ஹிகாரு நகமுரா

 

ஹிகாரு நகமுரா
நாடுஐக்கிய அமெரிக்கா
பிறப்புதிசம்பர் 9, 1987 (1987-12-09) (அகவை 36)
ஹிரகடா, ஒசாக்கா மாகாணம், சப்பான்
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (2003)
பிடே தரவுகோள்2736 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2816 (அக்டோபர் 2015)
தரவரிசைNo. 19 (நவம்பர் 2021)
உச்சத் தரவரிசைNo. 2 (அக்டோபர் 2015)
ஹிகாரு நகமுரா
சப்பானியப் பெயர்
Kanji 中村 光
ஹிரகனா எழுத்துக்கள் なかむら ひかる
டுவிட்ச் தகவல்
ஓடை(கள்)
செயலில் இருந்த ஆண்டுகள்2015–தற்போதுவரை
பின்தொடர்பவர்கள்1.3 மில்லியன்
மொத்தப் பார்வைகள்123.6 மில்லியன்
நவம்பர் 17, 2021 அன்று தகவமைக்கப் பட்டது.
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடம்
செயலில் இருந்த ஆண்டுகள்2017–தற்போதுவரை
சந்தாதாரர்கள்1.1 மில்லியன்
மொத்தப் பார்வைகள்249 மில்லியன்
100,000 சந்தாதாரர்கள் 2020
1,000,000 சந்தாதாரர்கள் 2021

நவம்பர் 17, 2021 அன்று தகவமைக்கப்பட்டது

ஹிகாரு நாகமுரா (பிறப்பு: டிசம்பர் 9, 1987) ஒரு அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் இணைய ஓடையாளர் ஆவார். ஒரு சதுரங்க மேதையான இவர், தனது 15 வயதில் (15 வயது, 79 நாட்கள்) கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். இவர் இப்பட்டதைப் பெற்ற போது இச்சாதனையை செய்த மிக இளைய அமெரிக்கராக இருந்தார். இவர் அமெரிக்க சதுரங்க வெற்றி வீரர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். [1] இவர் டாடா ஸ்டீல் சதுரங்க போட்டியின் குழு 'A' இன் 2011 பதிப்பை வென்றார். மேலும் ஐந்து சதுரங்க ஒலிம்பியாட்களில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு குழு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு அணி வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

ஆகஸ்ட் 2015 இல், அவரது உச்ச யூ.எசு.சி.எஃப் மதிப்பீடான 2900ஐ அடைந்தார்.[2] அக்டோபர் 2015 இல், அவர் தனது உச்ச FIDE மதிப்பான 2816 ஐ அடைந்தார். இதன் மூலம் உலகத்தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மே 2014 இல், பிடே அதிகாரப்பூர்வ ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க மதிப்பீடுகளை வெளியிடத் தொடங்கியபோது, நகமுரா இரண்டு பட்டியல்களிலும் உலகின் முதல் இடத்தைப் பிடித்தார். தரவரிசையின் இரண்டாவது வெளியீட்டில் அவரை மேக்னசு கார்ல்சன் முறியடித்தார் [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nakamura, Krush Crowned 2015 U.S. Chess Champions". Chessdom. April 13, 2015.
  2. "USCF MSA - member details (Rating supplement history)", United States Chess Federation, August 2015, பார்க்கப்பட்ட நாள் 2015-10-04
  3. "FIDE Publishes Rapid and Blitz Rating Lists. Nakamura Heads Both". Chess-News. Archived from the original on மே 19, 2014. பார்க்கப்பட்ட நாள் June 14, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிகாரு_நகமுரா&oldid=3578945" இலிருந்து மீள்விக்கப்பட்டது