ஸ்டீவன் எம். வைஸ்

ஸ்டீவன் எம். வைஸ் (19 டிசம்பர் 1950—16 பிப்ரவரி 2024) ஒரு அமெரிக்க சட்ட அறிஞர் ஆவார். விலங்குப் பாதுகாப்புச் சிக்கல்கள், முதனியியல், விலங்கு நுண்ணறிவு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஹார்வர்ட் சட்டப் பள்ளி, வெர்மான்ட் சட்டப் பள்ளி, ஜான் மார்ஷல் சட்டப் பள்ளி, லெவிஸ் மற்றும் கிளார்க் சட்டப் பள்ளி, டஃப்ட்ஸ் பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பள்ளி ஆகியவற்றில் விலங்குரிமைச் சட்டத்தை கற்பிக்கிறார். இவர் விலங்கு சட்ட பாதுகாப்பு நிதியத்தின் முன்னாள் தலைவரும் மனிதரல்லா விலங்குகளின் உரிமைகள் திட்டத்தின் நிறுவனரும் தலைவருமாவார்.[2] யேல் சட்ட ஆய்விதழ் இவரை "விலங்குரிமை இயக்கத்தின் உந்துத்தண்டுகளில் ஒருவர்" என்று பெயரிட்டு கெளரவித்தது.[3]

ஸ்டீவன் எம். வைஸ்
பாஸ்டன் சைவக் குழுவில் உரையாடும் வைஸ், ஞாயிறு, 13 அக்டோபர் 2013
பிறப்புமே 1952 (அகவை 72)
ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 16, 2024(2024-02-16) (அகவை 73)[1]
கோரல் ஸ்பிரிங்ஸ், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
கல்வி
அறியப்படுவதுவிலங்குரிமை செயற்பாடு, ஒழிப்புவாதம்

வைஸின் ஆன் அமெரிக்கன் ட்ரிலஜி (2009) என்ற நூல் வட கரோலினாவின் தார் ஹீல் என்ற இடத்தில் உள்ள ஒரு நிலம் எப்படி முதலில் பூர்வீக அமெரிக்கர்களுக்கு அவர்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்குச் செல்லும் வரை அவர்களின் வசிப்பிடமாக இருந்து, பின்னர் ஒரு அடிமை விவசாயத் தோட்டமாக மாறி, இறுதியாக பன்றிப் பண்ணைகளாகவும் உலகின் மிகப்பெரிய வதைகூடமாகவும் மாறியது என்பதைக் கூறுகிறது. தோ தி ஹெவன்ஸ் மே ஃபால் (2005) என்ற அவரது நூல், 1772-ல் இங்கிலாந்தில் ஜேம்ஸ் சோமர்செட் என்ற கறுப்பினத்தவர் மேற்கிந்தியத் தீவுகளின் அடிமைச் சந்தைகளுக்குச் செல்லும் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு ஐக்கிய அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழிக்கும் இயக்கத்திற்கு உந்துவிசையாக மாறிய விசாரணை வழக்கை விவரிக்கிறது. அவரது டிராயிங் தி லைன் (2002) என்ற நூல் விலங்குகள் மற்றும் மனிதர்களின் ஒப்பீட்டு அறிவுத்திறனைப் பற்ளி விவரிக்கிறது. தனது ராட்லிங் தி கேஜ் (2000) என்ற நூலில் சில அடிப்படை சட்ட உரிமைகள் சிம்பன்சிக்களுக்கும் போனபோக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வைஸ் வாதிடுகிறார்.[2]

அன்லாக்கிங் தி கேஜ் (2016) என்ற ஆவணப்படம் சிம்பன்சிகளுக்கான வைஸின் போராட்டத்தின் சில பகுதிகளை வெளியுலகிற்குக் காட்டுகிறது.

தரவுகள்

தொகு
  1. Steven M. Wise memorial page
  2. 2.0 2.1 "About the author" பரணிடப்பட்டது 2006-01-09 at the வந்தவழி இயந்திரம், Steven Wise's home page.
  3. "Emeritus Advisory Council". AHM Website. Animal History Museum. பார்க்கப்பட்ட நாள் 3 September 2013.

மேற்கோள் தரவுகள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Capone, Lisa. "Wise Counsel for Animals", (profile of Wise), Animals, March 2000, p. 30.
  • Dougherty, Robin. "The Line That Divides Human from Animal" (interview with Wise), 'Boston Globe, May 26, 2002.
  • Kleiner, Kurt. "Review of Drawing the Line," Salon, September 3, 2002.
  • Herbert, Roy. New Scientist, September 7, 2002, Roy Herbert, review of Drawing the Line: Science and the Case for Animal Rights, p. 54.
  • Marcus, Erik. "Interview with Steven Wise," Vegan, December 6, 2002.
  • Masson, Jeffrey. Observer (London, England), June 11, 2000, review of Rattling the Cage, p. 13.
  • Mehren, Elizabeth. "Lawyer, Harvard Instructor Is Witness for the Defense of Animals," Los Angeles Times, May 24, 2000, p. A16.
  • Neil, Martha. "Animal Rights Professor Is Very Pro Bonobo," Chicago Daily Law Bulletin, August 13, 1999, p. 3.
  • Rosen, Ambuja. "All Clients Great and Small: How Strong Are Your Animal Instincts? Take a Lesson from Four Leading Animal-Rights Lawyers," Student Lawyer, December 1998, pp. 28–33.
  • Schensul, Jill. "Interview with Steven Wise," Animal News Center, December 6, 2002.
  • Wu, F. H. Choice, October 2001, review of Rattling the Cage, p. 382.
  • "Review of Rattling the Cage," January Magazine, September 2, 2002.
  • Animal Rights Agenda, July–August, 2002, "A New Order in the Court" (interview with Wise), pp. 42–43.
  • Animal Welfare Institute Quarterly, winter 2001, review of Rattling the Cage: Toward Legal Rights for Animals.
  • Daytona Beach News-Journal, June 11, 2002, "Activist Says Some Animals Deserve Legal Rights."
  • Nature, August 17, 2000, review of Rattling the Cage, pp. 675–676.
  • Publishers Weekly, May 20, 2002, review of Drawing the Line, p. 59.
  • Animal-Rights Lawyers," Student Lawyer, December 1998, pp. 28-33.
  • Time, March 13, 2000, "Standing Up for Rover: A Harvard Lawyer Is a Champion of Humane — Not Just Human — Rights, " p. 6.
  • Wall Street Journal, June 12, 2002, "The Law of the Jungle," p. A18.
  • Washington Post, June 5, 2002, "Beastly Behavior? A Law Professor Says It's Time to Extend Basic Rights to the Animal Kingdom, " pp. C1-C2.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவன்_எம்._வைஸ்&oldid=4096697" இலிருந்து மீள்விக்கப்பட்டது