ஹுவாங்லோங்

ஹுவாங்லோங் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சோங்பான் என்னும் இடத்திலுள்ள மனதுக்கினிய காட்சிகளைக் கொண்டதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான ஒரு பகுதியாகும். இது, சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் இருந்து வடக்கு-வடமேற்காக 150 கிமீ தொலைவில் மின்ஷான் மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இப் பகுதி, சிறப்பாக ஹுவாங்லோங்கு, கல்சைட்டுப் படிவுகளால் உருவான பல நிறக் குளங்களாலும்; பல்வகைப்பட்ட காட்டுச் சூழல்முறைமை, பனிமூடிய மலை உச்சிகள், அருவிகள், வெப்ப ஊற்றுக்கள் என்பவற்றால் பெயர் பெற்றது. ஹுவாங்லோங், பெரிய பாண்டாக்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களின் இருப்பிடமாகவும் உள்ளது. ஹுவாங்லோங் 1992 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[1][2][3]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஹுவாங்லோங் காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி.
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
ஹுவாங்லோங்கின் பல நிறக் குளங்களும், காட்சிகள் கொண்ட மலைகளும் சுற்றுலாப் பயணிகளை இப் பகுதிக்கு ஈர்க்கின்றன.
வகைஇயற்கை
ஒப்பளவுvii
உசாத்துணை638
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1992 (16ஆவது தொடர்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Huanglong Scenic and Historic Interest Area".
  2. Li, P.; Luo, Y.; Bernhardt, P.; Kou, Y.; Perner, H. (27 February 2008). "Pollination of Cypripedium plectrochilum (Orchidaceae) by Lasioglossum spp. (Halictidae): the roles of generalist attractants versus restrictive floral architecture". Plant Biology 10 (2): 220–230. doi:10.1111/j.1438-8677.2007.00020.x. பப்மெட்:18304196. 
  3. "Huanglong Scenic and Historic Interest Area". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுவாங்லோங்&oldid=4106663" இலிருந்து மீள்விக்கப்பட்டது