ஹரோல்ட் லாயிட்
சர். ஹரோல்ட் கிளேடன் லாயிட் (Harold Clayton Lloyd Sr. (ஏப்ரல் 20, 1893 – மார்ச்8, 1971) என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த நடிகர்,நகைச்சுவயாளர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் சண்டை நிகழ்த்துநர் ஆவார். இவர் ஊமைப்படங்களில் நகைச்சுவையாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1]
ஹரோல்ட் லாயிட் | |
---|---|
1924 இல் லாயிட் | |
பிறப்பு | பர்சார்ட், நெப்ராஸ்கா | ஏப்ரல் 20, 1893
இறப்பு | மார்ச்சு 8, 1971 பெவர்லிஹில்ஸ் | (அகவை 77)
பணி | நடிகர்,நகைச்சுவயாளர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் சண்டை நிகழ்த்துநர் |
செயற்பாட்டுக் காலம் | 1913–1963 |
வாழ்க்கைத் துணை | மைட்ரெட் (தி. 1923; இற. 1969) |
பிள்ளைகள் | 3, |
ஊமைப்பட காலங்களில் சிறந்து விளங்கிய சார்லி சாப்ளின் மற்றும் பஸ்டர் கீடன் ஆகியோருடன் இணைந்து அறியப்படுகிறார். இவர் 1914 முதல் 1947 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஊமைப் படங்கள் மற்றும் பேசும்படங்களில் நடித்துள்ளார்.இவர் கிளாசஸ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[2][3]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஹரோல்ட் கிளேடன் லாயிட் ஏப்ரல் 20, 1983 இல் பர்சார்ட், நெப்ராஸ்காவில் பிறந்தார். இவரின் தந்தை ஜேம்ஸ் தர்சி லாயிட் தாய் சாரா எலிசபெத் ஃபிரேசர் ஆவர். இவரின் மூதாதையர்கள் வேல்சை சேர்ந்தவர்கள் ஆவர். [4]இவரின் தந்தையின் சில தொழில்கள் தோல்வியடைந்தது. இதனால் இவரின் பெற்றோர்கள் 1910 ஆம் ஆண்டில் திருமண முறிவு பெற்றனர். பின் தனது தந்தையுடன் சான் டியேகோ , கலிபோர்னியாவில் குடியேறினர். தனது சிறுவயது முதலே நாடகத் திரைப்படங்களில் நடித்து வந்தார். 1912 ஆம் ஆண்டில் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார்.
பேசும் குறும்படங்கள் மற்றும் அம்சங்கள்
லாயிட் தாமஸ் எடிசனின் அசைவு படங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தி ஓல்ட் மாங்க்ஸ் டேல் தயாரிப்பில் யாக்கி இந்தியன் எனும் திரைப்படத்தில் முதல் முதலாகத் தோன்றினார். தனது 20 வயதில், லாயிட் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தார். யுனிவர்சல் ஸ்டுடியோஸால் அவர் பணியமர்த்தப்பட்டார். பின்பு திரைப்படத் தயாரிப்பாளர் ஹால் ரோச்சுடன் நட்பு கொண்டார். லாயிட் 1913 ஆம் ஆண்டில் தனது சொந்த நிறுவனத்தை ரோச்சுடன் இணைந்து தொடங்கினார் .
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுலாயிட் தனது மில்ட்ரெட் டேவிஸை என்பவரை பிப்ரவரி 10, 1923 அன்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மணந்தார். இந்தத் தம்பதினருக்கு குளோரியா லாயிட் (1923–2012) மற்றும் ஹரோல்ட் கிளேட்டன் லாயிட் ஜூனியர் (1931-1971) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர்: அவர்கள் செப்டம்பர் 1930 இல் குளோரியா ஃப்ரீமேன் (1924-1986) என்பவரைத் தத்து எடுத்தனர். அவருக்கு இவர்கள் மார்ஜோரி எலிசபெத் லாயிட் என்று பெயர் மாற்றினர். ஆனால் அவர் பெரும்பாலும் பெக்கி என்று அழைக்கப்பட்டார். லாயிட் டேவிஸை நடிப்பு வாழ்க்கையைத் தொடர வேண்டாம் எனக் கூறினார். லாயிட் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1969 ஆம் ஆண்டில் டேவிஸ் மாரடைப்பால் இறந்தார். அவரது உண்மையான வயது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் ஒரு குடும்ப செய்தித் தொடர்பாளர் அப்போது அவருக்கு 66 வயது என்று சுட்டிக்காட்டினார். ஹரோல்ட் ஜூனியர் தனது தந்தைக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு பக்கவாதத்தினால் இறந்தார்.
