ஸ்டீவன் பெஸ்ட்

ஸ்டீவன் பெஸ்ட் (Steven Best; பிறப்பு: டிசம்பர் 1955) ஒரு அமெரிக்க மெய்யியலாளரும் எழுத்தாளரும் பேச்சாளரும் ஆர்வலரும் ஆவார். விலங்குரிமை, இனங்கள் அழிவு, மனித மக்கட்தொகைப் பெருக்கம், சுற்றுச்சூழல் சிக்கல்கள், உயிரித் தொழில்நுட்பம், விடுதலை அரசியல், பயங்கரவாதம், வெகுஜன ஊடகம் மற்றும் கலாச்சாரம், உலகமயமாதல், முதலாளித்துவ ஆதிக்கம் ஆகியவை அவரது நிபுணத்துவத்தில் அடங்கும். எல் பாசோ நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மனிதவாழ்வியல் மற்றும் மெய்யியல் துறைகளின் இணைப் பேராசிரியராக உள்ளார்.[1] அவர் 13 புத்தகங்களும் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஸ்டீவன் பெஸ்ட்
photograph
பிறப்புதிசம்பர் 1955 (அகவை 68–69)
ஐக்கிய அமெரிக்கா
கல்விமெய்யியலில் முனைவர் பட்டம் (Ph.D.) (1993)
படித்த கல்வி நிறுவனங்கள்இல்லனாய் பல்கலைக்கழகம், அர்பனா–ஷாம்பேன், சிகாகோ பல்கலைக்கழகம், டெக்சஸ் பல்கலைக்கழகம், ஆஸ்டின்
பணிஇணை பேராசிரியர், மனிதவாழ்வியல் மற்றும் மெய்யியல் துறை, டெக்சஸ் பல்கலைக்கழகம், எல் பேசோ
அறியப்படுவதுவட அமெரிக்க விலங்கின விடுதலை ஊடக அலுவலகத்தின் இணை நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்(ed.) டெரரிஸ்ட்ஸ் ஆர் ஃபிரீடம் ஃபைடர்ஸ்? ரிப்ளகஷன்ஸ் ஆன் தி லிபரேஷன் ஆவ் அனிமல்ஸ் (2004)
வலைத்தளம்
drstevebest.wordpress.com

பெஸ்ட் கலிபோர்னியா பல்கலைக்கழகப் (UCLA) பேராசிரியரான டக்ளஸ் கெல்னருடன் இணைந்து பின்நவீனத்துவ ஆய்வுகளின் முத்தொகுப்பின் இணையாசிரியராவார் (Guilford Press, 1991, 1997, 2001). சமீபத்தில், அவர் நான்கு தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அவற்றின் இணைத் தொகுப்பாசிரியராகவும் செயலாற்றினார். அவரது சமீபத்திய புத்தகம் தி பாலிடிக்ஸ் ஆவ் டோட்டல் லிபரேஷன்: ரெவல்யூஷன் ஆவ் தி 21ஸ்டு சென்சுரி என்ற தலைப்பில் 2014-ல் வெளிவந்தது (ரோமன் & லிட்டில்ஃபீல்ட், 2014).

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள் தரவுகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
  வெளி ஒளிதங்கள்
  யூடியூபில் Total Liberation - Revolution for the 21st Century - Steve Best (IARC 2013)
  யூடியூபில் Dr. Steven Best. From COVID-19 in Trump’s America to the Animal Standpoint
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவன்_பெஸ்ட்&oldid=3496727" இலிருந்து மீள்விக்கப்பட்டது