ஏ டி அன்ட் டி

ஏ டி அன்ட் டி (AT&T) என்பது பல நிறுவனங்களை கூட்டாக உள்ளடக்கிய ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். டெலவர் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு, டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரிலுள்ள விட்டேகர் டவரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.[3] இது, ஏடி அண்டு டி கம்முனிகேசன்ஸ் வாயிலாக தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் உலகின் பெரு நிறுவனமாகவும், அமெரிக்காவில் தரை வழி தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் பெரு நிறுவனமாகவும் விளங்குகிறது. வார்னர் மீடியா என்ற வெகுஜன ஊடக கூட்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமாகவும் செயல்படுவதால், ஜூன் 14, 2018 முதல், வருவாய் அடிப்படையில் ஊடகம் மற்றும் கேளிக்கை சேவை வழங்கும் உலகின் பெரு நிறுவனமாக விளங்குகிறது.[4] மொத்த வருவாயை அடிப்படையாகக் கொண்டு, ஃபார்ச்சூன் 500 வெளியிட்ட 2018 ஆம் ஆண்டு வரைக்குமான அமெரிக்காவிற்கான தரவரிசையில் 9வது பெரு நிறுவனமாக உள்ளது.[5]

ஏ டி அன்ட் டி
AT&T Inc.
வகைபொதுப் பங்கு நிறுவனம்
முந்தியதுஏ டி அன்ட் டி கார்ப்பரேஷன்
பெல் சவுத்
அமெரிக்கா டெக்
பசிபிக் டெலிசிஸ்
தென்மேற்கு பெல்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்ராண்டல் எல் ஸ்டீபன்சன் (தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர்)
தொழில்துறை
உற்பத்திகள்டிஜிட்டல் தொலைக்காட்சி, வீட்டு பாதுகாப்பு, இணைய நெறிமுறை தொலைக்காட்சி, மேல்-மேல் ஊடக சேவைகள், நெட்வொர்க் பாதுகாப்பு, திரைப்படம் உற்பத்தி, தொலைக்காட்சி தயாரிப்பு, கேபிள் டிவி, ஊதியம் தொலைக்காட்சி, வெளியீடு, பாட்கேஸ்ட்ஸ், விளையாட்டு மேலாண்மை, செய்தி நிறுவனம், வீடியோ விளையாட்டுகள்
வருமானம்Increase $170.756 billion (2018)
இயக்க வருமானம்Increase $26.096 billion (2018)
நிகர வருமானம்Increase $19.953 billion (2018)
மொத்தச் சொத்துகள்Increase $531 billion (2018)
மொத்த பங்குத்தொகைIncrease $193.884 billion (2018)[1]
பணியாளர்273,210 (2018)[2]
பிரிவுகள்

ஏடி அண்டு டி நிறுவனம் சௌத்வெஸ்டர்ன் பெல் தொலைபேசி நிறுவனம் எனும் பெயரில் தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கியது. பெல் தொலைபேசி நிறுவனத்தின் துணை நிறுவனமான இதனை 1877 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்பவர் நிறுவினார். பெல் தொலைபேசி நிறுவனம் 1885 இல் அமெரிக்கன் டெலிஃபோன் அண்டு டெலிகிராஃப் கம்பெனி என்று பெயர் மாற்றம் பெற்று பின்னர் ஏடி அண்டு டி கம்பெனி என்று மறு பெயர் மாற்றம் பெற்றது. 1982 அமெரிக்கா V, ஏடி அண்டு டி நம்பிக்கையின்மை வழக்கின் விளைவாக ஏடி அண்டு டி நிறுவனம் (“மா பெல்”) பல துணை நிறுவனங்கள் அல்லது ரீஜினல் பெல் ஆப்ரேட்டிங் கம்பெனிஸ் (RBOCs) என்று பிரிந்து, பொதுவாக "பேபி பெல்ஸ்” என்று குறிப்பிடப்பட்டது. அவ்வாறு தோன்றிய பல தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் ஒன்றான சௌத்வெஸ்டர்ன் பெல் என்ற நிறுவனம், 1995 இல் தன் பெயரை எஸ்பிசி கம்முனிகேசன்ஸ் இன். என்று மாற்றிக்கொண்டது. 2005 இல் எஸ்பிசி தன் முந்தைய தாய் நிறுவனமான ஏடி அண்டு டி நிறுவனத்தையும் அதன் பெயரையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டது. அதன் பயனாக ஏடி அண்டு டி இன். என்று பெயர் மாற்றம் பெற்று, அதன் வரலாறு, பிரபல லோகோ, பங்குச் சந்தை வர்த்தகக் குறியீடு ஆகியவற்றை பயன்படுத்தத் தொடங்கியது. கடைசியாக 2006 இல், தன்னாட்சி நிர்வாகம் கொண்ட பேபி பெல் கம்பெனியான பெல்சௌத் கம்பெனியையும் ஏடி அண்டு டி இன். வாங்கியது. அதன் மூலம், தன் முந்தைய கூட்டு நிறுவனமான சிங்குலர் வயர்லெஸ்ஸை (2004 இல் அது ஏடி அண்டு டி வயர்லெஸ்ஸை வாங்கியிருந்தது) முற்றிலும் தன் சொந்த நிறுவனமாக ஏடி அண்டு டி வயர்லெஸ் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டது.

