ஹியுன் பின்

தென் கொரியா நடிகர்

ஹியூன் பின் என்று அழைக்கப்படும் கிம் டே-பியுங்[1] (ஆங்கில மொழி: Hyun Bin, 현빈) (பிறப்பு: 25 செப்டம்பர் 1982) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு மை நேம் இஸ் கிம் சாம்-சூன் என்ற காதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக பரவலான அங்கீகாரம் பெற்றார். அப்போதிருந்து, காதல் கற்பனை நாடகமான சீக்ரட் கார்டன் (2010-2011), மெமரீஸ் ஆஃப் தி அல்ஹம்ப்ரா (2018-2019) மற்றும் காதல் நாடகமான கிராஷ் லேண்டிங் ஆன் யூ (2019–2019) உள்ளிட்ட பிற வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் முன்னணி பாத்திரங்களில் தோன்றினார்.

ஹியூன் பின்
Hyun Bin
பிறப்புகிம் டே-ப்யுங்
செப்டம்பர் 25, 1982 (1982-09-25) (அகவை 41)
சியோல்
தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்1

இவரின் வெற்றி சர்வதேச அளவில் அவரை ஒரு சிறந்த கொரியன் நட்சத்திரமாக நிலைநிறுத்தியது. தென் கொரியாவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டில் வெளியான 'லேட் ஆட்டும்' என்ற படத்தில் நடித்ததற்காக விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார். இவரது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட வாழ்க்கை முழுவதும், அவர் பேக்சாங் கலை விருதுகளில் ஐந்து உட்பட பல சின்னமான விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார், மேலும் 47 வது பேக்சாங் கலை விருதுகளில் தொலைக்காட்சிக்கான கிராண்ட் பரிசு உட்பட அவரது நடிப்பு அங்கீகாரத்திற்காக பல்வேறு பாராட்டுகளைப் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஹியூன் 25 செப்டம்பர் 1982 ஆம் ஆண்டில் சியோலில் பிறந்து வளர்ந்தார், இவருக்கு ஒரு மூத்த சகோதரர் உண்டு. அவர் யங்டாங் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். மற்றும் சுங்-ஆங் பல்கலைக்கழகத்தில் படித்தார், அங்கு அவர் 2004 இல் நாடகக் கல்வியில் தேர்ச்சி பெற்றார்.[2]பின்னர் 2009 இல், அதே பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]

தொழில்

தொகு

இவர் 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'பாடிகார்ட்' என்ற தொடரில் துணை நடிகராக அறிமுகமானார்.[4] அதே ஆண்டில் ஒளிபரப்பான 'நான்ஸ்டாப் 4' என்ற நகைசுசுவை தொடரில் நடித்தார். 2004ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'அயர்லாந்து' என்ற காதல் தொடரில் இரண்டாவது நாயகனகாவும் அதே ஆண்டில் வெளியான 'ஸ்பின் கிக்' என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

இவர் முதல் முதலில் கதாநாயகனாக நடித்த தொடர் 'மை லவ்லி சாம் சூன்' என்ற நகைச்சுவை காதல் தொடர் ஆகும், இந்த தொடர் 2005 ஆம் ஆண்டு முன்குவா ஒலிபரப்பு கார்ப்பரேஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 37% சாதாரண பார்வையாளர்கள் எண்ணிக்கையை பெற்றது. இந்த தொடருக்காக சிறந்த சிறப்பு விருதும் பெற்றார். இந்த தொடருக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு 'ஒரு மில்லியனர் முதல் காதல்' என்ற திரைப்படத்திலும், அதே ஆண்டில் சினோ குயின் என்ற தொடரிலும் நடித்தார். இந்த தொடர் இவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு 'வேர்ல்ட் விந்தின்', 2009 ஆம் 'ஆண்டு பிரென்ட் அவர் லெஜண்ட்' போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டில் சீக்ரட் கார்டன் என்ற கற்பனை காதல் தொடரில் நடித்தார், இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகை நடித்தார். இந்த தொடர் மிகவும் வெற்றி பெற்றது. இந்த தொடர் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

