ஸ்டென்டார்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Stentor|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கசையுயிரிகள் (stentor) புனல் நுண்விலங்குகள் (trumphet animalcules) என்பது அமீபா போன்றதொரு ஒற்றைக்கலக் கலப்புண்ணி முன்னுயிரி ஆகும். தண்ணீரில் வாழக்கூடியது. புனல் போன்ற வடிவம் உடையது. மொத்தம் 2.0 மிமீ நீளமுள்ளது. தலைப்பக்கம் அகன்று குழல்வாய் போல் இருக்கிறது. இதைச் சுற்றிலும் பல மயிரைழைகள்(கசைக் ஓயாமல் துடித்துக் கொண்டிருக்கின்றன. வட்ட வட்ட அலைகளைக் கிளப்புகின்றன. இந்த கசைகளின் துடிப்பு ஒரு சக்கரம் சுழல்வது போல் இருக்கும். இது விதிவிலக்காக அனைத்து முன்னுயிரிகளினும் பெரியதாகும்.[1][2][3]

ஸ்டென்டார்
"Stentor roeselii"
Stentor roeselii
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Stentor
Species

இது தன் காலை ஒரு நீரிச் செடியின் மீதோ வேறு மிருகத்தின் மீதோ பாறையின் மீதோ ஒட்டிக் கொள்கிறது. தலைப்பக்கமுள்ள கசைகளைச் சுழற்றுகிறது. தண்ணீருக்குள் இருக்கும் நுண்ணிய விலங்குகள், செடிகள் இந்த அலைக்குள் அகப்பட்டுக் கொள்கின்றன. உணவுக் குமிழ்களால் தொண்டைக்குள் தள்ளப்படுகின்றன. ஒரு உயிர்நூல் அறிஞர் பட்டினி கிடந்த புனற் கசையியிரியை ஒன்றை எடுத்தார். யூக்ளீனாக்கள் நிறைந்த தண்ணீரில் அதை விட்டார். அது யூக்ளினாக்கள் மேல் பாய்ந்தது. வட்டக் கசைகள் சுழல்கின்றன. ஒரு நிமிடத்திற்குள் 100 யூக்ளீனாக்களை விழுங்கியது. இதன் உடல் பரப்பில் எல்லாம் சிறு சிறு கசைகள் முளைத்திருக்கின்றன. இந்த கசைகள் துடிப்பதால் நீரில் இந்த விலங்கு நீந்துகிறது. தலைப்பக்கம் இருக்கும் கசைகள் பல ஒன்று சோர்ந்து முக்கோண வடிவத் துடுப்புகள் போல் இருக்கின்றன. இந்த முக்கோணத் துடுப்புகள் முதன்மையாக உணவை ஈர்க்கப் பயன்படுகின்றன. இதன் உடலில் வரிசை வரிசையாக நார்களைப் போல் ஏதோ இருக்கின்றன. இவை சுருங்குவதால் அது குறுகும். இவை நீண்டால் அதுவும் நீளும் இவைகளுக்குச் சுருங்கு நார்கள் என்று பெயர். இடது பக்கத்தில் மணிக் கோர்த்தால் போல் இருப்பது உட்கரு. இதன் மேல் உள்ள நுண்ணிழகல் தாம் கசை செனப்படிகின்றன. பல கசைகளைப் பெற்றிருப்பதால் இது கசையுயிரி (ஸீலியேட்டா) எனப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Stentor". Microbewiki.kenyon.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-06-20.
  2. Tartar, Vance (1961). The biology of Stentor. International series of monographs on pure and applied biology: Division, Zoology. Vol. 5. Pergammon Press. இணையக் கணினி நூலக மைய எண் 558125.
  3. Kumazawa, H. (2002). "Notes on the taxonomy of Stentor Oken (Protozoa, Ciliophora) and a description of a new species". J. Plankton Res. 24 (1): 69–75. doi:10.1093/plankt/24.1.69. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டென்டார்&oldid=4103721" இலிருந்து மீள்விக்கப்பட்டது