தற்போது உள்ள ஏடி அண்டு டி என்பது முந்தைய பெல் சிஸ்டம்ஸ் கம்பெனிகளில் பலவற்றையும், 22 பெல் ஆப்ரேட்டிங் கம்பெனிகளில் பத்து கம்பெனிகளையும், மூலாதாரமான தொலை தூர சேவைப் பிரிவையும் உள்ளடக்கிய மறுகட்டமைக்கப்பட்ட நிறுவனமாகும்.

வரலாறு

தொகு

தோற்றமும் வளர்ச்சியும் (1885 – 1981)

தொகு

தொலைபேசிக்கான காப்புரிமையை பெல் பெற்றதும், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல், கார்டினர் கிரீன் ஹுப்பர்டு மற்றும் தாமஸ் சாண்டர்ஸ் ஆகியோரால் ஏடி அண்டு டி, பெல் தொலைபேசி நிறுவனம் என்று நிறுவப்பட்டது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான, 1885 இல் நிறுவப்பட்ட அமெரிக்கன் டெலிஃபோன் அண்டு டெலிகிராஃப் (ஏடி அண்டு டி) கம்பெனியை, பெல் நிறுவனம் டிசம்பர் 31, 1899 இல் வாங்கியிருந்த போதும், சட்ட சிக்கல்களின் காரணமாக ஏடி அண்டு டி-யே தலைமை கம்பெனியாக இருந்தது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல துணை நிறுவனங்களை நிறுவிய ஏடி அண்டு டி, கிங்ஸ்பரி ஒப்புதல் படி, அரசு அதிகாரிகள் அங்கீகாரத்துடன் அமெரிக்காவிலும் கனாடாவிலும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் ஏகபோக உரிமையை, இருபதாம் நூற்றாண்டு முழுதும் நெடுங்காலத்திற்கு தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. அந்த ஏகபோக உரிமை கொண்டிருந்த காலத்தில் அந்நிறுவனம் பெல் சிஸ்டம் என்றும், “மா பெல்” எனும் புனைப்பெயரிலும் அறியப்பட்டது.

பிரிவும் சீர்திருத்தமும் (1982–2004)

