ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா (Sreeleela; பிறப்பு: சூன் 14, 2001) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை ஆவார். இவர் முக்கியமாக கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றுகிறார். இவர் 2019 இல் 'கிஸ்' என்கிற கன்னடமொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், சிறந்த பெண் நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் வென்றார். இவர் 2021 இல் பெல்லி சாண்டாடி என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான "தமகா" திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சுகந்தா, ஆதிகேசவா, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் மற்றும் குண்டூர் காரம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ரீலீலா | |
---|---|
ஸ்ரீலீலா -2022 இல். | |
பிறப்பு | 14 சூன் 2001 அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2019–தற்போது வரை |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஸ்ரீ லீலா சூன் 14, 2001 அன்று [1][2] அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெங்களூரில் வளர்க்கப்பட்டார்.[3][4] இவரது தாயார் ஸ்வர்ணலதா, பெங்களூரில் மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார்.[5] ஸ்வர்ணலதா தொழிலதிபர் சூரபனேனி சுபாகர ராவை மணந்தார். இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு ஸ்வர்ணலதாவுக்கு ஸ்ரீலீலா பிறந்தார்.[4][6]
லீலா சிறுவயதிலேயே பரதநாட்டிய நடனப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் ஒரு மருத்துவராக ஆசைப்படுகிறார்.[2] 2021 இல் இவர் தனது மருத்துவ படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தார்.[7]
பிப்ரவரி 2022 இல், லீலா இரண்டு ஊனமுற்ற குழந்தைகளைத் தத்தெடுத்தார்.[8]
தொழில்
தொகுஇயக்குநர் ஏ.பி. அர்ஜுன், ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவால் எடுக்கப்பட்ட லீலாவின் படங்களை சமூக ஊடகங்களில் பார்த்து, 2019 ஆம் ஆண்டு வெளியான கிஸ் திரைப்படத்தில் இவரை நடிக்க வைத்தார். தெலுங்குத் திரைப்படத்துறையில் தொடர்புகள் இருந்தும், பெங்களூரில் வளர்ந்ததால் கன்னட மொழிப் திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கத் தேர்ந்தெடுத்ததாக இந்த நடிகை கூறியுள்ளார்.[9]
கிஸ் படத்தின் படப்பிடிப்பு 2017 இல் தொடங்கியது, லீலா தனது பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பின் முதல் ஆண்டில் இருந்தார்.[2] இப்படம் 2019 இல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.[10] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் நிருபரான ஏ. சாரதா என்பவர், லீலா தன்னம்பிக்கையுடன் அறிமுகமானார், "ஸ்ரீலீலா ஸ்டைலாகத் தெரிகிறார் மற்றும் சமமான கவனத்தைப் பெறுகிறார்" என்று எழுதினார்.[11] டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சகர் வினய் லோகேஷ், லீலா தனது பாத்திரத்தில் பிரகாசித்ததாகக் கூறி தன் உணர்வை எதிரொலித்தார்.[12] ஒரு மாதம் கழித்து, ஸ்ரீமுரளிக்கு ஜோடியாக அவரது இரண்டாவது படமான பாரதே வெளியானது.[13] தி நியூஸ் மினிட்டிற்காக தனது நடிப்பை மதிப்பாய்வு செய்து அரவிந்த் ஸ்வேதா எழுதினார்: அதில், "லீலா நன்றாக தன் நடிப்புத் திறனை திரையில் வெளிப்படுத்துகிறார். முன்னிலையில் உள்ள ஸ்ரீ முரளியுடன் சேர்ந்து நடிக்கும்போது தனக்கென இருக்கும் கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறாள்." என்று குறிப்பிட்டுள்ளார்.[14] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சாரதா, "இது ஸ்ரீலீலாவின் இரண்டாவது படம், மேலும் அவர் கேமரா முன் இருப்பது வசதியாக இருப்பது போல் தெரிகிறது, மேலும், அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் கோருவதை வழங்குகிறது." என்று தெரிவித்துள்ளார்.[15]
திரைப்படவியல்
தொகுநடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | மேற். |
---|---|---|---|---|
2019 | கிஸ் | நந்தினி | கன்னடம் | [16] |
பாரதே | ராதா | [17] | ||
2021 | பெல்லி சண்டாடி | கொண்டவீதி சகசுரம் | தெலுங்கு | [18] |
2022 | பை டூ லவ் | லீலா | கன்னடம் | [19] |
ஜேம்ஸ் | [20] | |||
தமாகா | பிரணவி ரெட்டி | தெலுங்கு | [21] | |
2023 | ஸ்கந்தா | ஸ்ரீலீலா ரெட்டி | [22] | |
பகவந்த் கேசரி | விஜயலட்சுமி | [23] | ||
ஆதிகேசவா | சித்ரா | [24] | ||
எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் | லிகிதா | [25] | ||
2024 | குண்டூர் காரம் | அமுக்தா "அம்மு" மால்யதா | [26] |
சான்றுகள்
தொகு- ↑ "Project with big star is best birthday gift: Sreeleela". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. June 14, 2018.
