ஸ்கோடியா கடல்

தொன்முனைக் கடலின் ஒரு பகுதி

ஸ்கோடியா கடல் (Scotia Sea) என்பது தென்முனைப் பெருங்கடலின் வடக்கு விளிம்பில் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலுடன் அதன் எல்லையில் அமைந்துள்ள ஒரு கடல் ஆகும். இதன் மேற்கில் டிரேக் பெருங்கடல் பெருவழி மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் ஸ்கோடியா வில் எனப்படும் பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கோடியா வில் பகுதியானது பல்வேறு தீவுகளை துணையாக கொண்ட கடலுக்கடியில் உள்ள ஒரு முகடு மற்றும் வில் தீவு அமைப்பு ஆகும். இவற்றால் இக்கடல் சூழப்பட்டுள்ளது. மேலும் இது ஸ்கோடியா தட்டுக்கு மேலே அமர்ந்திருக்கிறது. இதற்கு ஸ்கோடியா என்ற பயணக் கப்பலின் நினைவாக பெயர் இடப்பட்டது.

தெற்கு அரைக்கோளத்தில் கடலின் தோராயமான பகுதி

இடம் மற்றும் விளக்கம் தொகு

இந்த ஸ்கோடியா கடல் என்பது டிரேக் பாஸேஜ், டியெரா டெல் ஃபியூகோ, தெற்கு ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள், தெற்கு ஓர்க்னி தீவுகள் மற்றும் அண்டார்ட்டிக்கா மூவலந்தீவு ஆகியவற்றுக்கு இடையேயான நீர்ப் பரப்பளவு ஆகும். இந்த தீவுக் குழுக்கள் அனைத்தும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் கடலை ஒட்டிய ஸ்கோடியா வில் புவியியல் அமைப்பின் மேல் அமர்ந்திருக்கின்றன. ஸ்கோடியா கடல் சுமார் 900,000 km2 (347,500 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. கடலின் பாதி பகுதி கண்டத் திட்டின் மேலே உள்ளது.

வரலாறு தொகு

இந்தக் கடலுக்கு வில்லியம் எஸ். புரூஸின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்காட்டிஷ் தேசிய அண்டார்டிக் பயணத்தின்போது (1902-04) இந்த கடல்பகுதியியல் பயன்படுத்தப்பட்ட பயணக் கப்பலான ஸ்கோடியாவின் பெயரானது இந்த கடல் பகுதிக்கு பெயரிடப்பட்டது. இந்த கடுங்குளிரான கடலின் மிகவும் பிரபலமான பயணத்தை 1916 ஆம் ஆண்டில் சர் எர்னஸ்ட் ஷாக்லெட்டன் மற்றும் ஐந்து பேர் இணைந்த லைஃப் படகு ஜேம்ஸ் கெயார்ட் யானை தீவை விட்டு வெளியேறி இரண்டு வாரங்கள் கழித்து தெற்கு ஜார்ஜியாவை அடைந்தபோது உருவாக்கினர்.

ஸ்கோடியா கடல் பகுதியானது அர்கெந்தீனாவில் மார் அர்ஜென்டினோ என அழைக்கப்படும் ஒரு பகுதியின் ஒரு கூறாக கருதப்படுகிறது. மேலும் அர்ஜென்டினாவால் தென் ஜார்ஜியா மற்றும் பால்க்லேண்ட் தீவுகள் போன்ற உரிமை கோரப்பட்ட ஆனால் ஆக்கிரமிக்கப்படாத பல பிரதேசங்கள் இந்த பிராந்தியத்திற்குள் உள்ளன.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தொகு

ஸ்கோடியா கடலின் எல்லையில் உள்ள தீவுகள் பாறைகள் போன்றவை ஓரளவு பனி உள்ளதாகவோ அல்லது ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதாகவோ உள்ளன. இவ்வாறு கடுமையான தட்பவெட்ப சூழலில் இருந்தபோதிலும், இந்தத் தீவுகள் தாவரங்களை கொண்டதாக உள்ளன. மேலும் ஸ்கொடியா கடல் தீவுகள் தூந்திரச்சுற்றுச்சூழல் என்று விவரிக்கப்பட்டுள்ளன, இதில் தெற்கு ஜார்ஜியா, எரிமலைகளாலான தெற்கு சாண்ட்விச் தீவுகள் மற்றும் ஸ்கோடியா கடலில் உள்ள தெற்கு ஓர்க்னிகள் மற்றும் தொலைதூர தெற்கு அண்டார்டிக் தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஷெட்லேண்ட் தீவுகள் மற்றும் போவெட் தீவு எனப்படும் சிறிய தனிமைப்படுத்தப்பட்ட எரிமலை ஆகியவை அடங்கும். இந்த தீவுகள் அனைத்தும் அண்டார்டிக் ஒருங்கலில் உள்ள குளிர் கடல்களில் உள்ளன . இந்த பகுதிகள் துருவப்பகுதி தாவரங்களான பாசிகள், இலைக்கன், மற்றும் அல்கா போன்ற வற்றைக் கொண்ட தூந்திரத் தாவரங்களைக் கொண்டுள்ளன. இவை பென்குவின்கள், கடல்நாய் போன்றவற்றிற்கு உணவளிக்கின்றன.

இங்கு உள்ள தீவுப் பகுதிகளில் ஐந்து வகையான பறவைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் மஞ்சள் நிற பில்டைல் வாத்து ( அனஸ் ஜார்ஜிகா ) மற்றும் உள்ளூர் தென் ஜார்ஜியா பிபிட் ( அந்தஸ் அண்டார்டிகஸ் ) ஆகியவை அடங்கும். பிற பறவைகளில் தெற்கு ராட்சத பெட்ரல் போன்றவை அடங்கும். இங்கு உள்ள பறவை தீவில் கணிசமான வளங்கள் உள்ளன.[1]

குறிப்புகள் தொகு

  1. "Marielandia Antarctic tundra". Terrestrial Ecoregions. World Wildlife Fund.

  This article incorporates public domain material from the United States Geological Survey document "ஸ்கோடியா கடல்" (content from the Geographic Names Information System).

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கோடியா_கடல்&oldid=2884598" இலிருந்து மீள்விக்கப்பட்டது