தொகு

1982 இல் அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏடி அண்டு டி யின் ஏகபோக உரிமை உடைக்கப்பட்டு, ஏடி அண்டு டி பல பிராந்திய துணை நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு, பின்னர் அவை தன்னாட்சி நிறுவனங்களாக மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டது. இப்புதிய நிறுவனங்கள் ரீஜினல் பெல் ஆப்ரேடிங் கம்பெனீஸ் என்றும் பொதுவாக பேபி பெல்ஸ் என்றும் அறியப்பட்டது. ஏடி அண்டு டி தன் தொலைதூர சேவைகளைத் தொடர்ந்தாலும், பிரிவின் காரணமாக, புதிய போட்டியாளர்களாகிய எம்சிஐ மற்றும் ஸ்பிரின்ட் ஆகியவற்றின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஏடி அண்டு டி கார்ப். பிரிந்ததால் உருவாக்கப்பட்ட பல நிறுவனங்களுள் சௌத்வெஸ்டர்ன் பெல் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் வெகு விரைவில், தொடர்ந்து பல நிறுவனங்களை கைப்பற்ற தொடங்கியதை அடுத்து, 1987 இல் கைப்பற்றிய மெட்ரோமீடியா அலைபேசி நிறுவனம் உட்பட, 1990 களின் தொடக்கத்தில் பல தந்தி வழி தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்களை கைப்பற்றியது. 1990 களின் பிற்பகுதியில் தந்தி வழி தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்களை விற்கையில், இந்நிறுவனம், பேபி பெல் நிறுவனங்கள் உட்பட வேறு பல தொலைத்தொடர்பு நிறுவனங்களை கைபற்றியது. இந்த காலகட்டத்தில் தன் பெயரை எஸ்பிசி கம்முனிகெசன்ஸ் என்று மாற்றிக்கொண்டது. 1998 வாக்கில், இந்நிறுவனம் ஃபார்ச்சூன் 500 பட்டியலில் முதல் 15 இடங்களிலும், and 1999 வாக்கில் நிறுவனம் டௌ ஜோன்ஸ் தொழில்த்துறை சராசரியில் ஒரு அங்கமாகவும் இருந்தது (2015 வரையிலும் நீடித்திருந்தது).

தன் முந்தைய தாய் நிறுவனத்தை வாங்கியது மற்றும் வேறு நிறுவனங்களை கைப்பற்றியதும் (2005–2014).

தொகு

2005 இல், எஸ்பிசி 16 பில்லியன் அமெரிக்க டாலருக்கு, ஏடி அண்டு டி யை வாங்கியது. எஸ்பிசி அதை வாங்கிய பின்னர், நன்கு அறியப்பட்ட ஏடி அண்டு டி யின் பெயர் மற்றும் தர அடையாளத்தை பயன்படுத்தத் தொடங்கிய போதும், இணைந்த நிறுவனங்களில், அசல் ஏடி அண்டு அட் கார்ப். நிறுவனமே தொலைதூர தொலைத்தொடர்பு சேவை வழங்கும் துணை நிறுவனமாக விளங்கியது. தற்போதைய ஏடி அண்டு டி, அசல் ஏடி அண்டு டி கார்ப். நிறுவனத்தின் வரலாற்றை (காலம் 1885) தன் சொந்த வரலாறு என்று உரிமை கொண்டாடுகிறது, ஆனால் எஸ்பிசி யின் 1983-2005 நிர்வாகக் கட்டமைப்பையும் 2005 க்கு முந்தைய பங்கு விலை வரலாற்றையும் தக்கவைத்துக் கொள்கிறது.

2011 இல் ஏடி அண்டு டி, 39 பில்லியன் அமெரிக்க பங்காகவும் ரொக்கச் சலுகையிலும் டி-மொபைல்-ஐ வாங்க முற்பட்டது. கையகப்படுத்தப்படும் நிறுவனம், குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறை மற்றும் சட்டத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், அமெரிக்க அரசாங்கத்தின் வலுவான எதிர்ப்பாலும் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அசல் கைப்பற்றுதல் ஒப்பந்தப்படி, டி-மொபைல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரொக்கமாகப் பெற்றுக்கொண்டதுடன், 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏடி அண்டு டி வசமுள்ள கம்பியில்லா அலைக்கற்றையை பயன்படுத்தும் உரிமையையும் பெற்றுக்கொண்டது.

அமெரிக்கா மோவில் உடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் வாயிலாக, லத்தின் அமெரிக்காவிலும் விரிவாக்கம் செய்வதாக செப்டம்பர் 2013 இல் ஏடி அண்டு டி அறிவித்தது. ஸ்டாம்போர்ட்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரான்டியர் கம்முனிகெசன்ஸ் என்ற நிறுவனத்திற்கு, கனக்டிகட்டில் செயல்ப்படும் தன் தந்தி வழி சேவை நிறுவனத்தை விற்பதாக டிசம்பர் 2013 இல் ஏடி அண்டு டி அறிவித்தது.

