ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்

ஆங்கிலேய மொழியியலாளர்

ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக் (Henry Thomas Colebrooke) அரச கழகம் (15 சூன் 1765 - 10 மார்ச் 1837) ஒரு கிழக்கின் ஆங்கில ஆய்வாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் "ஐரோப்பாவின் முதல் சிறந்த சமசுகிருத அறிஞர்" என்று விவரிக்கப்படுகிறார்.[1][2][3][4][5]

ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்
அரச கழகம்
ஆசிய அரச கழகத்தில் வைக்கப்பட்டுள்ள கோல்ப்ரூக்கின் மார்பளவு சிலை
பிறப்பு(1765-06-15)15 சூன் 1765
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு10 மார்ச்சு 1837(1837-03-10) (அகவை 71)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானிய
பணிகீழை நாடுகளின் ஆய்வியல்
அறியப்படுவதுசமசுகிருத அறிஞர், அரச கழகம், அரச வானவியல் நிறுவனம் ஆகியவற்றை நிருவியவர், மேலும் அதன் இரண்டாவது தலைவர்

சுயசரிதை தொகு

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிக வங்கியாளரும், அருண்டேல் நாடாளுமன்ற உறுப்பினரும் சர் ஜார்ஜ் கோல்ப்ரூக், என்பவருக்கும், அண்டிக்குவாவின் பேட்ரிக் கெய்னரின் மகளும் வாரிசுமான மேரி கெய்னர் ஆகியோருக்கு 15 சூன் 1765 இல் பிறந்தார். இவர் வீட்டிலேயே கல்வி கற்றார்.[2]

1782 இல் தனது தந்தையின் செல்வாக்கின் மூலம் கொல்கத்தாவில் கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தாளராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1786 இல் திரிகூடத்தில் வருவாய்த் துறையில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1795 இல் தனிப்பட்ட முறையில் வெளியிடப்பட்ட வங்காளத்தின் ஹஸ்பண்ட்ரி மற்றும் காமர்ஸ் பற்றிய குறிப்புகள் என்ற நூலை எழுதினார். அந்த நேரத்தில் இவர் பூர்ணியாவுக்கு மாற்றப்பட்டார். பூற்னியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை எதிர்த்து போராட்டம் நடந்து வந்தது. பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கும் இடையே சுதந்திர வர்த்தகத்திற்கு பதிலாக வாதிட்டது, இது கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களை புண்படுத்தியது. [2]

பணிகள் தொகு

இந்தியாவில் பதினொரு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, கோல்ப்ரூக் சமசுகிருத மொழியைப் படிக்கத் தொடங்கினார். மேலும் சர் வில்லியம் ஜோன்ஸ் அவர்களால் முடிக்கப்படாமல் விடப்பட்ட இந்து சட்டத்தின் ஒரு நினைவுச்சின்னமான ஆய்வான "இந்து சட்டங்களின் முக்கிய வெளியீட்டின்" மொழிபெயர்ப்புப் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. "விக்னேசுவராவின் மிடாச்சாரம்" மற்றும் "ஜிமுதவாகனத்தின் தயாபகம்" ஆகிய இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை இவர் "மரபுச் சட்டம்" என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். கொல்கத்தாவில் வசிக்கும் போது, தனது "சமஸ்கிருத இலக்கணம்" (1805), "இந்துக்களின் மத சடங்குகள் பற்றிய சில ஆவணங்கள்" மற்றும் "வேதங்கள் பற்றிய கட்டுரை" (1805) ஆகியவற்றை எழுதினார். நீண்ட காலமாக இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். தனது தந்தையின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய கட்டுரை 1873 இல் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.

இந்தியவியல் தொகு

தாவரவியல் தொகு

சான்றுகள் தொகு

  1. Former Fellows of The Royal Society of Edinburgh 1783 – 2002. Royal Society of Edinburgh. பக். 194 இம் மூலத்தில் இருந்து 2013-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130124115814/http://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp1.pdf. பார்த்த நாள்: 2022-11-22. 
  2. 2.0 2.1 2.2   Lane-Poole, Stanley (1887). "Colebrooke, Henry Thomas (DNB00)". Dictionary of National Biography 11. London: Smith, Elder & Co. 
  3. Herbert Hall Turner. "The Decade 1820–1830". History of the Royal Astronomical Society 1820–1920. பக். 11, 18–19. https://archive.org/stream/historyofroyalas00dreyuoft#page/18. 
  4. "Past RAS Presidents". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
  5. G. H. Noehden (1824). "Report of the Proceedings of the Asiatic Society of Great Britain and Ireland, at Its First General Meeting, on the 15th of March, 1823". Transactions of the Royal Asiatic Society of Great Britain and Ireland 1 (1): vii–x. 

மேலும் படிக்க தொகு

  • Buckland, C. E., ed. (1906). "Colebrooke, Henry Thomas" in Dictionary of Indian Biography. London: Swan Sonnenschein & Company. Pp. 87–88. Also available online at: "Colebrooke, Henry Thomas", archive.org.
  • Colebrooke, Thomas E. (1873). "Life of Colebrooke" in Frederick Max Müller's Chips from a German Workshop, (1875). Vol. IV, pp. 377–317. London: Longmans, Green & Company. Also available here in reprint edition (1881): "Life of Colebrooke", archive.org.
  • Higgenbothom, J. J. (1874). "Colebrooke, Henry Thomas" in Men Whom India Has Known: Biographies of Eminent Indian Characters. Madras: Higgenbothom & Company. Pp. 75–79. Also available online: "Colebrooke, Henry Thomas", archive.org.
  • Rocher, Rosane and Ludo (2011). The Making of Western Indology: Henry Thomas Colebrooke and the East India Company. London: Routledge for the Royal Asiatic Society. ISBN 978-0415336017
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_தாமஸ்_கோல்ப்ரூக்&oldid=3611213" இலிருந்து மீள்விக்கப்பட்டது