ஸ்ரீ ஸ்ரீ ரகூத்தம சுவாமிகள் மூல பிருந்தாவனம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
சிரீ சிரீ ரகூத்தம சுவாமிகள் மூல பிருந்தாவனம் (Sri Sri Rahuttama SWamy Moola Brindavana) விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மணம்பூண்டியில் அமைந்துள்ளது. ரகூத்த சுவாமிகள் இந்தியாவில் பிறந்து, வாழ்ந்து, பின் சீவசமாதி அடைந்தவர். இவர் சிரீ மத்வாச்சார்யர் தோற்றுவித்த மடங்களில் ஒன்றான சிரீ உத்திராதி மடத்தின்[1] 14ஆவது அதிபதியாக வாழ்ந்தவர்.
பிறப்பு
தொகுஉத்திராதி மடத்தின் 13வது அதிபதியாக விளங்கியவர் சிரீ ரகுவர்ய தீர்த்தர் ஆவார். அவருக்கு பின் மடத்தை வழிநடத்த சிறந்த சீடன் இல்லாததை எண்ணி வருத்தப்பட்டு தன் மூத்த குருவான சிரீ மத்வாச்சார்யரை வேண்டினார். அதன் பலனாக குரு, ரகுவர்யர்யரின் கனவில் தோன்றி சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் படி சிரீ ரகுவர்யர்யர் செதராபாத் சமசுதானத்தில் உள்ள சுவர்ணவாடி என்ற சிற்றூருக்கு விசயம் செய்தார். தங்கள் ஊருக்கு வந்த மகானை குழந்தை பாக்கியம் இல்லாத அந்தண தம்பதியினரான சுப்ப பட்டர், கங்காபாய் சந்தித்து குழந்தை செல்வம் வேண்டினர். சிரீரகுவர்யர் அவர்களுக்கு குழந்தை வரம் அருள்வதாகவும் ஆனால் பிறக்கும் குழந்தையை மடத்திற்காக தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். புத்திரப் பாக்கியத்திற்கு ஏங்கிய அவர்களும் உறுதியளித்தனர். வெகு விரைவிலேயே கங்காபாய் கருவுற்று, குழந்தை பிறக்கும் சமயம் வந்தது. மகானின் உத்தரவின் படி குழந்தை பிறந்தவுடன் தரையில் படாமல் தங்கத்தட்டில் ஏந்தி, மடத்திற்கு எடுத்து வந்து இராமச்சந்திரன் என பெயர் சூட்டப்பட்டு இறைவன் சிரீராமர் சிலைக்கு அபிசேகம் செய்த பால் குழந்தைக்கு கொடுக்கப்பட்டது.
சன்னியாசம் ஏற்றல்
தொகுஇராமச்சந்திரனுக்கு ஏழு வயதில் உபநயனம் தரித்து, எட்டு வயதில் சன்னியாசம் வழங்கப்பட்டு சிரீ ரகூத்தம தீர்த்தர் என்ற பெயர் சூட்டப்பட்டது. சிறுவயதிலேயே வேதம், உபநிடதங்கள் எல்லாம் கற்றுத் தேர்ந்தார்.
உத்திராதி மடத்தின் அதிபதியாதல்
தொகுரகூத்தம தீர்த்தரின் குரு, சிரீரகுவர்ய தீர்த்தர் இறைவனடி சேர்ந்ததும், மடத்தின் 14ஆவது அதிபதியானார். பல நூல்களை இயற்றினார்.
மணம்பூண்டியில் பிருந்தாவனம் அமைத்தல்
தொகுதன் பணிகளை முடித்ததாக கருதிய ரகூத்தம தீர்த்தர், இறுதியாக பஞ்ச கிருட்டிண தலங்களில் ஒன்றான திருக்கோவிலூர் நகரின் தென்பெண்ணை நதிக்கரையில் உள்ள மணம்பூண்டி என்ற இடத்தில் பிருந்தாவனம் அமைத்தார். கிபி 1595 வைகுண்ட ஏகாதசி அன்று சீவசமாதி அடைந்தார்.
பிருந்தாவனத்தின் சிறப்புகள்
தொகுதமிழகம், கருநாடகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து எண்ணற்றவர்கள் வந்து வணங்கி, சுவாமிகளின் ஆசியை பெற்று செல்கின்றனர். ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதேசி சமயத்தில் நான்கு நாட்களுக்கு ஆராதனை விழா சிறப்பாக நடைபெறுகின்றது.[2]
தற்போது இந்த சிரீஉத்திராதி மடத்தின் 42ஆவது பீடாதீபதியாக சிரீ சத்யாத்ம தீர்த்த சுவாமிகள் இருந்து வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.uttaradimath.org
- ↑ "ஆராதனை விழா". பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.