிழ் எழுத்துக்கள் + வடமொழி எழுத்துகள்". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
- ↑ எழுத்தியல்