Sreeleela, who celebrates her birthday today
- ↑ 2.0 2.1 2.2 "KISS debutante determined to be a doctor". சினிமா எக்ஸ்பிரஸ். October 15, 2017.
Sreeleela, who is getting ready to face the camera at the tender age of 16.
- ↑ Adivi, Sashidhar (February 14, 2022). "Ravi Teja is full of energy: Sreeleela". தி டெக்கன் குரோனிக்கள்.
- ↑ 4.0 4.1 "Industrialist Clarifies PelliSandaD Heroine Sree Leela Is Not His Daughter". Sakshi Post. October 17, 2021.
- ↑ "Mum's the word". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. June 10, 2020.
- ↑ "Pelli SandaD heroine Sree Leela is not my daughter: Subhakara Rao Suprapaneni states in a press meet". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. October 17, 2021.
- ↑ Vyas (November 29, 2021). "Pelli SadaD heroine busy with exams!". The Hans India.
- ↑ "Sreeleela adopts two differently-abled kids". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. February 12, 2022.
- ↑ "Bhuvan Gowda's pictures of me landed me in Kannada films: Actress Sree Leela". The Times of India. November 14, 2018.
- ↑ "Kiss Movie: Viraat, Sree Leela-starrer Kiss crosses 100th day milestone". Bangalore Mirror. February 18, 2020.
- ↑ "A youthful but unduly stretched affair". September 20, 2020. https://www.cinemaexpress.com/reviews/kannada/2019/sep/29/kiss-kannada-movie-review-an-youthful-but-unduly-stretched-affair-14588.html.
- ↑ "Kiss movie review". September 27, 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movie-reviews/kiss/movie-review/71336392.cms.
- ↑ "INTERVIEW | Expect no shades of 'KISS' in 'Bharaate', says actress Sreeleela". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. October 14, 2019.
- ↑ "'Bharaate' review: Sri Murali film is all mass with too many subplots". தி நியூஸ் மினிட். October 18, 2019.
- ↑ "'Bharaate' film review: All-round entertainer from Chethan Kumar and Sriimurali". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. October 19, 2019.
- ↑ "KISS boosts Sreeleela's confidence". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on May 11, 2023. பார்க்கப்பட்ட நாள் May 11, 2023.
- ↑ "'Bharaate' review: Sri Murali film is all mass with too many subplots". The News Minute. October 18, 2019. Archived from the original on July 2, 2022. பார்க்கப்பட்ட நாள் March 20, 2022.
- ↑ Chowdhary, Y. Sunita (October 16, 2021). "'Pelli SandaD' movie review: Done and dusted old school romance" (in en-IN). தி இந்து இம் மூலத்தில் இருந்து March 10, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220310112006/https://www.thehindu.com/entertainment/reviews/pelli-sandad-movie-review-done-and-dusted-old-school-romance/article37017971.ece.
- ↑ Sharadha A. (December 19, 2020). "Dhanveerrah and Sreeleela to star in 'By2Love'". The New Indian Express இம் மூலத்தில் இருந்து February 6, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210206194331/https://www.newindianexpress.com/entertainment/kannada/2020/dec/19/dhanveerrah-and-sreeleela-to-star-in-by2love-2238159.html.
- ↑ "Puneeth Rajkumar's 'James': An absolute action adieu". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. March 19, 2022. Archived from the original on March 20, 2022. பார்க்கப்பட்ட நாள் March 20, 2022.
- ↑ "Sreeleela all set for Dhamaka with Ravi Teja, reveals best advice he gave her I Exclusive". Archived from the original on July 15, 2023. பார்க்கப்பட்ட நாள் June 13, 2023.
- ↑ "#BoyapatiRAPO: Sreeleela joins the shoot of Ram Pothineni, Boypati Sreenu's film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. January 5, 2023. Archived from the original on July 15, 2023. பார்க்கப்பட்ட நாள் June 13, 2023.
- ↑ "Nandamuri Balakrishna, Anil Ravipudi, and Sree Leela's '#NBK108' title launch to take place in 108 locations". The Times of India. June 7, 2023 இம் மூலத்தில் இருந்து June 8, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230608015432/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/nandamuri-balakrishna-anil-ravipudi-and-sree-leelas-nbk108-title-launch-to-take-place-in-108-locations/articleshow/100812328.cms.
- ↑ "Panja Vaisshnav Tej, Sreeleela, movie launched the film is scheduled for 2023 Sankranthi release.". The Times of India இம் மூலத்தில் இருந்து November 8, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221108200505/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/panja-vaisshnav-tej-sreeleela-movie-launched-the-film-is-scheduled-for-2023-sankranthi-release-/articleshow/92382429.cms.
- ↑ "Extraordinary Man: Nithiin and Sreeleela's film warps up 60% of shooting". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. August 25, 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/extraordinary-man-nithiin-and-sreeleelas-film-warps-up-60-of-shooting/articleshow/103051945.cms?from=mdr.
- ↑ "After Dhamaka success, Sreeleela bags Mahesh Babu's SSMB 28 with Trivikram Srinivas | Exclusive". India Today. Archived from the original on January 18, 2023. பார்க்கப்பட்ட நாள் January 18, 2023.