ஹென்றி ஃபோர்ட்
ஹென்றி போர்டு (சூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) போர்ட் தானுந்து நிறுவனத்தின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் (assembly lines) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார். இவர் அறிமுகப்படுத்திய மாதிரி டி தானுந்து அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. இவர் ஒரு சிறந்த புதிதாக்குனர் ஆவார். இவருக்கு, 161 ஐக்கிய அமெரிக்கக் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. போர்டு நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் இவர் உலகின் பணக்காரர்களில் ஒருவரும், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவராகவும் விளங்கினார். பொருத்துகை ஒழுங்குமுறையைப் பயன்படுத்தி பெருமளவிலான மலிவான தானுந்துகளைத் தயாரிக்கும், ஃபோர்டியம் எனப்பட்ட பெரும்படித் தயாரிப்பு முறையை இவர் உருவாக்கியதுடன், அவருடைய தொழிலாளர்களுக்கு உயர்ந்த கூலியையும் வழங்கினார். நுகர்வோரியமே அமைதிக்கான வழி என்னும் நம்பிக்கையுடன் கூடிய, ஒரு உலகம் தழுவிய நோக்கை ஃபோர்ட் கொண்டிருந்தார்.
ஹென்றி ஃபோர்ட் | |
---|---|
ஹென்றி ஃபோர்ட், 1919 வாக்கில் | |
பிறப்பு | கிரீன்ஃபீல்ட் நகர், டியர்போர்ன், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா | சூலை 30, 1863
இறப்பு | ஏப்ரல் 7, 1947 ஃபெயார் லேன், டியர்போர்ன், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 83)
பணி | வணிகம் |
பெற்றோர் | வில்லியம் ஃபோர்ட் - மேரி ஃபோர்ட் |
வாழ்க்கைத் துணை | கிளாரா ஜேன் பிரையண்ட் |
பிள்ளைகள் | எட்செல் ஃபோர்ட் |
உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கான ஃபோர்டின் முயற்சிகள், பல தொழில்நுட்ப, வணிகப் புத்தாக்கங்களுக்கு வழிவகுத்தன. இவற்றுள் விற்பனைஉரிம ( franchise ) முறையும் ஒன்றாகும். இதன் மூலம் அவரது உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனையாளர்கள் அமெரிக்காவின் ஒவ்வெரு நகரத்திலும் இருந்தனர். ஐரோப்பாவிலும் பெரிய நகரங்களில் விற்பனை முகவர்கள் இருந்தனர். ஃபோர்ட் தனது செல்வத்தின் பெரும் பகுதியை ஃபோர்ட் அடிப்படை நிலையத்துக்கு (Ford Foundation) விட்டுச் சென்றார். ஆனால், தனது குடும்பம் கம்பனியை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குகளையும் செய்திருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஹென்றி ஃபோர்ட் சூலை 30, 1863 இல், மிச்சிகனில் உள்ள கிரீன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் ஒரு பண்ணையில் பிறந்தார். [1] அவரது தந்தை, வில்லியம் ஃபோர்ட் (1826-1905), அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்க் என்ற இடத்தில் பிறந்தவர், ஆனால் அவர்களின் பூர்வீகம் சோமர்செட், இங்கிலாந்து,[2] அவரது தாயார், மேரி ஃபோர்டு (நீ லிட்டோகாட்; 1839-1876), மிச்சிகனில், ஒரு பெல்ஜியன் நாட்டில் இருந்து புழம்பெயர்ந்து வந்து குடியேறியவர்களின் இளைய குழந்தையாகப் பிறந்தார்; அவளுடைய குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர் இறந்துவிட்டார்கள், அவள் அண்டை வீட்டுக்காரர்களால் வளர்க்கப்பட்டாள். ஹென்றி ஃபோர்டின் உடன்பிறப்புகள் மார்கரெட் ஃபோர்டு (1867-1938); ஜேன் ஃபோர்டு (c. 1868-1945); வில்லியம் ஃபோர்ட் (1871-1917) மற்றும் ராபர்ட் ஃபோர்ட் (1873-1934).