சமீபத்திய முன்னேற்றங்கள் (2014–தற்போது வரை)

தொகு

2014 இன் பிற்பாதியில், ஏடி அண்டு டி மெசிக்கன் செல்லுலார் காரியர் லுசசெல்-ஐ வாங்கியதோடு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர், என்ஐஐ வசமிருந்த மெசிக்கன் வயர்லெஸ் வணிகத்தையும் வாங்கியது. ஏடி அண்டு டி இரண்டு நிறுவனங்களையும் இணைத்து, ஏடி அண்டு டி மெக்ஸிகோ-வை உருவாக்கியது.

ஜூலை 2015 இல், டைரக்ட்டிவி-ஐ ஏடி அண்டு டி 48.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. தற்போதுள்ள அதன் யு-வெர்ஸ் ஹோம் இன்டர்நெட் மற்றும் ஐபிடிவி-ஐ டைரக்ட்டிவி யுடன் இணைத்து, ஏடி அண்டு டி என்டர்டேயின்மென்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கும் தன் திட்டங்களை, ஏடி அண்டு டி பின்னர் அறிவித்தது.

ஊடகத்துறையில் தன் பங்கை அதிகரித்துக்கொள்ளும் முயற்சியில், டைம் வார்னர்-ஐ 108 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கும் ஒப்பந்தத்தை, அக்டோபர் 22, 2016 இல் ஏடி அண்டு டி அறிவித்தது.

கனடாவைத் தாயகமாகக் கொண்டு இயங்கும் லயன்ஸ்கேட் எனும் பொழுதுபோக்கு கம்பெனியிலும் ஏடி அண்டு டி ஏறத்தாழ 2% பங்குகளை வைத்திருந்தது.

ஜூலை 13, 2017 இல், டைரக்ட் டிவி மற்றும் டைரக்ட் டிவி நௌ ஒளிபரப்பு சேவைக்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த இயங்குதளம் உருவாக்கி, விரைவில் யு-வெர்ஸ் ஐயும் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மேகக் கணினி தளத்தில் டிவிஆர் ஒளிபரப்பு சேவையை ஏடி அண்டு டி அறிமுகப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 2019இல் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக, அக்டோபர் 2018 இல் அறிவிக்கப்பட்டது. எச்பிஓ மேக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த சேவையின் வெளியீட்டு தேதி மே 2020 க்கு தள்ளிவைக்கப்பட்டது.

செப்டம்பர் 12, 2017 இல், தந்தி வழி தொலைக்காட்சி சேவையை ஒத்த, ஓவர்-தி-டாப் சேவையை தன் வலைப்பின்னல் அல்லது ஒரு போட்டியாளரின் அகண்டவரிசை வலைப்பின்னல் மேலோ, அடுத்த ஆண்டில் என்றேனும் ஏடி அண்டு டி வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

டைம் வார்னர் உடன் இணைவதைத் தடுப்பதற்கு, “போட்டிக்குத் தீங்காகும், நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் மற்றும் புதுமைகள் குறையும்” என்று கூறி, மக்கான் டெல்ராஹிம், உதவி முதன்மை ஆதரவுரைஞர், அமெரிக்க நீதித் துரையின் நம்பிக்கையற்ற பிரிவிற்காக வழக்கு தொடுத்தார். டைம் வார்னர்-ஐ முழுவதுமாக ஏடி அண்டு டி கைப்பற்ற வேண்டுமானால், அந்நிறுவனம் டைரக்ட் டிவி யையோ அல்லது டர்னர் பிராட்காஸ்டிங் சிஸ்டம் யையோ பிரிக்க வேண்டும் என நீதித் துறை கூறியது.

2017 நிலவரப்படி, உலகின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஏடி அண்டு டி ஆகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், அலைபேசி மற்றும் தரைவழி தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குவதிலும் ஏடி அண்டு டி பெரிய நிறுவனமாகும்.

மார்ச் 7, 2018 இல், இந்நிறுவனம் லத்தின் அமெரிக்க டைரக்ட் டிவியின் சிறிய அளவிலான பங்குகளை, பொது பங்கு வெளியீடு மூலம் விற்று, அதன் சொத்துக்களை நிர்வகிக்க, விரியோ கார்ப். எனும் ஒரு புது நிறுவனத்தைத் தொடங்க தயாரானது. இருப்பினும், விரியோ, பங்குச் சந்தையில் அறிமுகமாவாதற்கு ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 18 அன்று, சந்தை நிலவரத்தின் காரணமாக ஏடி அண்டு டி, பொது பங்கு வெளியீட்டை ரத்து செய்தது.

