ஹெய்டி (2015) திரைப்படம்

2015 ஆண்டையத் திரைப்படம்

ஹெய்டி (Heidi) என்பது 2015 ம் ஆண்டு வெளிவந்த ஜெர்மனிய மொழி திரைப்படம் ஆகும்  குழந்தைகளுக்கான இந்த திரைப்படம் எழுத்தாளர் ஜோஹன்னா ஸ்பெரியின் ஹெய்டி என்ற புத்தகத்தின்[1] கதைக்களத்தில் உருவானது  . இந்த திரைப்படத்தில் அணுக் ஸ்டெபன் [2],ப்ருனோ கன்ஸ் , கத்ரினா ஸ்கட்லர் மற்றும் பலர் நடித்துள்ளனர் .[3]


கதை :

தொகு

ஸ்விட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள சிறிய கிராமத்தில் ஒரு சாதாரண பெண்ணாக  வளர்க்கப்படும் ஹெய்டி ஒரு கட்டத்தில் ப்ரான்க்பர்ட் நகரத்தில் ஒரு பணக்கார வீட்டில் வளர்க்கப்படுகிறார் ,ஆனால் திரும்பவும  அங்கே சக்கர நாற்காலி பயன்படுத்தும் நடப்பதில் சிரமம் உள்ள கிளாரா என்ற சிறிய பெண்ணின் ஒரு நல்ல தோழியாக மாறுகிறாள் . அங்கே பராமரிப்பு பொறுப்பில் இருக்கும் பெண்மணி ஃபிளாரின் கண்டிப்புடன் இருக்கிறார் , இருந்தாலும் கிளாராவின் பாட்டி வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்ததும் ஹெய்டி பற்றி புரிந்துகொண்டு நட்பாகவே இருக்கிறார் , கொஞ்சம் எழுதபடிக்கவும் கற்றுக்கொள்கிறாள் ,

ஹெய்டி அவளுடைய கிராமத்துக்கு செல்ல நினைப்பதால் திரும்பவும் கிராமத்துக்கே அழைத்து செல்லப்படுகிறாள் . இதனால் கிளாரா வருத்தமாக இருப்பதால் சில நாட்களுக்கு பிறகு கிளாராவின் குடும்பத்தினர் அவளை ஹெய்டியின் சிறிய குடிசை வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர் , கொஞ்சம் நாட்கள் ஹெய்டியின் கிராமப்புற குடும்பத்தில் இருக்கும் கிளாரா மகிழ்ச்சியாக நாட்களை கழிக்கிறார் .

ஒரு முறை பட்டாம்பூச்சியை ஒரு சிறிய தொடர நினைத்த கிளாரா தன்னை அறியாமலே நன்றாக தானாகவே நடக்க முயற்சி செய்வதை பார்த்து சிறுவர்களான ஹெய்டி மற்றும் பீட்டர்  அதிசயப்படுகின்றனர் . கிளாரா கொஞ்சம் கொஞ்சமாக நடக்க கற்றுக்கொள்கிறாள் , கிளாராவின் குடும்பத்தினரும் இதனால் நிறைய மகிழ்ச்சி அடைகின்றனர் , ஹெய்டி இப்போது பள்ளியில் படிக்கறாள் , வருங்காலத்தில் நிறைய கதைகளை எழுதவேண்டும் என்றும் ஆசைப்படுகிறாள்


நடிப்பு[4]

தொகு

அணுக் ஸ்டெபன்- ஹெய்டி

ப்ருனோ கன்ஸ் - ஹெய்டியின் தாத்தா

கத்ரினா ஸ்கட்லர் - நகர்ப்புற இல்லத்தின் பராமரிப்பாளர்.

இசபெல்லா அட்மேன் - கிளாரா , ஹெய்டியின் நகர்ப்புற தோழி


தயாரிப்பு மற்றும் வெளியீடு

தொகு

இந்த திரைப்படதின் காட்சிகள்  ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கெண்டன் ஆப் க்ரிஷன்ஸ் பகுதியில் இந்த திரைப்படம் 10 டிசம்பர் 2015 ம் ஆண்டு ஜெர்மனியில் வெளிவந்தது , திரைப்பட விமர்சனங்களை மற்றும் மதிப்புரைகளை தொகுத்து வழங்கும் இணையதளமான ரோட்டோன் டொமாடோஸ் இந்த திரைப்படத்துக்கு 100 மதிப்பெண் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.[5]



  1. "Heidi Book".
  2. Anuk in Heidi [1]
  3. Heidi, பார்க்கப்பட்ட நாள் 2019-01-02
  4. "Heidi 2015 Cast". Archived from the original on 2019-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.
  5. Heidi (2015) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-01-02
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெய்டி_(2015)_திரைப்படம்&oldid=3573820" இலிருந்து மீள்விக்கப்பட்டது