இசுப்புட்னிக் 5

(ஸ்புட்னிக் 5 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஸ்புட்னிக் 5 என்பது சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் இதுவாகும். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் நாள் ஏவப்பட்ட இக் கலம், அடுத்த 8 மாதங்களிலும் குறைந்த காலப் பகுதிக்குள் மனிதனை ஏற்றிய முதல் புவிச் சுற்றுப்பாதைப் பறப்புக்கு வழி சமைத்தது.[1][2][3]

ஸ்புட்னிக் 5
இயக்குபவர்சோவியத் ஒன்றியம்
முதன்மை ஒப்பந்தக்காரர்OKB-1
திட்ட வகைபுவியியல் அறிவியல்
செயற்கைக்கோள்பூமி
சுற்றுப்பாதைகள்~16
ஏவப்பட்ட நாள்ஆகஸ்ட் 15, 1960 at 08:44:06 UTC
தரையிறங்கல்ஆகஸ்ட் 20, 1960
06:00:00 UTC அண்ணளவு Mission_Duration = 1 நாள்
தே.வி.அ.த.மை எண்1960-011A
நிறை4,600 கிகி
சுற்றுப்பாதை உறுப்புகள்
சாய்வு64.95°
சுற்றுக்காலம்90.72 நிமிடங்கள்

இந்த விண்கலம் பெல்க்கா, ஸ்ட்ரெல்கா என்னும் பெயர் கொண்ட இரண்டு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் ஏற்றிச் சென்றது. விண்கலம் அடுத்த நாளே புவிக்குத் திரும்பியது. எல்லா விலங்குகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இவ் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்படக்கருவி நாய்களைப் படம் பிடித்தது.

புவியை விண்கலம் அடைந்ததன் பின்னர், ஸ்ட்ரெல்காவின் குட்டிகளுள் ஒன்று அமெரிக்காவின் அப்போதைய முதல் பெண்ணான ஜாக்குலீன் கென்னடிக்கு சோவியத் நாட்டின் பரிசாக அனுப்பப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Korabl'-Sputnik-2 - Orbit". Heavens Above. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
  2. McDowell, Jonathan. "Launch Log". Jonathan's Space Page. பார்க்கப்பட்ட நாள் 27 July 2010.
  3. Wade, Mark. "Vostok". Encyclopedia Astronautica. Archived from the original on 29 June 2011. பார்க்கப்பட்ட நாள் 27 July 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுப்புட்னிக்_5&oldid=3889479" இலிருந்து மீள்விக்கப்பட்டது