ஜூன் 12, 2018 அன்று, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாகாண நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் ஜெ. லியோன், டைம் வார்னர் உடனான அமரிக்க டாலர் 85 பில்லியன் ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல, ஏடி அண்டு டிக்கு அனுமதியளித்தார்.

போட்டிக்கான சூழலுக்கு தீங்கிழைக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, டிஓஜெ, இந்த இணைப்பு நடவடிக்கையை நிறுத்த முயன்றது. இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் நிறைவேறியதை அடுத்து, முழுமையாக ஏடி அண்டு டிக்கு சொந்தமான துணை நிறுவனமாகவும் அதன் ஒரு கிளையாகவும், வார்னர் மீடியா என்ற புது பெயர் அடுத்த நாள் அறிவிக்கப்பட்டது. வார்னர் மீடியாவை ஏடி அண்டு டி கையகப்படுத்தியது ஜூன் 15, 2018 அன்று நிகழ்ந்தது. ஏடி அண்டு டி, வார்னர் மீடியாவை கைப்பற்றியதில் குறிப்பிடத்தக்க சொத்துக்களில் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் சினிமா மற்றும் தொலைக்காட்சி அரங்கு, எச்பிஓ போன்ற அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தந்திவழி தொலைக்காட்சி/ செயற்கைகோள் ஒளியலை வரிசை, வார்னர் மீடியா அரங்கு & நெட்வொர்க் குரூப் (அடல்ட் ஸ்விம், பூமரங், கார்ட்டூன் நெட்வொர்க், சிஎன்என், டிபிஎஸ், டிஎன்டி, ட்ரூடிவி, டர்னர் கிளாஸிக் மூவிஸ் ஆகியவை), தி ஸிடபிள்யு (வியாகாம் சிபிஎஸ்ஸில் 50% பங்குதாரர்) ஆகியவை அடங்கும்.

கைப்பற்றிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஏடி அண்டு டி நான்கு முக்கிய பிரிவுகள் : நுகர்வோர், வணிக தந்திவழித் தொலைத்தொடர்பு ஆகியவை உள்ளடக்கிய கம்முனிகேசன்ஸ், ஏடி அண்டு டி மொபிலிட்டி மற்றும் நுகர்வோர் பொழுதுபோக்கு காணொளி சேவைகள்; டர்னர் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்ஸ், வார்னர் பிரதர்ஸ் பிலிம் அண்டு டெலிவிஷன் ப்ரோடக்ஷன் ஆகியவை உள்ளடக்கிய வார்னர் மீடியா மற்றும் எச்பிஓ; மெக்ஸிகோவில் உள்ள தந்தியில்லா சேவை, விரோ என்ற அடையாளத்தோடு லத்தின் அமெரிக்கா மற்றும் கரீபியன் உள்ள காணொளி ஆகியவை கொண்டிருக்கும் ஏடி அண்டு டி லத்தின் அமெரிக்கா; எக்ஸ்அண்டர் என்று பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து அட்வர்டைசிங் அண்டு அனலிடிக்ஸ் என மறுசீரமைப்பிற்கு உள்ளானது.

2019 ஆம் ஆண்டு வாக்கில், நோயாளிகள் பராமரிப்பிற்கு உதவும் வகையிலான எளிதில் நகர்த்தக் கூடிய ஆரோக்கியம் சம்பந்தமான இணைப்புச் சாதனங்களை உருவாக்கிட, ஏடி அண்டு டி சுகாதார சேவை வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டது.

அலைபேசி மற்றும் கம்பியில்லா இனையம், இவற்றுள் எதனுடனும் இணைப்பை மாற்றிக்கொள்ளும் வகையிலான நோயாளிகளின் அளவீடுகளைக் கண்காணிக்கும் டெலிமெட்ரி சாதனம், குறிப்பிடத்தக்க சாதனங்களுள் ஒன்று.

