ஹைப்ரிட் தியரி (இசைத் தொகுப்பு)
அமெரிக்க இராக்கிசைக் குழுவான இலிங்கின் பார்க்கு (Linkin Park) அக்டோபர் 24, 2000 அன்று வெளியிட்ட முதல் இசைத்தொகுப்பு ஐபிரிடுத் தியரி ("Hybrid Theory") என்பது.[1][2]. இக்குழுவின் ஐந்தாண்டு வெளிப்பாட்டின் சேகரிப்பாக விளங்கிய இந்த வெளியீட்டை டான் கில்மோர் என்ற இசைத் தயாரிப்பாளர் தொகுத்து வழங்கினார். 'ஐபிரிடுத் தியரி' இரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது; முதல் ஆண்டிலேயே 4.8 மில்லியனுக்கும் மேற்பட்ட ஒலி நாடாக்களை விற்பனை செய்து அரிய செயல் படைத்தது. இந்தக் குழு, 2001 ஆம் ஆண்டில் மிகப் பிரபலமாக இருந்த இந்த இசை வெளியீட்டின் முக்கிய பாடல்களாக "கிராலிங்", "ஒன் இசுட்டெப்புக் குளோசர்" போன்றவை திகழ்ந்தன. மேலும் இந்த தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட மற்ற தனிப்பாடல்கள் டிராகுலா 2000 , லிட்டில் நிக்கி , வாலேண்டின் போன்ற படங்களில் வெளியாயின. சிறந்த அறிமுக பாடகர், சிறந்த இராக்கிசைத் தொகுப்பு, சிறந்த ஃகார்ட்டு இராக்கிசை (கிராலிங்) ஆகிய மூன்று தரப்புகளிலும் ஐபிரிடுத் தியரி , கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தது.[3] "இன் தி எண்டுக்காக ", எம்டிவி (MTV) இந்த இசைக்குழுவுக்கு சிறந்த இராக்கிசை வீடியோ, சிறந்த இயக்குனர் ஆகிய விருதுகளை வழங்கியது. சிறந்த ஃகார்ட்டு இராக்கு ஆட்டத்திற்காக கிராமி விருதை பெற்ற ஐபிரிடுத் தியரி இசை வட்டாரத்தில் எல்லோர் கவனத்தையும் தன பால் இழுத்தது.
ஐபிரிடுத் தியரி | ||||
---|---|---|---|---|
ஸ்டுடியோ
| ||||
வெளியீடு | அக்டோபர் 24, 2000 | |||
ஒலிப்பதிவு | மார்ச் – சூன் 2000 வட ஆலிவுடு, கலிபோர்னியா | |||
இசைப் பாணி | "நியூ மெட்டல்", மாற்று மெட்டல், இராப்பு மெட்டல் | |||
நீளம் | 37:52 | |||
இசைத்தட்டு நிறுவனம் | வார்னர் பிரதர்ஸ் | |||
இசைத் தயாரிப்பாளர் | டான் கில்மூர் | |||
இலிங்கின் பார்க்கு காலவரிசை | ||||
|
ஓஸ்பெஸ்ட், பாமிலி வால்யூஸ் டூர், KROQ அல்மோஸ்ட் அகௌச்டிக் கிறித்துமசு போன்ற பெரிய அளவு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொள்ள இலிங்கின் பார்க்குக்கு அழைப்புகள் வந்து குவிந்தன.[4] சைப்பிரசு ஃகில், அடேமா, சுனூப்பு டாக் போன்ற புகழ் பெற்ற இசைக் கலைஞர்களை கொண்டு, 0}ப்ரொஜெக்ட் ரேவோல்யூசன் என்ற சொந்த சுற்று பயணத்தையும் மேற்கொண்டது இந்த குழு. ஒரே ஆண்டில் 320 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொண்டது இந்தக்குழு. நவம்பர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பிராட் பார்ட்டி அட் தி பான்கேக் பெஸ்டிவல் , என்ற DVDயில் இந்தக் குழுவின் நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டன. பழைய பேசுக் கிட்டார் கலைஞர் பீனிக்சுக் குழுவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்தவுடன், ஐபிரிடுத் தியரி , 'ஐபிரிடுத் தியரி EP உடன் புது கலப்பு இசைகளை சேர்த்து "இரீஅனிமேசன் என்ற புது தொகுப்பை உண்டாக்கினர். ரீஅனிமேஷன் ஜூலை 30, 2002, அன்று வெளிவந்தது. இதில் ப்ளாக் தோட், ஜோனதன் டேவிஸ், ஆரோன் லூயிஸ் போன்ற கலைஞர்களும் இடம்பிடித்தனர்.[5] பில்போர்டு 200இல், தனது முதல் வாரத்தில், ரீஅனிமேசன் இரண்டாம் இடத்தை பிடித்தது. முதல் வாரத்திலேயே 270,000 ஒலி நாடாக்களை விற்பனை செய்த பெருமையையும் இது பெற்றுள்ளது.[6]
இலிங்கின் பார்க்குக் குழு
தொகு- கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் இசைத்தட்டு வெளியீட்டின் பின் கொடுக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.[7]
- செசிட்டர் பென்னிங்டன் – முதல் பாடகர்
- ரோப் பூர்டன் – உருளிமுரசு, தட்டு வாத்தியம், பின்குரல் பாடகர்
- பிரேடு டெல்சன் இலீடுக் கிடார், பின்குரல் பாடகர்
- டேவிடு "பீனிக்சு" பார்ரெல் – பேசுக் கிடார், பின்குரல் பாடகர்
- திரு. ஃகான் – தர்ன்டேபிள்சு, புரோக்ராமிங், சாம்ப்ல்சு, பின்குரல் பாடகர்
- மைக்கு சிநோடா –முதல் பாடகர், இரிதம் கிடார், சாம்ப்ல்சு, கிபோர்டு
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Linkin Park - Hybrid Theory released October 24, 2000.".
- ↑ "Linkin Park fansite — Album release date".
- ↑ யுனைடட் ஸ்டேஷன்ஸ் ரேடியோ நெட்வொர்க், சிரத்திற்கு மகுடம் போல் இலிங்கின் பார்க் கிராமி விருந்துகள் பெறுவதற்கு தேர்ந்தெடுத்து இருந்தது. பரணிடப்பட்டது 2008-01-17 at the வந்தவழி இயந்திரம் மார்ச் 26, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- ↑ MTV.com, இலிங்கின் பார்க்கு, P.O.D., நிக்கல்பாக், மோர் டு பலே LA’s KROQ பெஸ்ட் மார்ச் 26, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- ↑ யுனைடட் ஸ்டேஷன்ஸ் ரேடியோ நெட்வொர்க், இலிங்கின் பார்க்கின் 'இரீஅணிமேசன்' சூலை 30 பரணிடப்பட்டது 2007-08-18 at the வந்தவழி இயந்திரம் க்காக, மார்ச் 26, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- ↑ Yahoo! Music, இலிங்கின் பார்க்கு இரண்டாவது அறிமுகத்துடன் அட்டவனையை மீண்டும் கலக்கிறது. பரணிடப்பட்டது 2007-06-17 at the வந்தவழி இயந்திரம் மார்ச் 26, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- ↑ "Hybrid Theory by Linkin Park CD". cduniverse.com. பார்க்கப்பட்ட நாள் 2007-08-18.