வார்னர் புரோஸ்.

(வார்னர் பிரதர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வார்னர் புரோஸ். (ஆங்கில மொழி: Warner Bros.) என்பது அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம் மற்றும் வார்னர் புரோஸ். டிஸ்கவரியின் கிளை நிறுவனம் ஆகும். இது கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வார்னர் பிரதர்ஸ் இஸ்டுடியோ வளாகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது.

வார்னர் புரோஸ். என்டர்டேயின்மன்ட் இங்க்.
வகைகிளை நிறுவனம்
நிறுவுகை1918 (வார்னர் புரோஸ். ஸ்டுடியோக்கள்)
1923 (வார்னர் புரோஸ். பிக்சர்கள்)
நிறுவனர்(கள்)ஜாக் வார்னர்
ஹாரி வார்னர்
ஆல்பர்ட் வார்னர்
சாம் வார்னர்
தலைமையகம்பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படம், பதிப்பகம், ஒலிப்பதிவு மற்றும் மறுஉற்பத்தி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம்
வருமானம்Increase $13.866 பில்லியன் (2017)
இயக்க வருமானம்Increase $1.761 பில்லியன் (2017)
உரிமையாளர்கள்ஏ டி அன்ட் டி
பணியாளர்8,000 (2014)[1]
தாய் நிறுவனம்சுயநிதி நிறுவனம் (1918–1967)
வார்னர் புரோஸ். -ஏழு கலைகள் (1967–1970)
கின்னி சர்வதேச நிறுவனம் (1969–1972)
வார்னர் தொலைதொடர்பு (1972–1989)
டைம் வார்னர் (1989–இன்றுவரை, (AOL Time Warner2001–2003))
இணையத்தளம்warnerbros.com
வார்னர் புரோஸ். முதல் சர்வதேச ஸ்டூடியோ, பர்பாங்க் 1928.

இது 1923 இல் ஹாரி வார்னர், ஆல்பர்ட் வார்னர், சாம் வார்னர் மற்றும் ஜாக் வார்னர் ஆகிய நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அனிமேஷன், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்டங்களில் பன்முகப்படுத்தப்படுவதற்கு முன்பு அமெரிக்க திரைப்படத் துறையில் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்தியது.

இந்த நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், நியூ லைன் சினிமா, வார்னர் அனிமேஷன் குரூப், கேஸில் ராக் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய திரைப்பட இஸ்டுடியோ பிரிவுக்காக மிகவும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்னர்_புரோஸ்.&oldid=3580558" இலிருந்து மீள்விக்கப்பட்டது