 
சொன் யே-ஜினுடன் ஹியூன் பின்

இதை தொடர்ந்து கம் ரெயின், கம் ஷினே (2011), தி ஸ்வைண்டர்ஸ் (2017) போன்ற பல திரைப்படங்களிலும், ஹைட் ஜெகில் மீ மற்றும் (2015) போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். பின்னர் 2018 ஆம் ஆண்டில், நடிகை பார்க் ஷின்-ஹேயுடன் இணைந்து 'மெமோரிஸ் ஆப் தி ஆலம்பரா' என்ற கற்பனையான திரில்லர் நாடகத்தில் நடித்துள்ளார்.[5] இந்தத் தொடர் கேபிள் தொலைக்காட்சி வரலாற்றில் மிக உயர்ந்த தரமதிப்பீடு பெற்ற கொரிய நாடகங்களில் ஒன்றாகும், மேலும் இவரது பாத்திரத்தை அலட்சியமாக ஆனால் நகைச்சுவையாக சித்தரித்ததற்காக ஹியூன் பாராட்டப்பட்டார்.

இவர் 2018 ஆம் ஆண்டில், நடிகை சொன் யி-ஜின் உடன் இணைந்து 'தி நெகோஷியேஷன்' என்ற படத்திலும் 2019 ஆம் ஆண்டு வெளியான 'கிராஷ் லேண்டிங் ஆன் யூ' என்ற தொடரிலும் நடித்துள்ளார்.[6] இந்த தொடரில் இவர் ஒரு வட கொரிய இராணுவ கேப்டனாகநடித்தார். இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் கேபிள் தொலைக்காட்சி வரலாற்றில் மூன்றாவது-அதிக தரமதிப்பீடு பெற்ற கொரிய நாடகமாகவும்,[7] மேலும் ஹியூன் அவரது பலதரப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் நடிப்புத் திறன்களுக்காகப் பாராட்டப்பட்டார்.

கட்டாய இராணுவ சேவை

தொகு

இவர் மார்ச்சு 7, 2011 இல், தனது 21 மாத கட்டாய இராணுவ சேவையை மரைன் கார்ப்ஸில் ஒரு சிப்பாயாகத் தொடங்கினார். அவர் மரைன் கார்ப்ஸில் பணியாற்ற முன்வந்தார், இது கொரிய இராணுவத்தின் கடினமான பிரிவாகக் கூறப்படுகிறது, அவர் கடற்படையினர் மீது நல்ல அபிப்ராயத்தைக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கடற்படையினருக்குள் நுழைவதற்கான போட்டி விகிதம் 4:1 என்ற விகிதத்தில் அதிகமாக இருந்தது, ஹியூன் முதல் 5% விண்ணப்பதாரர்களில் இடம்பிடித்தார். ஹியூன் ஒரு போர் வீரராக விண்ணப்பித்தார்.

இவரது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது கடற்படையில் சேர அவர் எடுத்த முடிவு கொரியாவிலும் வெளிநாடுகளிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.

உறவு மற்றும் திருமணம்

தொகு

சனவரி 1, 2021 அன்று, ஹியூனின் நிறுவனம் அவர் நடிகை சொன் யி-ஜின் உடன் காதல் உறவில் இருப்பதை உறுதி செய்தனர். இவர்கள் இருவரும் தி நெகோஷியேஷன் (2018) மற்றும் கிராஷ் லேண்டிங் ஆன் யூ (2019–2020) ஆகிய தொடர்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[8] பிப்ரவரி 10, 2022 அன்று, ஹியூனும் மற்றும் சொன் யி-ஜின் இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இடுகையிடப்பட்ட கடிதங்களில் நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர்.[9] அவர்கள் மார்ச்சு 31 அன்று ஒரு தனிப்பட்ட விழாவில் திருமணம் செய்து கொண்டனர், அதில் அவர்களது பெற்றோர் மற்றும் இரு குடும்பங்களின் நண்பர்கள் கலந்து கொண்டனர்.[10] ஜூன் 27 அன்று, தம்பதியரின் முதல் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர்,[11] இருவருக்கும் நவம்பர் 27, 2022 அன்று ஒரு மகன் பிறந்தது.[12]

