புகாரி (நூல்)

(ஸஹீஹ் புகாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புஹாரி அல்லது புகாரி (Sahih al-Bukhari, ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري‎) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரி ஹதீஸ் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முகம்மது அல்-புகாரி ஆவார்.அவரது பெயராலேயே இந்நூல் ஸஹீஹ் புகாரி என்று அழைக்கப் படுகிறது.இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. [1]இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது.

ஸஹீஹ் புகாரி ஹதீஸ் நூல்


நூலின் உண்மையான தலைப்பு தொகு

இந்நூல் பொதுவாக ஸஹீஹ் அல் புகாரி என குறிப்பிடப்படுகிறது. ஆனால் நூலின் உண்மையான தலைப்பு இப்னு அல்- சலா கருத்துப்படி, "அல்- ஜாமி அல்- சஹீஹ் அல்- முஸ்னத் அல்- முக்தசர் மின் உம்ரி ரசூல் அல்லாஹி வ சுனைனிஹி வ அய்யாமிஹி" என்பதாகும்.அதாவது "முகமது நபி , அவரது நடைமுறைகள் மற்றும் அவரது காலம் தொடர்புடைய செயல்கள் தொடர்பாக இணைக்கப்பட்ட தொடர்புகள் கொண்டு உண்மையான ஹதீஸ் சேகரிப்பு" எனப் பொருள்படும்.[2]

தொகுக்கப்பட்ட வரலாறு தொகு

இமாம் புகாரி அவர்கள் பரவலாக அப்பாசித் கலிபா காலத்தில் தனது 16 வயதில் இருந்து பயணம் செய்து மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்து ஸஹீஹ் ஹதீஸ்கள் உட்பட கிட்டத்தட்ட 600,000 ஹதீஸ்களை தொகுத்தார்.[3].

அவருக்கு கிடைத்த ஹதீஸ்களில் மிக மிக உண்மையானதை மட்டும் ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் சேர்த்தார்.நிபுணர்கள் கணக்கு படி ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் பொதுவாக, 7,397 ஹதீஸ்கள் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு தொகு

மிக மிக உண்மையானதை மட்டும் ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் சேர்க்கப் பட்டதால் இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது. முகமது நபியின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும்.

வெளி இணைப்புகள் தொகு

புகாரி ஹதீஸ் இணையத்தளம்[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள் தொகு

  1. Hadith of Bukhari: Volumes I, II, III & IV. Forgotten Books. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1605066776. 
  2. Hadyi al-Sari, pg. 10.
  3. A.C. Brown, Jonathan (2009). Hadith: Muhammad's Legacy in the Medieval and Modern World (Foundations of Islam series). Oneworld Publications. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1851686636. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாரி_(நூல்)&oldid=3574157" இலிருந்து மீள்விக்கப்பட்டது