ஸ்பார்ட்டகஸ் (திரைப்படம்)

ஸ்பார்ட்டகஸ் என்பது 1960 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க வரலாற்று நாடக காவிய திரைப்படமாகும். இதை ஸ்டான்லி குப்ரிக் இயக்கினார். இது ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய 1951 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பார்ட்டகஸ் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதற்கு திரைக்கதையை டால்டன் ட்ரம்போ என்பவர் எழுதினார். பண்டைய காலத்தில் நடைபெற்ற ஒரு அடிமை புரட்சியின் தலைவரான ஸ்பார்ட்டகஸின் வரலாற்று கதை மற்றும் மூன்றாம் செர்வில் யுத்தத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் ஆகியவற்றை தூண்டுகோலாக கொண்டு இந்த திரைப்படம் கதையமைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஸ்பார்ட்டகஸாக கிர்க் டக்ளஸும், ரோமானிய தளபதி மற்றும் அரசியல்வாதி மார்க்கஸ் லிசினியஸ் கிராசஸாக லாரன்ஸ் ஆலிவரும், லெண்டுலஸ் படியாடஸ் என்ற அடிமை வியாபாரியாக துணை நடிகருக்கான அகாதமி விருது பெற்ற பீட்டர் உஸ்டினோவும், ஜூலியஸ் சீசராக ஜான் கேவினும், வரினியாவாக ஜீன் சிம்மன்ஸும் மற்றும் செம்ப்ரோனியஸ் கிராச்சஸாக சார்லஸ் லாட்டனும் மற்றும் அன்டோனினசாக டோனி கர்டிஸும் நடித்திருந்தனர்.

ஸ்பார்ட்டகஸ்
ரெனால்ட் பிரவுனின் திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்இஸ்டான்லி குப்ரிக்கு
தயாரிப்புஎட்வர்ட் லீவிஸ்
மூலக்கதைஸ்பார்ட்டகஸ் புதினம்
படைத்தவர் ஹோவர்ட் ஃபாஸ்ட்
திரைக்கதைடால்டன் ட்ரம்போ
இசைஅலெக்ஸ் நார்த்
நடிப்பு
  • கிர்க் டக்ளஸ்
  • லாரன்ஸ் ஆலிவர்
  • ஜீன் சிம்மன்ஸ்
  • சார்லஸ் லாட்டன்
  • பீட்டர் உஸ்டினோ
  • ஜான் கேவின்
  • டோனி கர்டிஸ்
ஒளிப்பதிவுருசெல் மெட்டி
படத்தொகுப்புராபர்ட் லாரன்ஸ்
கலையகம்ப்ரைனா புரோடக்சன்ஸ்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுஅக்டோபர் 6, 1960 (1960-10-06)(நியூயார்க் நகரத்தின் டிமில்லே திரையரங்கம்]])
ஓட்டம்3:18 மணி நேரம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$12 மில்லியன் (85.82 கோடி)[1][2]
மொத்த வருவாய்ஐஅ$60 மில்லியன் (429.1 கோடி)[1]

உசாத்துணைதொகு

  1. 1.0 1.1 "Spartacus (1960) – Financial Information". பார்த்த நாள் December 24, 2014.
  2. M-G-M Cashing in on Oscar Victory: ' Ben-Hur' Gross Expected to Reach 7 Million by Week's End – 'Spartacus' Booked New York Times (1923–Current file) [New York, N.Y] April 7, 1960: 44.