தூந்திரம்
தூந்திரம் (tundra), புவியின் வட துருவம், தென் துருவம் மற்றும் ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் பெரும்பாலான தூந்திரங்கள் அமைந்துள்ளது. இப்பகுதிகள் உலகின் மிகக்குறைந்த துருவத் தட்பவெப்பம் கொண்ட நிலப்பரப்பாகும். மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் வாழத் தகுதியற்ற, பனிப்பாலைவனமான இந்நிலப்பரப்புகளில் குட்டை மரங்கள், குட்டைப் கோரைப்புற்கள், புதர்கள், மற்றும் சிறிய புல்வெளிகள் கொண்டது.[1][2]
தூந்திரப் பகுதிகளில் கலைமான்கள், கத்தூரி எருமைகள், ஆர்க்டிக் முயல்கள், பனி ஆந்தைகள் மற்றும் ஆர்க்டிக் நரிகள் உள்ளது. தூந்திரப் பகுதியின் கடற்கரைகளில் மட்டும் லெம்மிங்களும் மற்றும் துருவக் கரடிகள் காணப்படுகிறது.
உள்ளூர் மக்கள் ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்களில் நாய்கள், கலைமான்கள் பூட்டப்பட்ட பனிச்சறுக்கு ஊர்திகளைப் பயன்படுத்துகின்றனர்.
உருசிய மொழிச் சொல்லான தூந்திரா என்பதற்கு மேட்டு நிலம், மரங்களற்ற மலைத்தொடர் எனப் பொருளாகும்.[3]
தூந்திரப் பகுதிகளில் வட துருவ நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்க நாட்டின் அலாஸ்கா, கிறீன்லாந்து, நார்வே, சுவீடன் மற்றும் ருசியாவின் சைபீரியா, தைகா பகுதிகள் அடங்கியுள்ளது. 1,15,63,300 சகிமீ பரப்பு கொண்ட தூந்திரப் பிரதேசம் மூவகைப்படும். அவைகள்: ஆர்டிக் தூந்திரப் பிரதேசம்,[4] அல்பைன் தூந்திரப் பிரதேசம்,[4] மற்றும் அண்டார்ட்டிக்கா தூந்திரப் பிரதேசம் ஆகும்.[5]
ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்கள்
தொகுநிலவியல்
தொகுமரங்களற்ற இப்பகுதியின் நிலப்பரப்புகள் முழுவதும் நிரந்தரமாக பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருக்கும் அல்லது நிலம் என்றும் ஈரத்தன்மையுடன் கூடியதாக இருக்கும். இவ்வகை நிலப்பரப்புகள் வடக்கு உருசியா மற்றும் வடக்கு கனடாவில் உள்ளது.[4] வட துருவ தூந்திரப் பகுதிகளில், கலைமான்களை மேய்க்கும் நாடோடி மக்கள் வாழ்கின்றனர். உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி கார்பன் (எரிவாயுக்கள்) தைகா மற்றும் அலாஸ்கா போன்ற தூந்திராப் பகுதிகளின் நிலத்தடியில் பொதிந்துள்ளது.
தட்ப வெப்பம்
தொகுஆர்டிக் தூந்திரப் பிரதேசங்கள் ஆண்டின் பெரும்பகுதிகள் பனியால் உறைந்திருக்கும். நிலம் 25 முதல் 90 செண்டி மீட்டர் உயரத்திற்கு பனியால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதியின் பாறைகள் பாசிகள் மற்றும் குட்டைப் புதர்களால் மூடப்பட்டிருக்கும். குளிர்காலத்தில் இப்பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியம் பாகைக்குக் கீழ் - 28 °C முதல் 50 °C வரை சென்றுவிடும். கோடைக்காலத்தில் நிலங்களில் சூழ்ந்த பனி விலகி தரை என்றும் ஈரப்பதமாகவே இருக்கும். பகல் வெப்பநிலை 3 °C முதல் 12 °C வரை இருக்கும். கோடைக்காலத்தில் இப்பகுதி சதுப்பு நிலங்கள், ஏரிகள், நீரோடைகளால் சூழப்பட்டிருக்கும்.
தூந்திரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 100 கிமீ வேகத்தில் வீசும். பனிப்பாலைவனம் போன்ற தூந்திர சமவெளிகளில், மழைக்காலத்தில் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 15 முதல் 25 செமீ வரை ஆகும். ஐக்கிய அமெரிக்க நாட்டின் அலாஸ்கா, வடக்கு கனடா கிறீன்லாந்து மற்றும் ருசியாவின் சைபீரியா மற்றும் அண்டார்ட்டிக்காப் பகுதிகள் தூந்திரப் பகுதியில் உள்ளது.