அவரது தந்தை ஹென்றி ஃபோர்ட் இளம் பருவத்தில் ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய கடிகாரம் கொடுத்தார். 15 வயதில், ஃபோர்டு அதன் பாகங்களை தனித்தனியாக பிரிக்கவும் பின்பு மறுபடியும் ஒன்று சேர்ககவும் சுயமாக பழுதுபார்க்கும் முறையை கற்றுக்கொண்டார், இதன் மூலம் தனது நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோரின் கடிகாரங்களை பல முறை பழுதுபார்த்துத் தந்திருக்கிறார், இதன் மூலம் கடிகாரம் பழுதுபார்க்கும் புகழைப் பெற்றார்.[3] ஃபோர்ட் தனது இறுபதாவது வயதில், நான்கு மைல் தொலைவில் உள்ள எபிஸ்கோபல் தேவாலயத்திற்கு ஒவ்வொரு ஞாயிறும் நடந்துச் சென்றார்.[4]
1876 ஆம் ஆண்டில் அவரது தாயார் இறந்தபோது ஃபோர்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது தந்தை, ஃபோர்டு குடும்ப பண்ணையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார், ஆனால் ஃபோர்ட் பண்ணை வேலைகளை வெறுத்தார். மேலும் அவர் பின்வருமாறு எழுதினார், "நான் பண்ணையில் வேலை செய்வதை எப்போதும் விரும்பியதில்லை ஆனால் அந்த பண்ணையை பார்த்துக்கொண்டுடிருந்த எனது அம்மாவை தான் நான் விரும்பினேன்." [5]
1879 ஆம் ஆண்டில், ஃபோர்ட் தனது விட்டை விட்டு வெளியேறி டெட்ராய்டில் ஒரு பயிற்சி பெறுபவராக பணியாற்றினார், முதலில் ஜேம்ஸ் எஃப். பிளவர் & பிராசு மற்றும் பின்னர் டெட்ராய்ட் டிரை டாக் நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றினார்.
திருமண வாழ்க்கை மற்றும் குடும்பம்
தொகுஏப்ரல் 11, 1888 இல் ஃபோர்ட் கிளாரா ஜேன் பிரையண்ட் (1866-1950) என்பவரை ஃபோர்ட் மணந்தார் மற்றும் பண்ணை வேலை, மரம் அறுக்கும் ஆலை இயங்கும் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.[6] அவர்களுக்கு எட்ஸெல் ஃபோர்ட் (1893–1943) என்ற பெயர் கொண்ட ஒரு குழந்தை இருந்தது:.[7]
தொழில் வாழ்க்கை
தொகு1891 இல், ஃபோர்ட் எடிசன் இலுமினேட்டிங் கம்பெனியில் ஒரு பொறியியலாளர் ஆனார். 1893 ஆம் ஆண்டில் தலைமை பொறியாளர் பதவி உயர்வு வந்த பிறகு, அவர் பெட்ரோல் என்ஜின்கள்ப் பற்றிய தனது சொந்த பரிசோதனையை கவனத்தில் எடுத்துக் கொள்ள போதுமான நேரமும் பணமும் கொண்டிருந்தார். இந்த சோதனைகள் 1896 ஆம் ஆண்டில் ஃபோர்ட் குவாட்ரிசைக்கில் என்று பெயரிடப்பட்ட ஒரு தன்னியக்க ஊர்தி வாகனத்தை வெற்றிகரமாக உருவாக்கினார். அவர் சூன் 4 ஆம் தேதி அன்று சோதனை செய்தார். பல்வேறு சோதனை இயக்ககங்களுக்குப் பிறகு ஃபோர்டு குவாட்ரிசைக்கிலை மேம்படுத்துவதற்கான வழிகளை அறிமுகப்படுத்தினார்.[8]
1896 ஆம் ஆண்டில், எடிசன் நிர்வாகிகள் கூட்டத்தில் ஃபோர்ட் கலந்து கொண்டார், அங்கு அவரை தாமஸ் எடிசன் அறிமுகப்படுத்தினார். மேலும் எடிசன் ஃபோர்டு வாகன சோதனைக்கு ஒப்புதல் அளித்தார். எடிசனின் ஊக்கம் காரணமாக ஃபோர்ட் 1898 ஆம் ஆண்டில், இரண்டாவது வாகனத்தை வடிவமைத்தார்.[9] டெட்ராயிட் லாம்பரன் பாரோன் வில்லியம் எச். முர்பி மூலதன ஆதரவுடன், எடிசன் கம்பனியை விட்டு ஃபோர்ட் பதவி விலகினார் மற்றும் ஆகஸ்ட் 5, 1899 அன்று டெட்ராய்ட் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இருப்பினும், இவருடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், ஃபோர்டு எதிர்பார்த்தை விட குறைந்த தரம் மற்றும் அதிக விலை கொண்டவையாக இருந்தது. இறுதியில், இந்த நிறுவனம் வெற்றிபெறவில்லை மற்றும் ஜனவரி 1901 இல் மூடப்பட்டது.
