ஹுஜிங் தீவு

தைவானின் மேற்கில் உள்ள தீவு

ஹுஜிங் தீவு (Hujing Island) [1] என்பது, தைவான், ஹூஜிங் கிராமத்தில் உள்ள ஒரு சிறு தீவு ஆகும். ஹுஜிங் தீவு, ஹுச்சிங் தீவு[2][3] மற்றும் ஹுஜிங் ஐலண்ட் [4] எனவும் அழைக்கப்படுகிறது. இது, சீனக் குடியரசான தைவானின் பெஸ்கடோர்ஸ் என அழைக்கப்படும் பெங்கு கவுண்டியிலுள்ள, மாகோங் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவு டான்ஷன் என்றும் மற்றும் அருகிலுள்ள டோங்பன் தீவு சியாவோஷன் என்றும் அழைக்கப்படுகிறது.[3] :19 இந்தத் தீவின் தெற்கு பகுதி கடகரேகையால் கடக்கப்படுகிறது. ஹுஜிங் தீவு, பெஸ்கடோர்ஸ் என அழைக்கப்படும் பெங்கு கவுண்டியில் அமைந்துள்ள ஏழாவது பெரிய தீவாகும். இந்த தீவு பெங்கு பிரதான தீவிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தீவின் கிழக்கு முனையிலும் (டோங்ஷான்) மேற்கு முனையிலும் (சிஷன்) மலைகள் உள்ளன.

பிரதான தீவான பெங்கு மற்றும் ஹுஜிங் தீவில் உள்ள மாகோங் நகரத்திற்கு இடையே ஒரு நாளைக்கு மூன்று முறை படகுகள் ஓடுகின்றன. இது இங்குள்ள மக்களின் ஒரே பயண போக்குவரத்தாக உள்ளது. பெங்குவின் பிரதான தீவிலிருந்து படகு மூலம் ஹுஜிங் தீவை அடைய சுமார் இருபது நிமிடங்கள் ஆகும்.

வரலாறு தொகு

தீவின் தென்முனைக்கு அருகிலுள்ள வறண்ட குகையில் அல்லது கிணற்றில் [3] ஒரு புலி காணப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்த ஒரு பாரம்பரியத்தில் இருந்து இத் தீவு அதன் தற்போதைய பெயரைப் பெறுகிறது என நம்பப்படுகிறது.[1]

பாரம்பரியத்தின் படி, டச்சுக்காரர்கள் இத் தீவில் ஒரு கோட்டையைக் கட்டினர் எனவும், அது கடலில் மூழ்கியது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இப்பகுதியில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் எதுவும் செய்யப்படவில்லை.[1] ஜூலை 12, 1683 இல், கிங் பேரரசின் கடற்படை படைகள், பெங்கு போரின் போது ஆரம்ப கட்டங்களில் ஹுஜிங் தீவு மற்றும் டோங்பன் தீவை கைப்பற்றின.[3] :42 என்ற வரலாறு காணப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் சகாப்தத்தில், இத் தீவில் கட்டப்பட்ட ஜப்பானிய குண்டு தாக்கா குடில் தப்பிப்பிழைத்தது. இந்த இடமானது பொதுமக்களுக்கு இலவசமாக அணுகக்கூடிய வகையில் உள்ளது.[3]

2019 ஆம் ஆண்டு ஜனவரியில், இந்தத் தீவின் மேற்கு மலைப் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள் இடிந்து விழுந்ததும், பழுதுபார்ப்புப் பணிகள் மிகவும் மெதுவாக நடப்பது குறித்தும் புகார்கள் வந்தன. ஜூன் 2019 இல், இந்தத் தீவில் அமைந்துள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மொத்தம் ஆறு மாணவர்கள் இருந்தனர்.

நிலவியல் தொகு

கடல் உணவு உணவகங்களுக்காக புகழ்பெற்ற ஹுஜிங் (ஹுச்சிங்) கிராமத்தின் மக்கள் தொகை இத் தீவின் தென்மேற்கு முனையில் குவிந்துள்ளது.[3] இத்தீவின் புவியியல் அமைப்பு, கருப்பு எரிமலை பாறை அமைப்புகளுக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.[3] அருகிலுள்ள டோங்பன் தீவை விட இந்த தீவு மிகவும் உயரரமான இடத்தில் உள்ளது, பெரும்பாலான மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகளுக்கு இடையில் ஒரு சமவெளிப் பகுதியும் உள்ளது.[4]

குவானின் கோவில் தொகு

ஹுஜிங் தீவில் பெங்கு குவானின் என்ற புத்த கோவில் ஒன்று அமைந்துள்ளது. இது தைவானில் பௌத்தம் மற்றும் தாவோயிசத்தின் ஒருங்கிணைப்புக்கு சொந்தமான பிற கோயில்களைப் போலவே, குவானின் கோயிலும் குவானினுக்கு (பௌத்த கடவுள்) மட்டுமல்லாமல், லாங்-வாங்கிற்கும் சேவை செய்கிறது. (சீன மொழியில், ஒரு தாவோயிச கடவுள், டிராகன்னின் இறைவன் என்று பொருள்.)

இந்த கோயில் 1696 ஆம் ஆண்டில் சிங், வம்சத்தின் போது நிறுவப்பட்டது, பெங்கு கடற்படையின் இராணுவ அதிகாரியான சூ குய் என்பவர் இதை நிறுவினார்.[5] இது கடற்கரை பகுதிக்கு அருகில் குறிப்பிடப்பட்ட சுற்றுலா தலங்களில் அமைந்துள்ளது. 2003 முதல், ஏப்ரல் முதல் ஜூன் வரை பட்டாசு விழாவில் கலந்து கொள்வதற்காக பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை குவான்-யின்-டிங் ஈர்க்கிறது.[6]

காட்சிகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Hujing Island". Tourism Bureau, Republic of China (Taiwan). 18 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019. In the 17th century, it is said, the Dutch came here and built a fortress that later sank into the sea in the midst of a battle. Scholars who have come to explore the area in recent years have made no significant discoveries, leaving the sunken fortress a 300-year mystery.{...}It' s named according to a legend that there was once a tiger crouching in a dry cave at the southeast of the island.
  2. "Beauty spot". Magong City Office,Penghu County. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019. Huching Island
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 . 
  4. 4.0 4.1 "PENGHU From island to island" (PDF). Penghu County Government. 2010s. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019. Dongshan Hujing Deep Sea Shadow Hujing Islet Hujing Port Guanyin Temple Sishan{...}In recent years, to mark the Tropic of Cancer passing through Hujing Island, a new structure was built
  5. 林, 豪 (1983). 《澎湖廳志》. Taipei City: 成文. பக். 58. 
  6. "澎湖國家風景局". 2018-03-17. Archived from the original on 2016-10-01. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கூசிங் தீவு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுஜிங்_தீவு&oldid=3910722" இலிருந்து மீள்விக்கப்பட்டது