செப்டம்பர் 2019 இல், தான் வாங்கிய 3.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கான ஏட் அண்டு டி பங்குகளின் (1.2% பங்கு வட்டி) மதிப்பு கூடுவதற்காக, அந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பதற்கு நிர்பந்தித்ததாக எலியட் மேனேஜ்மென்ட் என்ற ஆர்வல முதலீட்டாளர் வெளிப்படையாகக் கூறியது.

மார்ச் 4, 2020, மூலதன முதலீட்டைக் குறைப்பது உள்ளிட்ட பெரும் செலவின குறைப்பை நடைமுறைப்படுத்த இருக்கும் தன் நோக்கத்தையும், ஏடி அண்டு டி டிவியை (மார்ச் 2 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது) முதன்மை கட்டண தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனமாக முன்னிலைபடுத்த இருக்கும் தன் திட்டத்தையும் அறிவித்தது.

கம்பிவழி அகண்டவரிசை இணையம் நடைமுறையில் இல்லாத நிலையிலும், ஒரு சிறப்பு விருப்பத் தேர்வு என்பதாக டைரக்ட்டிவியை ஏடி அண்டு டி முதன்மையாக முன்னிலைப்படுத்தும்.

ஜூலை 1, 2020 முதல் நிறுவனத்தின் சிஓஓ ஜான் ஸ்டான்கிக்கு பதிலாக ராண்டல் எல். ஸ்டீபன்சன் ஏடி அண்டு டியின் சிஇஓவாக மாற்றப்படுவார் என்று ஏப்ரல் 24, 2020 இல் ஏடி அண்டு டி அறிவித்தது. டைரக்ட் டிவியையும் டைம் வார்னரையும் கைப்பற்றியதன் விளைவாக, ஏடி அண்டு டிக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பெரும் கடன் சுமை ஏற்பட்டதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

செலவினங்களைக் குறைத்துக்கொள்ளும் செயல் திட்டத்தின் விளைவாக, வார்னர் பிரதர்ஸ் இன்டர்ஆக்டிவ் என்டர்டேன்மென்ட், டைரக்ட்டிவி, எக்ஸ்அண்டர், க்ரன்சிரோல் ஆகியவற்றை விற்பதற்கு முன்மொழியப்பட்டது.

கேமிங் துறையில், கோவிட் - 19 தொடர்புடைய வளர்ச்சியின் காரணத்தாலும், ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும், வரவிருக்கும் டிசி காமிக்ஸ், லேகோ ஸ்டார் வார்ஸ், ஹாரி போட்டர் ஆகியவற்றிற்கு நேர்மறையான வரவேற்பு இருந்த காரணத்தாலும் வார்னர் பிரதர்ஸ் இன்டர்ஆக்டிவ் என்டர்டேன்மென்டை விற்பதற்கான திட்டம் கைவிடப்பட்டது.

செப்டம்பர் 1, 2020 நிலவரப்படி மற்ற துணை நிறுவனங்களை விலைக்கு கேட்கும் கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது.

ஏடி அண்டு டி லத்தின் அமெரிக்கா.

ஏடி அண்டு டி லத்தின் அமெரிக்கா (முன்னர், ஏடி அண்டு டி இன்டர்நேஷனல் இன்.) என்ற, ஏடி அண்டு டிக்கு முழுதும் சொந்தமான பிரிவானது, மெக்ஸிகோவிலும் 11 லத்தின் அமெரிக்க நாடுகளிலும் கரீபியனிலும் இயங்குவாதாகும். முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தமானது, ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்குகளை தன்வசம் வைத்திருக்க ஏடி ஆண்டு டி க்கு வழிவகுக்கும்; இதேபோன்று, ஊடகத்தில் தன் பங்கை அதிகரிக்கும் முயற்சியில், ஏடி ஆண்டு டியின் போட்டியாளரான காம்காஸ்ட், தனக்கு சொந்தமான தொலைக்காட்சி, இணைய சேவை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், என்பிசி யுனிவெர்சலை கையகப்படுத்தியது.

இந்த இணைப்பானது மத்திய ஒழுங்குமுறையாளர்களால் அங்கீகரிக்கப்படுமேயானால், செயற்கைக்கோள் சேவை வழங்கும் டைரக்ட் டிவி உள்பட டைம் வார்னரின் அனைத்து சொத்துக்களையும், ஏடி ஆண்டு டியின் வசமுள்ள தொலைத்தொடர்பு என்ற அதே குடையின் கீழ் கொண்டு வரும்.