ஃபோர்ட் மோட்டார் நிறுவனம்
தொகுமால்கம்சன் மாற்றுப் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டுவந்தார், மேலும் புதிய நிறுவனத்தின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளுமாறு டாட்ஜ் சகோதரர்களைச் சமரசப்படுத்தினார். ஃபோர்ட் & மால்காம்ஸன் ஃபோர்ட் மோட்டார் நிறுவனமாக சூன் 16, 1903 இல், $ 28,000 அமெரிக்க டாலர் மூலதனத்துடன் மறுகட்டமைக்கப்பட்டது.
ஃபோர்ட் மற்றும் மால்கம்சன், டாட்ஜ் சகோதரர்கள், மால்காம்சின் மாமா ஜோன் எஸ். கிரே, மால்கம்சனின் செயலாளர் ஜேம்ஸ் கோஜென்ஸ் மற்றும் மால்கம்சனின் வழக்கறிஞர்கள் இருவர் ஜான் டபிள்யூ. ஆண்டர்சன் மற்றும் ஹோரஸ் ராக்ஹாம் ஆகியோர் அடங்கிய குழு முதலீட்டாளர்களாக இருந்தனர். ஃபோர்ட் பின்னர் புனித க்ளேரின் ஏரியின் புதிதாக வடிவமைக்கப்பட்ட காரை சோதனை ஓட்டம் செய்து ஒரு புதிய சாதனை புறிந்தார், 39.4 வினாடிகளில் 1 மைல் (1.6 கிமீ) தொலைவை ஓட்டிக் கடந்தார். ஒரு மணி நேரத்திற்கு 91.3 மைல்கள் (அதாவது ஒரு மணி நேரத்திற்கு 146.9 கிலோமீட்டர்) வேகத்தை எட்டி மேலும் ஒரு புதிய நில வேக சாதனையை படைத்தார். இந்த சாதனையை உறுதிப்படுத்தும் விதமாக, பந்தய கார் ஓட்டுனர் பார்னி ஓல்டுஃபீல்டு, இந்த புதிய ஃபோர்ட் மாடலை "999" என்று அழைத்தார், இதே காரில் ஓல்டுஃபீல்டு அவர்கள் அமெரிக்கா நாடு முழுவதும் ஓட்டிச் சென்று ஃபோர்ட் பிராண்ட் பிரபலப்படுத்தினார். இண்டியானாபோலிஸ் 500 ஆரம்ப ஆதரவாளர்களில் ஃபோர்ட் ஒருவராவார்.
மாதிரி டி
தொகுஅக்டோபர் 1, 1908 அன்று மாடல் டி அறிமுகப்படுத்தப்பட்டது. இடதுபுறத்தில் ஸ்டீயரிங் இருந்தது, மற்ற ஒவ்வொரு நிறுவனமும் விரைவில் இதைப் போலவே வடிவமைக்கத் தொடங்கினர். முழு என்ஜினும் மற்றும் எரிபொருள் பரிமாற்றமும் ஊள்ளடங்கி ஒரு மூடப்பட்ட பகுதிக்குள் இணைக்கப்பட்டுள்ளன; நான்கு சிலிண்டர்கள் ஒரு திடப்பகுதியில் வைக்கப்பட்டன; இரண்டு அரை நீள்வட்ட ஸ்பிரிங்குகள் கொண்டு சஸ்பென்சன் அமைக்கப்பட்டது.