மேற்கோள்கள்

தொகு
 1. "5 reasons to love Hyun Bin, Crash Landing's dreamy leading man". South China Morning Post (in ஆங்கிலம்). 24 September 2020. Archived from the original on October 22, 2020. பார்க்கப்பட்ட நாள் October 23, 2020.
 2. 현빈(김태평) 영화배우, 탤런트. Naver (in கொரியன்). Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் August 6, 2011.
 3. "2월 중앙대 연극영화학과 졸업 후 3월 석사과정 진학". Nocutnews (in கொரியன்). February 10, 2009. Archived from the original on February 21, 2018. பார்க்கப்பட்ட நாள் February 21, 2018.
 4. "Hyun Bin's dark (embarrassing) history? He shot a TV series only wearing a swimsuit in 2003". Star News. 24 February 2012. Archived from the original on 19 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help)CS1 maint: unfit URL (link)
 5. "Hyun Bin, Park Shin-hye Team up for 1st Time in New TV Series". The Chosun Ilbo. November 29, 2018. Archived from the original on November 29, 2018. பார்க்கப்பட்ட நாள் November 29, 2018.
 6. "Hyun Bin and Son Ye-jin Confirm Starring Roles in Park Ji-eun's "Emergency Love Landing"". Sports Donga. May 21, 2019 இம் மூலத்தில் இருந்து June 19, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190619215730/https://www.hancinema.net/hyun-bin-and-son-ye-jin-confirm-starring-roles-in-park-ji-eun-s-emergency-love-landing-129856.html. 
 7. "21.7%: 'Crash Landing on You' sets record for tvN drama". The Korea Times. February 17, 2020. Archived from the original on February 18, 2020. பார்க்கப்பட்ட நாள் February 18, 2020.
 8. [공식] 현빈♥손예진 열애 인정 "'사랑의 불시착' 종영 후 연인으로 발전" [[Official] Hyun Bin ♥ Son Ye-jin admitted to devotees "Developing as a lover after the end of 'Crash Landing of Love'"]. Seoul Economic Daily (in கொரியன்). January 1, 2021. Archived from the original on January 26, 2021. பார்க்கப்பட்ட நாள் January 1, 2021.
 9. Lee Woo-joo (February 10, 2022). "현빈♥손예진, 결혼 발표 "남은 인생을 함께 할 사람" [전문]" [Hyun Bin ♥ Son Ye-jin, Marriage Announcement "The person I will spend the rest of my life with" [Professional]]. Sports Chosun (in கொரியன்). Archived from the original on February 10, 2022. பார்க்கப்பட்ட நாள் February 10, 2022 – via Naver.
 10. Park, Seo-hyun (March 31, 2022). "현빈♥손예진, 세기의 커플 부부 됐다..영화 같은 순간[웨딩화보]" [Hyun Bin ♥ Son Ye-jin, married couple of the century..A moment like a movie [Wedding pictorial]] (in கொரியன்). Herald Pop. Archived from the original on March 31, 2022. பார்க்கப்பட்ட நாள் March 31, 2022 – via Naver.
 11. Yang Haley (June 27, 2022). "Son Ye-jin and Hyun Bin are expecting a baby". Korea JoongAng Daily. Archived from the original on June 27, 2022. பார்க்கப்பட்ட நாள் June 27, 2022 – via Naver.
 12. Hwang So-young (November 27, 2022). "현빈·손예진, 오늘(27일) 득남 "산모 아기 모두 건강"" [Hyun Bin · Son Ye-jin, today (27th), "Both mother and baby are healthy] (in கொரியன்). JTBC. Archived from the original on November 27, 2022. பார்க்கப்பட்ட நாள் November 27, 2022 – via Naver.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியுன்_பின்&oldid=3865825" இலிருந்து மீள்விக்கப்பட்டது