ஹீண்டாய் மோட்டார் குழுமம்
இயுண்டாய் மோட்டார் குழுமம் (IPA: [hjə́ːndɛ]; கொரியம்: 현대자동차그룹 Hyeondae Jadongcha Geurup; Hanja: 現代自動車그룹 Hyeondae Jadong-geo Geurupஹஞ்ஜாகொரியம்: 현대자동차그룹 Hyeondae Jadongcha Geurup; Hanja: 現代自動車그룹 Hyeondae Jadong-geo Geurup) (எளிதாக இயுண்டாய்) ஒரு தென் கொரிய பன்னாட்டு குழு நிறுவனம் சியோலை தலைமையிடமாக கொண்டுள்ளது. இது தென் கொரியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் மற்றும் 2015ல் செப்பானிய டொயட்டோ, செருமனின் வோகசுவேகன் குழுமம் மற்றும் அமெரிக்க செனரல் மோட்டர் நிறுவனங்களுக்கு பிறகு உலகின் நான்காவது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராக திகழ்கிறது. 1998ல் இந்தக் குழுமம் தென் கொரியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனம், கியா மோட்டார்ஸின் 51% பங்குகளை இயுண்டாய் மோட்டார் நிறுவனம் வாங்கியதின் மூலம் அமைக்கப்படுகிறது. திசம்பர் 31, 2013, இயுண்டாய், கியா மோட்டார்சின் 33.88%[2] பங்குகளை வைத்திருக்கிறது. இயுண்டாய் மோட்டார் குழுமம் சிக்கலான பங்கு முதலீட்டுகளை வைத்திருக்கிறது. இது சேம்சங் குழுவிற்கு பிறகு இரண்டாவது பெரிய தென்கொரிய குழும நிறுவனமாகும். இயுண்டாய் பெயரிலுள்ள மற்ற தொழிற்சாலைகள் இயுண்டாய் மோட்டார் குழு, இயுண்டாய் கனரக தொழிற்சாலைகள் குழு, இயுண்டாய் வளர்ச்சி நிறுவனம் குழு, இயுண்டாய் டிபார்ட்மெண்ட் சுடோர்கள் குழு, மற்றும் இயுண்டாய் கடல் மற்றும் தீ காப்பீடு.
Hyundai motor group global headquarters | |
வகை | Chaebol |
---|---|
நிறுவுகை | September 2000 |
தலைமையகம் | சியோல், தென்கொரியா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | Chung Mong-koo (Chairman and CEO) Chung Eui-sun (Vice Chairman) |
தொழில்துறை | Conglomerate |
உற்பத்திகள் | தானுந்துத் தொழிற்றுறை, உலோக்ம், பங்கு, பொறியியல், இரும்பு, சுரங்கம், கட்டுமானம், நிதி |
வருமானம் | ஐஅ$217.275 billion (2015)[1] |
நிகர வருமானம் | ஐஅ$12.949 billion (2015)[1] |
பணியாளர் | 262,463 (2015)[1] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | பட்டியல்
|
இணையத்தளம் | www.hyundaimotorgroup.com |
முக்கிய இணை
தொகுமேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Hyundai Motor Group Financial Statements". Archived from the original on 2018-01-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-18.
- ↑ "Hyundai Motor Company 2013 annual report" (PDF). Worldwide.hyundai.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-02.