ஹிசார் மான் பூங்கா

வனவிலங்கு சரணாலயம்

ஹிசார் மான் பூங்கா (Deer Park, Hisar), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹிசார் நகருக்கு அருகில் உள்ளது. இது 19 எக்டேர்கள் (48 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் மான்களுக்குத் தீவனம் உற்பத்தி செய்ய 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. [1]

மான் பூங்கா
வனவிலங்கு பூங்கா
புல்வாய் ஆண் & பெண் மான்
புல்வாய் ஆண் & பெண் மான்
மான் பூங்கா is located in அரியானா
மான் பூங்கா
மான் பூங்கா
இந்தியாவில் அரியானா அமைவிடம்
மான் பூங்கா is located in இந்தியா
மான் பூங்கா
மான் பூங்கா
மான் பூங்கா (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°11′27″N 75°45′32″E / 29.19083°N 75.75889°E / 29.19083; 75.75889
இந்தியா India
மாநிலம்அரியானா
மாவட்டம்ஹிசார் மாவட்டம்
தோற்றுவித்தவர்அரியானா, வனத்துறை
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்haryanaforest.gov.in/DeerParkHisar.aspx

இந்த மான் பூங்கா ஹிசாரில், ஹிசார் விமான மற்றும் நீலப்பறவை ஏரியினை அடுத்து ஹிசார்-தன்சு சாலையில் உள்ளது. மான் பூங்கா அருகில் ஹிசார் சத்வர் வாத்திகா மூலிகை பூங்கா அமைந்துள்ளது. இந்த இரு பூங்காக்களையும் அரியான அரசின் வனத்துறை நிர்வகிக்கின்றது.

வரலாறு தொகு

அரியானா அரசாங்கத்தின் வனத்துறையால் 1985ஆம் ஆண்டு மான் பூங்கா நிறுவப்பட்டது.[1] பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், மான்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் இந்த பூங்கா தோற்றுவிக்கப்பட்டது. அரியானாவில் உள்ள உயிரியல் பூங்கா மற்றும் மான் பூங்காக்களில் இது மிகவும் பழமையானது.

மான் தொகு

பூங்காவில் காணப்படும் மான்களில் 20 புல்வாய், 16 புள்ளிமான் மற்றும் 6 கடமான் ஆகியவை அடங்கும்.[1] மான் பூங்காவில் காணப்படும் சில உயிரினங்களின் படங்கள் கீழே உள்ளன (பிரதிநிதித்துவத்திற்கான படங்கள் மட்டுமே):

காட்சி மாடம் தொகு

அருகிலுள்ள பிற இடங்கள் தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Deer Park, Hisar". Haryana Forest Department. Archived from the original on 13 May 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிசார்_மான்_பூங்கா&oldid=3098352" இலிருந்து மீள்விக்கப்பட்டது