சுவரஜதி
(ஸ்வரஜதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுவரஜதி (ஸ்வரஜதி) அப்பியாச கானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் ஒன்றாகும். ஜதிகள் என்பது சொற்கட்டுக்கள். ஸ்வரஜதிகளில் ஸ்வரங்களுக்குரிய சாகித்தியங்களும் ஜதி அமைப்பில் அமைந்துள்ளதால் ஸ்வரஜதி எனப் பெயர் பெறுகிறது.
அங்கங்களும், சாகித்தியமும்
தொகுஇதற்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்க வித்தியாசங்கள் உண்டு. பல சரணங்களை உடையது. அனுபல்லவி இடம் பெறாத ஸ்வரஜதிகளும் உண்டு. இதன் சாகித்தியம் தெய்வத் துதியாக அல்லது, சிருங்கார சாகித்தியமாக அல்லது, பெரியோர்களைப் பற்றியதாக அமைந்திருக்கும். ஸ்வரஜதியில் சாகித்தியம் மட்டுமே பாடப் படும்.
சியாமசாஸ்திரிகளின் ஸ்வரஜதிகள் சபாகானத்திற்கும் ஏற்றவை. இது நாட்டியத்திற்கு உகந்த உருப்படியாகும். நாட்டியத்திற்காக ஏற்பட்ட ஸ்வரஜதிகளில் ஆங்காங்கே ஜதிகள் காணப்படும்.
சில ஸ்வரஜதிகள்
தொகு- ஸாம்பசிவாயனவே - கமாஸ்
- ராவேமே மகுவ - ஆனந்தபைரவி
- காமாக்ஷிநீபதயுக - யதுகுல காம்போஜி
- பன்னக சயனனே - காம்போதி
என்னும் ஸ்வரஜதிகள் பிரபலமானவை.