ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. macrophylla
இருசொற் பெயரீடு
Hydrangea macrophylla
(Thunb.) Ser.

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா (Hydrangea macrophylla) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இது சப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதர் தாவரமாகும். இது 2 மீ (7 அடி) முதல் 2.5 மீட்டர் (8 அடி) வரையிலான உயரம் வளரக்கூடியது. இத்தாவரத்தில் கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் இளஞ்சிவப்பு அல்லது நீல பூக்கள் பெரிய கொத்துக்களாகப் பூக்கும்.[1] இது அலங்கரிக்கப் பயன்படும் ஒரு செடியாக உலகின் பலபகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இச் செடி மண்ணின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்ட நிறமுள்ள பூக்களை பூக்கக்கூடியது. அமிலத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது நீல நிறத்திலும். காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது ஊதா நிறத்திலும். நடுநிலைத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது வெள்ளை நிறத்திலும் பூக்கும்.[2]

மேற்கோள் தொகு

  1. RHS A-Z encyclopedia of garden plants. United Kingdom: Dorling Kindersley. 2008. பக். 1136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1405332964. https://archive.org/details/azencyclopediaof0000unse. 
  2. தமிழ்நாடு பாடநுால் கழகம் . ஏழாம் வகுப்பு அறிவியல்- http://www.textbooksonline.tn.nic.in/Books/Std07/Std07-II-MSSS-TM-2.pdf பரணிடப்பட்டது 2016-03-18 at the வந்தவழி இயந்திரம்