ஹுமாயூன் ஷம்ஸ் கான்

ஹுமாயூன் ஷம்ஸ் கான் (22 பெப்ரவரி 1991) என்பவர் ஆப்கானித்தானில் பிறந்த கனடிய நடிகர், மாதிரி, தொலைக்காட்சி தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் கனடா, ஆப்கானித்தான் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்து வருகின்றார். இவர் பாலிவுட் திரைப்படங்களான டோர்பாஸ் மற்றும் மெஹ்ரூம் என்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]

ஹுமாயூன் ஷம்ஸ் கான்
பிறப்புஹுமாயூன் ஷம்ஸ் கான்
22 பெப்ரவரி 1991 (1991-02-22) (அகவை 33)[1]
காபூல், ஆப்கானித்தான்
இருப்பிடம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தேசியம்ஆப்கானிய கனடியர்கள்
படித்த கல்வி நிறுவனங்கள்டொராண்டோ திரைப்பட பள்ளி
பணிநடிகர், மாதிரி, தயாரிப்பாளர், தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2009-இன்று வரை

இவர் 2012ஆம் ஆண்டு தி டோல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து பிரேக்கிங் த லா (2013), சைக்கிள் (2014) போன்ற திரைப்படங்களில் நடித்துளளார். 2016 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் சூப்பர் ஹீரோ படமான ஃபேஸ்லெஸில் என்ற திரைபபடத்தில் சமீர் என்ற வேடத்தில் வேடத்தில் நடித்தார். இவரே முதல் ஆப்கானிஸ்தான் சூப்பர் ஹீரோ நடிகரும் ஆவார். 2017 ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடித்த பாலிவுட் திரைப்படமான டோர்பாஸ் என்ற திருப்பப்படத்தில் நடித்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Facebook-About". Facebook. பார்க்கப்பட்ட நாள் 2019-07-19.
  2. "HSK became the face of Etisalat International". 2019-02-14. Archived from the original on 2019-06-19. பார்க்கப்பட்ட நாள் 2019-07-19.
  3. "Sanjay Dutt made me feel comfortable in 'Torbaaz': Humayoon Shams Khan". Zee News. பார்க்கப்பட்ட நாள் 2019-07-19.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுமாயூன்_ஷம்ஸ்_கான்&oldid=3703671" இலிருந்து மீள்விக்கப்பட்டது