உயரமான கோரைப்புல்
வகைப்பாடு
தொகுதாவரவியல் பெயர் : சைப்பிரஸ் பாப்பிரஸ்
குடும்பம் : சைப்பிரேசியீ (Cyperaceae)
இதரப் பெயர்கள்
தொகு- எகிப்து நாட்டு பாப்பிரஸ்,
- எகிப்து நாட்டு காகிதச்செடி (Egyptian paper plant)
செடியின் அமைவு
தொகுகோரைப் புல் போன்றது. இக்குடும்பத்தில் 85 சாதிகளும், 3,200 இனங்களும் உண்டு. சைப்பிரஸ் எனும் சாதியில் 1000 இனங்கள் உண்டு. சைப்பிரஸ் பாப்பிரஸ் பல பருவச் செடியாகும். இதன் அடியில் மட்டத்தண்டு கிழங்கு இருக்கிறது. இதிலிருந்து தண்டுமேல் நோக்கி வளர்கிறது. இது 10-15 அடி உயரம் வளர்கிறது. இதன் நுனியில் புல்போன்ற இலைகள் ஒரே கொத்தாக பிரஸ்போல் உள்ளன. பூக்கள் மிகச் சிறியவை. பழுப்பு நிறம் உடையது. சிறு கதிர்களாக இருக்கும்.
காணப்படும் பகுதிகள்
தொகுஇவை எகிப்து நாட்டை சேர்ந்தது. ஆப்பிரிக்காவில் விக்டோரியா ஏரி அருகில் இவை 17 அடி உயரம் வளர்கிறது.
பொருளாதார பயன்
தொகுஉலகில் முதன் முதலில் பேப்பர் இச்செடியிலிருந்து தான் தயாரிக்கபட்டது.
மேற்கோள்
தொகு| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001 ([2])
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
- ↑ "Cyperus papyrus". wikipedia. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)