ஹாட் பொட்டேடோ

ஹாட் பொட்டேடோ (Hot Potatoes) என்பது இணைய தளத்தில் ஆடும் ஓர் விளையாட்டு மென்பொருள் ஆகும். இது கற்றலில் பயன்தரக்கூடியது. மாணவர்களுக்குத் தேவையான ஆறு வகை மதிப்பீட்டுப் பயிற்சிகளை ஹாட்பொட்டேடோ என்கிற மென்பொருள் அளிக்கிறது. பலவுள் தெரிவு, குறுவினா, பொருத்துக வகை வினாக்கள், புதிர்விளையாட்டு, வாக்கியத்தை இடம் மாற்றுதல், கோடிட்ட இடத்தை நிரப்புதல் போன்ற ஆறு வகையான விளையாட்டுகளை நாமே உருவாக்கும் முறையில் செயலிகள் அமைந்துள்ளன. ஆறாவது செயலி மேற்கண்ட அணைத்து விளையாட்டுகளையும் உள்ளடக்கியது.

இந்த மென்பொருளானது விக்டோரியா பல்கலைக்கழகத்தின் மனிதவள கணினி மற்றும் ஊடக மையத்தில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்டது. 1998இல், பெல்ஜியத்தில் உள்ள லியுவென்னில் நடந்த, யுரோகால் மாநாட்டில், இம்மென்பொருளின் 2.0 வரிசை வெளியிடப்பட்டது.[1] இம்மென்பொருள்மீதான வணிகத்தை ஹாஃப்-பேக்ட் மென்பொருள் அமைப்பு (Half-Baked Software Inc.) நிர்வகிக்கிறது. அக்டோபர் 2009இலிருந்து இந்த மென்பொருள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இலவசமாகத் தரப்படுகிறது. ஆனால் இது திறமூலம் இல்லை. விண்டோசு இயங்கு தளத்தில் செயல்படக்கூடிய இந்த மென்பொருளை யாவா மூலமும் நிறுவலாம். தற்பொழுது, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், இம்மென்பொருளை மாணவர்களுக்குப் பயன்படுத்த, தமிழ்நாடு மாநிலக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தது. அதன்படி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இம்மென்பொருளைப் பயன்படுத்திவருகின்றனர்.[சான்று தேவை]

சான்றுகள் தொகு

  1. Stewart Arneil and Martin Holmes (1998). "Hot Potatoes: Free Tools for Creating Interactive Language Exercises for the World Wide Web". Presentation, EuroCALL 1998 conference, Leuven. September 1998.

மேற்கோள் தொகு

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாட்_பொட்டேடோ&oldid=3688816" இலிருந்து மீள்விக்கப்பட்டது