ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப்பொருளாகும். இஸ்லாமிய வழக்கத்தில் ஹிஜ்ரத் ஒரு குறிப்பிட்ட தியாகத்தினை குறிக்கும் சொல்லாகும்.

இஸ்லாமிய கொள்கையினை ஓர்  ஊரில் அல்லது ஒரு நாட்டில் பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது, கொண்ட கொள்கையை காத்துக் கொள்வதற்காக பிறந்த மண், சொத்து, சுகம் , சொந்தம், பந்தம் என அனைத்தையும் துறந்துவிட்டு இஸ்லாத்தினை கடைபிடிப்பதற்கு ஏதுவான இடத்திற்குச் செல்வது ஹிஜ்ரத் எனப்படும்.

அபீசீனியா தொகு

நபிகள் நாயகம் காலத்தில் மக்காவில் இஸ்லாத்தினை பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பொழுது, சொந்த நாட்டினை துறந்து சிலர் அபீசீனியாவிற்கு (தற்போதைய எத்தியோப்பியா) ஹிஜ்ரத் செய்தனர். [1]

மதீனா தொகு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவருடைய தோழர் அபூபக்கர் அவர்களும் மக்காவிலிருந்து , மதீனா நகருக்கு ஹிஜ்ரா செய்தார்கள். மதீனா நகருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்ட அந்த ஆண்டிலிருந்து இசுலாமிய நாட்காட்டி எனப்படும் இஸ்லாமிய ஆண்டு ஆரம்பமாகிறது. அப்பொழுது அவர்களுக்கு வயது 53 ஆகும்.[2][3]

ஹிஜ்ரத் செய்த நபித்தோழர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிஜ்ரத்&oldid=3385528" இருந்து மீள்விக்கப்பட்டது