ஹமாத் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஹமாத் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hamad International Airport) கத்தாரில் உள்ள ஒரே பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். கத்தாரின் தேசிய விமானசேவை நிறுவனமான கத்தார் ஏர்வேஸின் தாயகம் ஆகும். அதன் தலைநகரான தோஹாவின் தெற்கே இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
ஹமாத் பன்னாட்டு விமான நிலையம் مطار حمد الدولي Maṭār Ḥamad al-Duwalī | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
உரிமையாளர் | கத்தார் சிவில் விமான போக்குவரத்து துறை | ||||||||||||||
இயக்குனர் | கத்தார் ஏர்வேஸ் | ||||||||||||||
சேவை புரிவது | கத்தார் | ||||||||||||||
அமைவிடம் | தோகா, கத்தார் | ||||||||||||||
திறக்கப்பட்டது | 30 ஏப்ரல் 2014 | ||||||||||||||
மையம் | |||||||||||||||
உயரம் AMSL | 4 m / 13 அடி | ||||||||||||||
ஆள்கூறுகள் | 25°16′23″N 51°36′29″E / 25.27306°N 51.60806°E | ||||||||||||||
இணையத்தளம் | dohahamadairport.com | ||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2019) | |||||||||||||||
| |||||||||||||||
விமான சேவை துவக்கம்
தொகுஇவ்விமான நிலையம் துவங்குவதற்கு முன் தோஹா சர்வதேச விமான நிலையம் கத்தாரின் முதன்மை விமான நிலையமாக இருந்தது. முன்னர் நியூ தோஹா சர்வதேச விமான நிலையம் (NDIA) என அறியப்பட்ட ஹமாத் சர்வதேச விமான நிலையம் முதலில் 2008 இல் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான தாமதங்களுக்குப் பிறகு, இறுதியாக 30 ஏப்ரல் 2014 அன்று சம்பிரதாயமான கத்தார் ஏர்வேஸ் விமானம் அருகிலுள்ள தோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்து தரையிறங்கியது.
பெயர் சூட்டல்
தொகுகத்தார் ஏர்வேஸ் மற்றும் அனைத்து பிற விமான நிறுவனங்களும் 27 மே 2014 அன்று புதிய விமான நிலையத்திற்கு முறையாக இடம் பெயர்ந்தன. இந்த விமான நிலையத்திற்கு கத்தாரின் முந்தைய அமீரான ஹமாத் பின் கலீஃபா அல் தானியின் பெயர் சூட்டப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Qatar's Gateway achieved 12.44% increase in passenger numbers in 2019 compared to previous year". Hamad International Airport. Archived from the original on 16 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 21 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "OTHH: Hamad International Airport". SkyVector. 27 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2 March 2020.
- ↑ "கத்தார் விமான நிலையத்திற்கு கத்தாரின் முந்தைய அமீரான ஹமாத் பின் கலீஃபா அல் தானியின் பெயர் சூட்டப்பட்டது". dohaairport.com. Archived from the original on 29 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-26.