ஜூலை முடியும் தருவாயில், கையகப்படுத்துதல் முடிவடைவதற்கு முன்பு ஒரு புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்தது.

செப்டம்பர் 15, 2017 அன்று, ராய்ட்டர்ஸ், அநாமதேய ஆதாரங்களை மேற்கோள் காட்டி, டைரக்ட் டிவி, லத்தின் அமெரிக்க பிரிவுகள் ஆகியவற்றின் உரிமையாளரான ஏடி ஆண்டு டி, லத்தின் அமெரிக்க ஏடி ஆண்டு டியின் பங்குகளை பங்குச் சந்தையில் வர்த்தகத்திற்கு கொண்டுவர ஒரு ஆலோசகரை நியமித்திருப்பதாக அறிவித்தது.

நவம்பர் 2017 இல், அமெரிக்க நீதித்துறை ஏடி & டி மற்றும் டைம் வார்னர் இணைப்பைத் தடுக்க வழக்குத் தொடுப்பதாகக் கூறியது. நவம்பர் 20, 2017 அன்று, நீதித்துறை, கையகப்படுத்தல் தொடர்பாக நம்பிக்கையின்மை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது; இந்த ஒப்பந்தம் "அமெரிக்க நுகர்வோருக்கு பெரிதும் தீங்கு விளைவிக்கும்" என்று மக்கன் டெல்ராஹிம் கூறினார்.

இந்த வழக்கானது, தீவிரமான விவரிக்க முடியாத பல தசாப்தங்களைக் கடந்த முன்மாதிரியான நம்பிக்கையின்மை வழக்கு என்று ஏடி ஆண்டு டி வலியுறுத்தியது. டிசம்பர் 22, 2017 அன்று, இணைப்பிற்கான ஒப்பந்தக் காலக்கெடு ஜூன் 21, 2018 வரை நீட்டிக்கப்பட்டது. ஏப்ரல் 19, 2018 அன்று, பங்கு வர்த்தக ஆரம்பம் ரத்து செய்யப்பட்டது.

ஜூன் 12, 2018 அன்று, - டைஏடி ஆண்டு டி மற்றும் வார்னர் இணைப்பு ஒரு மத்திய நீதிபதியால் அங்கீகரிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஏடி ஆண்டு டி டைம் வார்னரை கையகப்படுத்துவதை நிறைவுசெய்து, ஒரு நாள் கழித்து, நிறுவனத்திற்கு வார்னர் மீடியா என பெயர் மாற்றப்பட்டது.

செப்டம்பர் 21, 2018 அன்று, ஆர்எஸ்என்களைப் போன்ற மேலும் பல சொத்துக்கள் வெளியேறிய நிலையிலிருக்கும் ஏடி ஆண்டு டி இன்டர்நேஷனல் உள்பட தன் நான்கு முக்கியப் பிரிவுகளை ஏடி ஆண்டு டி மறுவகைப்படுத்தி, கன்சியுமர் மொபிலிட்டி, தொழில்நுட்பம், பிசினஸ் மொபிலிட்டி ஆகியவற்றை இணைத்து, நிறுவனத்திற்கு ஏடி ஆண்டு டி லத்தின் அமெரிக்கா என்று பெயர் மாற்றியது.

எலியட் மேனேஜ்மென்ட்டின் பங்குதாரர்களின் அழுத்தத்தின் விளைவாக, அக்டோபர் 2019 இல், ஏடி அண்டு டி லத்தீன் அமெரிக்கா தங்களது புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகள் இயக்கங்ககைகளை லிபர்ட்டி லத்தீன் அமெரிக்காவிற்கு விற்கும் நோக்கத்தை அறிவித்தது.

தரைவழி தொலைத்தொடர்பு இயக்க நிறுவனங்கள்

தொகு

பிரிக்கப்பட்ட பெல் சிஸ்டத்தின் பகுதியாக இருந்த எட்டு நிறுவனங்களில், கீழ்வரும் ஐந்து நிறுவனங்களும் தற்போதைய ஏடி ஆண்டு டியின் ஒரு பகுதியாகும்:

அமெரிடெக், 1999 இல் எஸ்.பி.சி. கைப்பற்றியது.