மாதிரி டி கார் ஓட்டுவதற்கு மிகவும் எளிதானது, மற்றும் மலிவான விலையில் எளிதாக சரி செய்ய முடியும். இந்தக் கார் 1908 இல் $ 825 விலை கொண்டதாகவும் மிகவும் மலிவானதாகவும் இருந்தது. 1920 களில், பெரும்பாலான அமெரிக்க டிரைவர்கள் மாடல் டி கார் ஓட்ட கற்றுக்கொண்டனர்.[10]
ஒவ்வொரு பத்திரிகைகளிலும் தனது புதிய தயாரிப்பு பற்றிய கதைகள் மற்றும் விளம்பரங்களை இடம்பெறுவதை உறுதி செய்ய டெட்ராய்டில் ஃபோர்ட் ஒரு பெரிய கார் ஒன்றை விளம்பரத்திற்காக உருவாக்கினார். ஃபோர்ட் உள்ளூர் விற்பனையாளர்களின் வலையமைப்பானது வட அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்திலும் கார் முழுவதையும் சந்தைப்படுத்த பயனபடுத்தப்பட்டது. சுயாதீன விற்பனையாளர்களாக, உரிமையாளர்கள் பெருமளவில் இலாபம் ஈட்டி வளர்ந்தனர், வளர்ந்தது ஃபோர்ட் மட்டுமல்ல, வாகன உற்பத்தித்துறையும் வளர்க்கப்பட்டது; புதிய ஓட்டுனர்களுக்கு உதவ மற்றும் கிராமப்புறங்களை ஆய்வு செய்ய மற்றும் ஊக்குவிக்கின்றன வகையில் உள்ளூர் மோட்டார் கழகங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஃபோர்ட் தனது வாகனங்களை எப்போதுமே விவசாயிகளுக்கு விற்க ஆர்வமாக இருந்தார், ஏன்னெனில் அவர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு உதவும் ஒரு வர்த்தக சாதனமாக வாகனத்தை பார்த்தனர்.
விற்பனை விண்ணைத் தொட்டது - இந்த நிலைப் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது மேலும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் இலாபத்தை ஒப்பிடும்போது 100% வளர்ச்சி மற்றும் இலாபம் வெளியிட்டது. எப்போதும் அதிக செயல்திறன் மற்றும் குறைந்த செலவுகளுக்கான முயற்சியில் ஒரு பகுதியாக, 1913 இல் ஃபோர்ட் தனது தொழிற்சாலையில் நகரும் பாகங்களை பொருத்தும் பெல்ட்களை அறிமுகப்படுத்தினார், இது உற்பத்தியை மகத்தான அளவுக்கு அதிகரிப்புச் செய்ய உதவியது. ஃபோர்ட் புதிய முயற்சி மற்றும் சிந்தனைகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், சமகாலத்து ஆதார குறிப்புகள், கருத்துக்கள் மற்றும் வளர்ச்சி அவரின் ஊழியர்களான கிளாரன்ஸ் அவிரி, பீட்டர் இ. மார்டின், சார்ல்ஸ் இ. சோரன்சன் மற்றும் சி. ஹரோல்ட் வில்ஸ் ஆகியோரிடம்மிருந்து வந்தது என்கிறது.[11] (See Ford Piquette Avenue Plant)
விக்கிக் காட்சியகம்
தொகு-
1903
-
1928
-
1928
-
1931
மேற்கோள்கள்
தொகு- ↑ www.hfmgv.org The Henry Ford Museum: The Life of Henry Ford
- ↑ "The history of Ford in Ireland Family Crest and Name History".
- ↑ Ford, My Life and Work, 22–24; Nevins and Hill, Ford TMC, 58.
- ↑ Evans, Harold "They Made America" Little, Brown and Company. New York
- ↑ Ford, My Life and Work, 24; Edward A. Guest "Henry Ford Talks About His Mother," American Magazine, July 1923, 11–15, 116–120.
- ↑ "Widow of Automobile Pioneer, Victim of Coronary Occlusion, Survived Him Three Years". Associated Press. September 29, 1950. "Friday, Sept. 29 (Associated Press) Mrs. Clara Bryant Ford, 84 year-old widow of Henry Ford, died at 2 A. M. today in Henry Ford Hospital. A family spokesman said her death was the result of an acute coronary occlusion."
- ↑ "Edsel Ford Dies in Detroit at 49. Motor Company President, the Only Son of Its Founder, Had Long Been Ill.". Associated Press. May 26, 1943. "Edsel Ford, 49-year-old president of the Ford Motor Company, died this morning at his home at Grosse Pointe Shores following an illness of six weeks."
- ↑ The Showroom of Automotive History: 1896 Quadricycle பரணிடப்பட்டது சூன் 15, 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Ford R. Bryan, "The Birth of Ford Motor Company" பரணிடப்பட்டது 2012-08-29 at the வந்தவழி இயந்திரம், Henry Ford Heritage Association, retrieved August 20, 2012.
- ↑ Richard Bak, Henry and Edsel: The Creation of the Ford Empire (2003) pp 54–63
- ↑ Nevins (1954) 1:387–415