லாயிட்ஸின் பெவர்லி ஹில்ஸ் க்ரீனாக்ரெஸ் எனும் இல்லமானது 1926-1929 ஆம் ஆண்டில் 44 அறைகள், 26 குளியலறைகள், 12 நீரூற்றுகள், 12 தோட்டங்கள் மற்றும் ஒன்பது துளைகள் கொண்ட கோல்ஃப் மைதானத்துடன் கட்டப்பட்டது. 1943 ஆம் ஆண்டில் இவரது திரைப்பட பெட்டகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அதன் மதிப்பு 2 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. லாயிட் அவரது மனைவியால் காப்பாற்றப்பட்டார்.இவர் திரைப்படப் பெட்டி அறையில் நினைவிழந்து இருந்த சமயத்தில் டேவிஸ் இவரை பாதுகாப்பு அறைக்குள் இழுத்துச் சென்று காப்பற்றினார். லாயிட் விருப்பத்திபேரில் திரைப்பட வரலாற்றின் அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக லாயிட் குடும்பம் 1975 ஆம் ஆண்டில் அந்த வீட்டை விற்றது.
அந்த வீட்டின் மைதானம் பிரிக்கப்பட்டது, ஆனால் வீட்டின் பிரதான பகுதிகள் மற்றும் பிரதான தோட்டங்கள் ஆகிய பிரிக்கப்படாமல் இருந்தது. அவை பெரும்பாலும் குடிமை நிதி திரட்டும் நிகழ்வுகளுக்காகவும், படப்பிடிப்பின் இருப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகின்றன, இது வெஸ்ட் வேர்ல்ட் மற்றும் தி லவ்ட் ஒன் போன்ற படங்கள் இங்கு படமாக்கப்பட்டன. இந்த வீடு தேசிய வரலாற்று இடங்களின் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது .
மரியாதைகள்1503 வைன் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் ஒரு நட்சத்திரத்துடன் சவுப் படங்களுக்கு பங்களித்ததற்காக லாயிட் 1960 ஆம் ஆண்டில் கவுரவிக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டில், கேலிச்சித்திர நிபுணர் அல் ஹிர்ஷ்பீல்ட் வடிவமைத்த யுனைடெட் ஸ்டேட்ஸ் தபால்தலையில் அவரது படத்துடன் கவுரவிக்கப்பட்டார் .1953 ஆம் ஆண்டில், லாயிட் ஒரு "மாஸ்டர் நகைச்சுவை நடிகர் மற்றும் நல்ல குடிமகன்" என்பதற்காக அகாதமி விருதைப் பெற்றார். நெப்ராஸ்காவின் புர்ச்சார்ட் நகரில் லாயிட் பிறந்த இடம் ஒரு அருங்காட்சியகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இறப்பு
தொகுலாயிட் மார்ச் 8, 1971 இல் ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோயினால் கலிபோர்னியாவில் உள்ள பிவர்லிஹில்சில் உள்ள தனது வீட்டில் காலமானார். [5][6][7]
சான்றுகள்
தொகு- ↑ Obituary Variety, March 10, 1971, page 55.
- ↑ Austerlitz, Saul (2010). Another Fine Mess: A History of American Film Comedy. Chicago Review Press. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1569767637.
- ↑ D'Agostino Lloyd, Annette. "Why Harold Lloyd Is Important". haroldlloyd.com. Archived from the original on ஜூலை 1, 2015. பார்க்கப்பட்ட நாள் November 12, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Comedy in the 1920's - 1950's". alphadragondesign.com. Archived from the original on ஜூலை 24, 2012. பார்க்கப்பட்ட நாள் April 13, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Died". Time. March 22, 1971 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 21, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081221204137/http://www.time.com/time/magazine/article/0,9171,904932,00.html. "Harold Lloyd, 77, comedian whose screen image of horn-rimmed incompetence made him Hollywood's highest-paid star in the 1920s; of cancer; in Hollywood. He usually played a feckless Mr. Average who triumphed over misfortune. 'My character represented the white-collar middle class that felt frustrated but was always fighting to overcome its shortcomings,' he once explained. Lloyd usually did his own stunt work, as in Safety Last (1923), in which he dangled from a clock high above the street; he was protected only by a wooden platform two floors below."
- ↑ "Harold Lloyd, Bespectacled Film Comic, Dies of Cancer at 77". Los Angeles Times. March 9, 1971. https://pqasb.pqarchiver.com/latimes/access/601315582.html. "Comedian Harold Lloyd, 77, who bumbled through more than 300 films as a bespectacled victim of life's difficulties, died of cancer Monday at his Beverly Hills home."[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Illson, Murray (March 9, 1971). "Horn-Rims His Trademark; Harold Lloyd, Screen Comedian, Dies at 77". த நியூயார்க் டைம்ஸ். https://select.nytimes.com/gst/abstract.html?res=F00A14F93A55127B93CBA91788D85F458785F9. "A pair of inexpensive, horn-rimmed eyeglass frames without lenses, the shy expression of a somewhat bewildered adolescent and a single-track ambition made Harold Clayton Lloyd the highest-paid screen actor in Hollywood's golden age of the nineteen twenties."