ஹேப் துறைமுகம்

ஹேப் துறைமுகம் (Hebe Haven) அல்லது பக் சா வான் என்பது, ஒரு படகுத் துறைமுகமாகும். இது ஹொங்கொங், சய் குங் மாவட்டத்தில், சய் குங் தீபகற்பத்தின் கடலோரமாக அமைந்துள்ளது. இந்த துறைமுகம் கடல் பாதுகாப்பான ஒரு துறைமுகமாகும். இது, கடலில் படகுச் சவாரி செய்வோர், காற்றழுத்தப் படகுச் சவாரி செய்வோர், படகு விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு கொண்டோர் போன்றோரின் சுவர்க்கப் பகுதியாகும். இது சய் குங் போகும் வழியில் உள்ளது. படகு வகைகளில் பலவிதமானவைகள் உள்ளன. பலவிதமான படகு விளையாட்டுக்களும் போட்டிகளும் அடிக்கடி நடைபெறும். [1]இந்த படகு சவாரிகளின் போது உதவுவதற்கான பல சாரணர் பிரிவுகளும் உள்ளன. இதன் கரையில் வசதிகள் மிக்க பல கூடலகங்கள் (clubs) இருக்கின்றன. பன்னாட்டு மட்டத்திலான படகு சவாரிப் போட்டிகளும் இங்கு நடைபெறுவது உண்டு. [2]

பசுமையான இயற்கை அழகுக் காட்சிகளின் நடுவெ அமைந்திருக்கும் ஹேப் துறைமுகம்

இயற்கை அழகு

தொகு

இந்த ஹேப் துறைமுகம் குடா கடலிலேயே அமைந்துள்ளது. சுற்றிவர மூன்று பக்கமும் பசுமையான உயர்ந்த மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. அந்த மலைத் தொடர்கள் ஹொங்கொங் அரசாங்கத்தின் கீழுள்ள தேசிய வனங்களாகும். இயற்கை சூழ்ந்த இந்த ஹேப் துறைமுகத்தின் அமைவிடம் கடல் அனர்த்தங்களில் இருந்து பாதுக்காப்பு மிக்க ஒரு இடம் என்றும் கூறப்படுகின்றது. இந்த இடத்திற்கு செல்லும் வாகனங்களில் செல்லும் போது, வாகனங்கள் மலையின் மேலிருந்தே இந்த துறைமுகப் பகுதியூடாகச் செல்லும். அப்போது இந்த துறைமுகம் சுற்றி வர மலைகள் சூழ நடுவே ஒரு பெரும் பள்ளத்தாக்கில் இருப்பது போன்று அழகுடன் காட்சித்தரும். அந்தக் குடா கடல் எங்கும் ஆயிரக்கணக்கான படகுகளின் காட்சி, வாகனத்தில் செல்லும் போதே மனதைக் கொள்ளை கொள்ளும். அத்துடன் சயி குங் கடல் பரப்பில் உள்ள எண்ணற்ற தீவுக் குன்றுகள் தெரியும். இந்த தீவுகளுக்கு உல்லாசப் பயணமாக செல்வோரும் இந்த துறைமுகத்துக்குச் செல்வர்.

துறைமுகக் கரை

தொகு

துறைமுகம் மற்றும் அதனை அண்டிய கடற்கரைப் பகுதிகள் பல கிரமாங்களைக் கொண்டுள்ளன. கடலை அண்டியப் பகுதிகளில் மட்டுமே இக்கிராமங்கள் உள்ளன. அந்த கிராமத்தவர் பலர் படகு வாடகைக்கு கொடுத்தல், படகோட்டி பழக்குதல், பயிற்சி அளித்தல் போன்றவைகளையே தொழிலாக கொண்டுள்ளனர். அத்துடன் கரைப் பகுதியில் வசதிகள் மிக்க கூடலகங்கள் பல உள்ளன. கடல் விளையாட்டுக்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் அந்த கூடலகங்களில் உறுப்பினரகளாகப் பதிவு செய்துக்கொள்வோரும் உளர். [3]

அத்துடன் மெரினா குகைத் தோட்டம் எனும் தற்கால வசதிகள் மிக்க வீட்டுத்தொகுதிகள் இந்த ஹேப் துறைமுகப் பகுதியிலேயே அமைந்துள்ளது. [4]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேப்_துறைமுகம்&oldid=3230095" இலிருந்து மீள்விக்கப்பட்டது