ஹங்கு மாவட்டம்

ஹங்கு மாவட்டம் (Hangu District) (பஷ்தூ: هنګو ولسوالۍ, உருது: ضلع ہنگو), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ஹங்கு நகரம் ஆகும். ஹங்கு நகரம், மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு தென்கிழக்கில் 111 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஹங்கு மாவட்டம்
ضلع ہنگو
மாவட்டம்
மீரான்சாய் சமவெளி
மேல்:நவிதாண்டு சமவெளி
கீழ்; தால் காம்பத் மசூதி
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஹங்கு மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஹங்கு மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்ஹங்கு நகரம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்1,097 km2 (424 sq mi)
மக்கள்தொகை (2017)[1]
 • மொத்தம்518,811
 • அடர்த்தி470/km2 (1,200/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
தாலுகாக்கள்2
இணையதளம்hangu.kp.gov.pk

மக்கள் தொகை பரம்பல் தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 5,18,811 ஆகும். அதில் ஆண்கள் 2,49,044 மற்றும் பெண்கள் 2,69,732 உள்ளனர். எழுத்தறிவு 43.59% கொண்டுள்ளது. 80.24% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 933 பேர் மட்டுமே உள்ளனர். 98.95% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர்.[1]

மாவட்ட நிர்வாகம் தொகு

இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டது. அவைகள்:

  1. ஹங்கு தாலுகா
  2. தால் தாலுகா

மக்கள் பிரதிநிதிகள் தொகு

இம்மாவட்டம் ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்ற தொகுதியும்,[2] கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹங்கு_மாவட்டம்&oldid=3611390" இருந்து மீள்விக்கப்பட்டது