ஹேருகர்கள்
ஹேருகர் என்பது சக்ரசம்வரின் இன்னொரு பெயரும் ஆகும்
ஹேருகர்கள்(हेरुक) என்பது திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் உக்கிர மூர்த்திகளை குறிக்கும். இவர்கள் உலகத்தின் உயிர்கள் உய்ய வேண்டி உக்கிர உருவத்தை கொண்டுள்ளனர். ஹேருகர்கள் சூன்யத்தன்மையின் உருவகமாக கருதப்படுபவர்கள்[1]
சொற்பொருளாக்கம்
தொகுஹேருகர் என்பதை ஹே + ருக(रुक) என்ற இருசொற்கள் இணைந்து ஹேருகர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. ருக - என்றால் அளவில்லாத என்று பொருள்.
எட்டு ஹேருகர்கள்
தொகுகீழ்க்காணும் எட்டு ஹேருகர்கள் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு குணங்களின் அதிதேவதையாகவும் கருதப்படுகின்றனர்.
- யமாந்தகர், உக்கிர மஞ்சுஸ்ரீ, உடலின் அதிதேவதை
- ஹயக்ரீவர் மற்றும் அவலோகிதேஷ்வரர், பேச்சின் அதிதேவதை [2]
- விஷுத்தர்(बिशुद्ध)/ஸ்ரீ சமயக் உக்கிர வஜ்ரபாணி, மனதின் அதிதேவதை
- வஜ்ராம்ருதர்(वज्रामृत) உக்கிர சமந்தபத்திரர், உத்தம குணங்களின் அதிதேவதை
- வஜ்ரகீலயர், உக்கிர நிவாரணவிஷ்கம்பின், செயலின் அதிதேவதை
- மாதரர் உக்கிர ஆகாயகர்பர், விரைவாற்றலில் அதிதேவதை
- லோகஸ்தோத்ரபூஜ-நாதர் உக்கிர ஷிதிகர்பர்(க்ஷிதிகர்பர்), நிவேதனம் மற்றும் துதியின் அதிதேவதை
- வஜ்ரமந்திரபிரு(वज्रमन्त्रभिरु) உக்கிர மைத்திரேயர், உக்கிர மந்திரங்களின் அதிதேவதை
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- Gyatso, Geshe Kelsang. Essence of Vajrayana. New York: Tharpa Publications, 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-948006-48-X.
வெளி இணைப்புகள்
தொகு- ஹேருகர் ஓவியம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்