ஸ்பைக்கர் வட்டம்

வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் ஸ்பைக்கர் வட்டம் (Spieker circle) என்பது அம்முக்கோணத்தின் நடுப்புள்ளி முக்கோணத்தின் உள்வட்டம் ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் வடிவவியலாளர் தியோடர் ஸ்பைக்கரை நினைவுகூரும் வகையில் இந்த வட்டத்திற்கு "ஸ்பைக்கர் வட்டம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வட்டத்தின் மையமானது, மூல முக்கோணத்தின் நடுப்புள்ளி முக்கோணத்தின் உள்வட்டமையமாக இருப்பதுடன், மூல முக்கோணத்தின் சுற்றளவின் பொருண்மை மையமாகவும் (center of mass) மூல முக்கோணத்தின் மூன்று வெட்டிகளும் சந்திக்கும் புள்ளியாகவும் அமைகிறது .

முக்கோணம் ABCஇன் பக்கங்களின் நடுப்புள்ளிகள்: D, E, F; முக்கோணம்DEF: நடுப்புள்ளி முக்கோணம்; இதன் உள்வட்டமே ஸ்பைக்கர் வட்டமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  • Johnson, Roger A. (1929). Modern Geometry. Boston: Houghton Mifflin. Dover reprint, 1960.
  • Kimberling, Clark (1998). "Triangle centers and central triangles". Congressus Numerantium 129: i-xxv, 1–295. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பைக்கர்_வட்டம்&oldid=3420976" இலிருந்து மீள்விக்கப்பட்டது