ஸ்ரீவராகம் லட்சுமி வராகர் கோயில், திருவனந்தபுரம்

ஸ்ரீவராகம் லட்சுமி வராகர் கோயில் இந்தியாவில், கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவரகம் என்ற இடத்தில் உள்ளது. இக்கோயில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் வரகம் கோயில் என்று உள்ளூரில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராகமூர்த்தி ஆவார். [1] இந்த இந்து கோவில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது..

தெய்வங்கள் மற்றும் துணைத்தெய்வங்கள்

தொகு

இக்கோயிலின் மூலவர் வராகமூர்த்தி, லட்சுமி தேவியுடன் இங்கு அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு கணபதி, ஸ்ரீ கிருஷ்ணர், நாகராஜா, யக்சியம்மா ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன.

முக்கியத்துவம்

தொகு

இக்கோயிலின் மூலவர்விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராகமூர்த்தி ஆவார். [2] இந்தியா முழுவதும் வராகருக்காக 23 கோயில்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் சில கோயில்களில் மட்டுமே வராகர், லட்சுமி தேவியும் காணப்படுவார். இக்கோயிலில் லக்ஷ்மி தேவி வராகரின் மடியில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். கேரளாவில் வராகருக்காக மூன்று திருவனந்தபுரத்தில் உள்ள இந்த கோவில் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது.

கட்டடக்கலை

தொகு

இக்கோயில் கேரள கலைப்பாணியில் அமைந்ததாகும். மூலவர் கருவறை வட்ட வடிவில் தங்கத் தகடு வேயப்பட்ட கூரையுடன் உள்ளது. திருச்சுற்று சதுர வடிவில் உள்ளது. கோயிலில் தங்கக் கொடிமரம் உள்ளது.

கோயில் குளம்

தொகு

கேரளாவில் உள்ள கோயில் குளங்களில் இது பெரியது என்ற பெருமையுடையதாகும். 8 ஏக்கர் பரப்பளவில் இக்குளம் அமைந்துள்ளது. பத்மநாபசாமி கோயிலில் நடைபெறுகின்ற முரஜபம் சடங்கிற்காக வருகின்ற பூசாரிகள் இங்கு புனித நீராடுகிறார்கள்.[3] ஓணம் திருவிழாவின்போது இங்கு படகுப்போட்டி நடைபெறுகிறது.[4]

விழாக்கள்

தொகு

இங்கு நடைபெறும் விழா மலையாள மாதமான மீனத்தில், பத்மநாபசுவாமி கோயிலில் பைங்குனித் திருவிழா நடைபெறும் காலகட்டத்தில் நடைபெறுகிறது. வராக ஜெயந்தியும் அதே மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு