முடைவளிமா
(ஸ்கங்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முடைவளிமா | |
---|---|
வரி முடைவளிமா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | Mephitidae (in part, see text) Bonaparte, 1845
|
பேரினங்கள் | |
Skunk genera ranges |
முடைவளிமா (Skunk) என்பது தம்முடைய பாதுகாப்பிற்காக தனது வாலின் அடிப்பகுதியில் இருந்து முடைநாற்றமான ஒருவித திரவத்தைப் பீய்ச்சும் பாலூட்டி வகையாகும்.[1] இவை கறுப்பு-வெள்ளை நிறம் கலந்ததாகவும், சிலவேளைகளில் மண்ணிறமும் கலந்ததாகக் காணப்படுகின்றது. இவற்றின் வால் பஞ்சு போல் மிகவும் அடர்த்தியானதாகும். இவற்றை சிலர் செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கின்றனர். இவற்றில் மொத்தம் 11 இனங்கள் உள்ளன. இவை வட மற்றும் மத்திய அமெரிக்காவில் பரந்து காணப்படுகின்றன.[2]
இவை தாவரம், விலங்கு என இரண்டையும் உண்ணும் அனைத்துண்ணிகள் ஆகும். விலங்குகளில் சிறிய விலங்குகளான மண்புழுக்கள், தவளைகள், பாம்புகள், பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகள் என பலவற்றையும் உண்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ அகரமுதலிSkunk- தமிழ்ப்பொருள், பார்க்கப்பட்ட நாள் 2019-03-12
- ↑ a-z-animals (in en)a-z animals[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புக்கள்
தொகு- முடைவளிமா பற்றிய தகவல்கள் (ஆங்கில மொழியில்)
- முடைவளிமா திறந்த ஆவணத் திட்டத்தில் (ஆங்கில மொழியில்)
- Skunks and the management of skunk damage பரணிடப்பட்டது 2016-11-13 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Encyclopedia of Life (ஆங்கில மொழியில்)