ஸ்பார்ட்டகஸ் (புதினம்)

ஸ்பார்ட்டகஸ்: அடிமை சமுதாய சரித்திர நாவல் (Spartacus: Fast Novel) என்பது 1951 ஆம் ஆண்டில் வெளியான ஒரு வரலாற்று நாவல் ஆகும். இதனை அமெரிக்காவை சேர்ந்த நாவலாசிரியர் மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளருமான ஹோவர்ட் பாஸ்ட் எழுதினார். இது கி.மு. 71 ஸ்பார்டகஸ் தலைமையில் வரலாற்று அடிமை எழுச்சி பற்றி விவரிக்கிறது. இப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்ட ஸ்டான்லி குப்ரிக் 1960ல் திரைப்படமாக வெளியிட்டார்.

ஸ்பார்ட்டகஸ்
நூலாசிரியர்ஹவார்ட் ஃபாஸ்ட்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்ஹவார்டு ஃபாஸ்ட் / புளூ ஹெரன் பதிப்பகம்(தமிழில்:ஏ.ஜி.எதிராஜுலு)
வெளியிடப்பட்ட நாள்
1951
ஊடக வகைஅச்சு (தடித்த, நூல் அட்டை)
பக்கங்கள்363 பக்கங்கள்
OCLC144801069

உலகம் முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான வாசகர்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பியது இப்புதினம். இரத்தவெறி பிடித்த ரோமபுரி ஆட்சியாளருக்கு எதிரான அடிமைகளை ஒன்றுதிரட்டி, ரோமாபுரியையும் அதன் கருத்தோட்டங்களையும் ஒழித்துக்கட்ட தீவிரப் போராட்டம் நடத்தியவன் ஸ்பார்டகஸ். இவர் செய்த புரட்சி, வரலாற்று இரும்புக்கால்களின் கிழே நசுக்கிவிட்டது. சரித்திரத்தின் இருட்டறையில் அமிழிந்துவிட்ட அந்த உணர்ச்சியமான கதையை வெளிக்கொணர்ந்தது பாஸ்ட் நம் முன்னே வைத்துள்ளார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பார்ட்டகஸ்_(புதினம்)&oldid=3665505" இலிருந்து மீள்விக்கப்பட்டது