ஸ்டீபன் கிரேன்

ஸ்டீபன் கிரேன் (Stephen Crane, நவம்பர் 1,1871 - சூன் 5, 1900) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர், புதின ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர் ஆவார். தனது குறுகிய வாழ்நாளில் அவர் இலக்கிய பாரம்பரியம், அமெரிக்க இயற்கைவாதம், தனி இலக்கியம் போன்றவை பற்றி குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதினார். அவர் தனது தலைமுறையின் புதுமையான எழுத்தாளர்களில் ஒருவராய் நவீன விமர்சகர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீபன் கிரேன்
பிறப்பு1 நவம்பர் 1871
நுவார்க்
இறப்பு5 சூன் 1900 (அகவை 28)
Badenweiler
கல்லறைEvergreen Cemetery
படித்த இடங்கள்
பணிஎழுத்தாளர், பத்திரிக்கையாளர், கவிஞர், புதின எழுத்தாளர்
கையெழுத்து

தனது பெற்றோருக்கு ஒன்பதாவது மகவாகப் பிறந்த இவர், தனது 4 வயது முதலாகவே எழுத்தில் ஆர்வம் காட்டினார். தனது பதினாறாவது வயதில் பல கட்டுரைகளை இவர் வெளியிட்டார். மேற்படிப்பின் மீதிருந்த ஆர்வமின்மையால் 1891 ஆம் ஆண்டு நிருபராகவும் எழுத்தாளராகவும் மாறினார். கிரேனின் முதல் நாவல் 1893 இல் வெளிவந்த மேகி: எ கேர்ள் ஆஃப் ஸ்ட்ரீட்ஸ் என்பதாகும். இதுவே அமெரிக்க இயற்கைவாதம் சார்ந்த முதல் நூலாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. இவர் போரில் எந்த அனுபவமும் இன்றி எழுதிய தி ரெட் பேட்ஜ் ஒஃப் சரேஜ் என்ற நாவல் அனைத்துலகப் பாராட்டைப் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீபன்_கிரேன்&oldid=2734364" இலிருந்து மீள்விக்கப்பட்டது