இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு
இசுடாண்டர்ட் & புவர்'சு (Standard & Poor's, சுருக்கமாக S&P) ஓர் அமெரிக்க நிதியச் சேவைகள் நிறுவனமாகும். பங்குகள் மற்றும் கடனீடு ஆவணங்களை அலசி ஆய்வு செய்து வெளியிடும் மக்ராஹில் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் அமெரிக்க பங்குச்சந்தைக் குறியீடான S&P 500, ஆத்திரேலிய S&P/ASX 200, கனடிய S&P/TSX , இத்தாலிய S&P/MIB மற்றும் இந்திய S&P CNX Nifty போன்ற பங்குச் சந்தை குறியீடுகளுக்கு பரவலாக அறியப்பட்டது. கடன் மதிப்பீடு வழங்கும் பெரும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.[2] இந்த நிறுவனத்தின் தலைமையகம் நியூயார்க் நகரில் கீழ்மன்ஹாட்டனில் 55 வாடர் சாலையில் அமைந்துள்ளது.[3]
வகை | வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம் |
---|---|
நிறுவுகை | 1860, தற்போதைய நிறுவன தகுதி 1941இல் |
நிறுவனர்(கள்) | டரைல் லெத்பிரிட்ஜ் |
தலைமையகம் | நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | தேவன் சர்மா (தலைவர்) |
தொழில்துறை | நிதிச் சேவைகள் |
வருமானம் | ▲$2.61 billion US$ (2009)[1] |
பணியாளர் | 10,000 (ஏறத்தாழ) |
தாய் நிறுவனம் | மக்ராஹில் நிறுவனங்கள் |
இணையத்தளம் | standardandpoors.com |
ஆகத்து 5, 2011 அன்று எஸ் & பி அமெரிக்கா தனது வரவு செலவில் பற்றாக்குறையை குறைக்க தீட்டியிருந்த இலக்குகளை எட்டவில்லை என்று அந்நாட்டின் கடன் மதிப்பீட்டை AAAஇலிருந்து AA+ஆகக் குறைத்தது. இதனால் எழுந்த அரசியல் அழுத்தங்களால் இதன் தலைவராக இருந்த இந்திய வம்சாவளி தேவன் சர்மா பதவி விலக வேண்டியதாயிற்று.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "S&P | About S&P | Americas - Key Statistics". Standard & Poor's. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2011.
- ↑ Blumenthal, Richard (மே 5, 2009). "Three Credit Rating Agencies Hold Too Much of the Power". Juneau Empire - Alaska's Capital City Online Newspaper. Archived from the original on 2011-11-01. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2011.
- ↑ "Office Locations." Standard & Poor's. Retrieved on ஆகத்து 12, 2011. "Corporate 55 Water Street New York New York "
- ↑ S&P president steps down after political backlash த டெலிகிராஃப், பார்வையிடப்பட்ட நாள்:ஆகத்து 24, 2011
வெளியிணைப்புகள்
தொகு
|