ஹிப்போலிதை

கிரேக்கத் தொன்மவியலில் குறிப்பிடப்படும் ஹிப்போலிதை (Hippolyta, அல்லது Hippolyte, கிரேக்கம்: Ἱππολύτη என்பவர் எரெசு மற்றும் ஓட்ரெராவின் மகளும், அந்தியோப் மற்றும் மெலனிப்பே ஆகியோரின் சகோதரியும், அமெசான்கள்களின் அரசியும் ஆவார். இவள் கண்ணியத்தின் சின்னமாக, தன் தந்தையால் வழங்கப்பட்ட ஒட்டியாணத்தை அணிந்தாள்.[1] ஹெராக்கிள்ஸ் மற்றும் தீசஸ் இருவர் குறித்த தொன்மக் கதைகளிலும் ஹிப்போலிதை குறிப்புகள் குறிப்பிடத்தகதாக உள்ளன. இவளைப் பற்றிய பலவகைப்பட்ட தொன்மக் கதைகள் உள்ளன. எனவே அவை பல வேறுபட்ட பெண்களைப் பற்றியதாக இருக்கலாம். [2] ஹிப்போலிதை என்ற பெயரானது கிரேக்க வேர்களில் "குதிரை" மற்றும் "தளர்வாக விடுங்கள்" என்று பொருள்படும். [3]

ஹிப்போலிதை
நிக்கோலஸ் நோஃபர் வரைந்த ஓவியமான ஹிப்போலிதையிடம்ஹெராக்ளிசு ஒட்டியானத்தைப் பெறுதல்

புனைவுகள்

தொகு

ஹெராக்கிள்ஸின் ஒன்பதாவது பணி

தொகு

ஹெராக்கிள்ஸின் தொன்மக் கதையில், ஹிப்போலிதையின் ஒட்டியாணத்தைக் (ζωστὴρ ζωστὴρ) கொண்டுவருதல் என்பது அவருக்கான ஒன்பதாவது பணி கடமையாக்கபட்டது. யூரிஸ்தியஸ் மன்னரின் மகளான அட்மேட்டுக்காக அதைக் கொண்டுவர அவர் அனுப்பப்பட்டார். [4] [5] [6] [7] [8] [9] [10] தொன்மக் கதையின் பெரும்பாலான பதிப்புகள் ஹிப்போலிதை ஹெராக்கிள்சைக் கவர்ந்ததைக் குறிக்கிறது. இவளும் மறுப்பின்றி தன்னுடைய இடையணியை அவருக்கு கொடுத்தாள். ஒருசமயம் இவள் அவருடைய கப்பலுக்குச் சென்றிருந்தாள். அச்சமயம், சூடோ-அப்பல்லோடோரஸின் கூற்றுப்படி, எரா தெய்வம் சூழ்ச்சியல் ஈடுபட்டு தன்னை அமேசான்களில் ஒருத்தியாகக் காட்டிக்கொண்டு, ஹெராக்கிள்சும் அவரது குழுவினரும் தங்கள் அரசியைக் கடத்திச் செல்கிறார்கள் என்று வதந்தியை பரப்பினாள். இதனால் கோபமுற்ற அமேசான்கள் கப்பலைத் தாக்கினர். அதைத் தொடர்ந்து நடந்த சண்டையில், ஹெராக்கிள்ஸ் ஹிப்போலிட்டாவைக் கொன்று, ஒட்டியாணத்தை எடுத்துக்கொண்டு, புறப்பட்டுச் சென்றார்.

குறிப்புகள்

தொகு
  1. Dictionary of Greek and Roman Biography and Mythology.
  2. Robert Graves (1955) The Greek Myths
  3. "hippolytus - Origin and meaning of hippolytus by Online Etymology Dictionary". www.etymonline.com.
  4. Euripides, Herakles, 408 sqq.
  5. Apollonius Rhodius, Argonautica, II. 777 sqq. and 966 sqq.
  6. Diodorus Siculus, Bibliotheca Historica, IV. 16
  7. Ps.-Apollodorus, Bibliotheke, II. 5. 9
  8. Pausanias, Hellados Periegesis, V. 10. 9
  9. Quintus Smyrnaeus, Posthomerica, VI. 240 sqq.
  10. Hyginus, Fabulae, 30

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிப்போலிதை&oldid=3067697" இலிருந்து மீள்விக்கப்பட்டது