தாவரங்களும், விலங்குகளும்
தொகுகுறைவான உயிரியற் பல்வகைமை கொண்ட தூந்திரப் பகுதிகள் 1,700 கலன்றாவரம் வகை தாவரங்களும், 48 வகை நிலம் வாழ் பாலூட்டிகளும், மில்லியன் பறவை இனங்கள் வலசையின் போது தங்கிச் செல்கிறது.[6] மேலும் சில மீன் இனங்கள் பெரும் கூட்டமாக வாழ்கிறது. கலைமான்கள், கத்தூரி எருமைகள், ஆர்க்டிக் முயல்கள், பனி ஆந்தைகள், ஆர்க்டிக் நரிகள், லெம்மிங்களும், தூந்திரப் பிரதேசக் கடல்களிலும், கடற்கரைகளிலும் மட்டும் துருவக் கரடிகள் காணப்படுகிறது.[7] தூந்திரப் பகுதிகளில் தவளை மற்றும் ஊர்வன விலங்குகளில் வசிப்பதில்லை. இப்பகுதிகளின் நிலத்தடியில், கனிம வளங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் அதிக அளவில் கிடைப்பினும், கடும் குளிர்கொண்ட தூந்திரப் பிரதேசதில் மக்கள் தொகை மிகமிகக் குறைவே. உள்ளூர் மக்கள் ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்களில் நாய்கள், கலைமான்கள் பூட்டப்பட்ட பனிச்சறுக்கு ஊர்திகளைப் பயன்படுத்துகின்றனர்.
புவி சூடாதலின் தொடர்புகள்
தொகுபுவி சூடாதல் விளைவாக, பல்லாண்டுகளாக தூந்திரப் பிரதேசத்தின் உறைபனிப் பாறைகள் வேகமாக உருகுவதால், இப்பகுதி வாழ் உயினரிங்களின் வாழ்விற்கு சவாலாக உள்ளது.[8] உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி கார்பன் (எரிவாயுக்கள்) தைகா, அலாஸ்கா, சைபீரியா போன்ற தூந்திராப் பகுதிகளின் நிலத்தடியில் பொதிந்துள்ளது.
அல்பைன் தூந்திரப் பிரதேசங்கள்
தொகுஅல்பைன் தூந்திரப் பிரதேசங்கள், ஐரோப்பாவின் உயர்ந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் உள்ள அல்பைன் நாடுகளில் அமைந்துள்ளது. மரங்கள் அற்ற அல்பைன் தூந்திரப் பகுதிகளின் உயர்ந்த மலைப்பகுதிகளில் பனிக்கட்டிகளால் நிறைந்திருப்பதால், பெரிய மரங்கள் வளர்வதில்லை. ஆல்ப்ஸ் மலையின் கீழ்ப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைவதில்லை. ஆல்ப்ஸ் மலையின் தாழ்வான மலைப்பகுதிகளின் மான்ட்டேன் நிலப்பரப்பில், தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போன்ற தனித்தன்மையான மரஞ்செடிகொடிகளும், பிற உயிரினங்களும் உயிர்வாழ்கின்றன.
அல்பைன் தூந்திரப் பிரதேசங்களின் உயர்ந்த பகுதிகளில் எவ்வித விலங்குகள் இல்லை. ஆனால் கீழ் மட்டப்பகுதிகளில் கீ கிளிகள், மர்மோட், மலை ஆடுகள், சிஞ்சில்லா எலிகள், பொன்னாங் கழுகுகள் மற்றும் பனிச்சிறுத்தைகள் போன்ற விலங்குகள் வாழ்கிறது. பாறைப் பாசிகள், குட்டைப்புற்புதர்கள் போன்ற தாவரங்கள் வளர்கிறது.
தட்பவெப்பம் & மழைப் பொழிவு
தொகுகடும் குளிர் கொண்ட அல்பைன் தூந்திரப் பகுதிகளின் கோடைக்காலத்தின் சராசரி வெப்பம் 10 °C கீழ் உள்ளது.
அண்டார்ட்டிக்கா தூந்திரப் பிரதேசம்
தொகுபுவியின் தென் துருவத்தில் அமைந்த அண்டார்ட்டிக்காவின் தூந்திரப் பிரதேசத்தில் பென்குயின்கள் மற்றும் பாறை இலைக்கன் பாசிகள் மட்டுமே காணப்படுகிறது. இப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களைத் தவிர, பொதுமக்கள் வாழ இயலாத பனிப்பாலைவனம் ஆகும்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Tundra
- ↑ Tundra
- ↑ Aapala, Kirsti. "Tunturista jängälle". Kieli-ikkunat. Archived from the original on 2006-10-01. பார்க்கப்பட்ட நாள் 2009-01-19.
- ↑ 4.0 4.1 4.2 "The Tundra Biome". The World's Biomes. பார்க்கப்பட்ட நாள் 2006-03-05.
- ↑ "Terrestrial Ecoregions: Antarctica". Wild World. National Geographic Society. Archived from the original on 2011-10-21. பார்க்கப்பட்ட நாள் 2009-11-02.
- ↑ "Great Plain of the Koukdjuak". Ibacanada.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-16.
- ↑ "Tundra". Blue Planet Biomes. பார்க்கப்பட்ட நாள் 2006-03-05.
- ↑ "Tundra Threats". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 2008-04-03.
வெளி இணைப்புகள்
தொகு- WHAT ARE TUNDRAS?
- Tundra பரணிடப்பட்டது 2018-11-08 at the வந்தவழி இயந்திரம்