ஏடி ஆண்டு டி கார்ப்., 2005 இல் எஸ்.பி.சி. கைப்பற்றியது.

பெல்சௌத், 2006 இல் ஏடி ஆண்டு டி கைப்பற்றியது.

பசிபிக் டெலிசிஸ், 1997 இல் எஸ்.பி.சி. கைப்பற்றியது.

சௌத்வெஸ்டர்ன் பெல், 1995 இல் எஸ்பிசி கம்யுனிகேஷன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.

ஏடி ஆண்டு டி பேபி பெல்ஸின் விளக்கப்படம்.

முக்கிய கட்டுரை: பிராந்திய பெல் இயக்க நிறுவனம்.

முந்நாள் இயங்கிய நிறுவனங்கள்.

பின்வருவன, செயலிழந்துவிட்ட அல்லது எஸ்பிசி/ஏடி ஆண்டு டி உரிமையின் கீழிருந்தபோது விற்கப்பட்ட நிறுவனங்கள்:

சதர்ன் நியூ இங்கிலான்ட் டெலிபோன்: ப்ரான்டியர் கம்யூனிகேஷன்ஸிற்கு 2014 இல் விற்கப்பட்டது.

வூட்பரி டெலிபோன்: ஜூன் 1, 2007 அன்று சதர்ன் நியூ இங்கிலான்ட் டெலிபோனுடன் இணைக்கப்பட்டது.

ஊர்ப்புற தரைவழித் தொலைபேசிகளின் சரிவு

பேபி பெல்ஸாகிய, அமெரிடெக் அதன் விஸ்கான்சின் லேண்ட்லைன்களில் சிலவற்றை 1998 இல் செஞ்சுரி டெல்லுக்கு விற்றது; பெல்சௌவுத் அதன் சில இணைப்புகளை மெப்டெல்லுக்கு 2000 களில் விற்றது; யு எஸ் வெஸ்ட் 1990 களில் பல பழமையான பெல் லேண்ட்லைன்களை லிஞ்ச் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பசிபிக் டெலிகாமிற்கு விற்றது; வெரிசோன் அதன் பல நியூ இங்கிலான்ட் இணைப்புகளை 2008 இல் ஃபேர்பாயிண்ட்டிடமும், அதன் வெஸ்ட் வர்ஜீனியா நடவடிக்கைகளை 2010 இல் ஃபிரான்டியர் கம்யூனிகேஷன்ஸுக்கும் விற்றது.

அக்டோபர் 25, 2014 அன்று, கனெக்டிகட்டில் உள்ள ஏடி ஆண்டு டி லேண்ட்லைன் நெட்வொர்க்கின் கட்டுப்பாட்டை, ஃபிரான்டியர் கம்யூனிகேஷன்ஸ், மாநில பயன்பாட்டு கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலுடன் எடுத்துக்கொண்டது.

சுமார் 2,500 ஏடி அண்டு டி ஊழியர்களையும், ஏடி அண்டு டி கட்டிடங்களில் பலவற்றையும் ஃபிரான்டியர் உரிமையாக்கிக்கொண்டது உள்பட, இந்த ஒப்பந்தம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது.

அலுவலகங்களும், இயங்குமிடங்களும்

தொகு

இந்நிறுவனத்தின் தலைமையகம் டெக்சாஸின் டல்லாஸ் நகரத்தில் உள்ள விட்டாக்ர் டவரில் உள்ளது. [8] ஜூன் 27, 2008 அன்று, ஏடி அண்டு டி தனது கார்ப்ரேட் தலைமையகத்தை சான் அன்டோனியோ நகரத்திலிருந்து டல்லாஸ் நகரத்தில் உள்ள ஒன் ஏடி அண்டு டி பிளாசாவுக்கு மாற்றப்போவதாக அறிவித்தது. [8] [87] உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தொடர்ந்து வளர்ந்து வருவதால், வாடிக்கையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தனது செயல்பாடுகள், முக்கிய தொழில்நுட்ப கூட்டாளிகள், விநியோகஸ்தர்கள், புதுமை மற்றும் மனித வளங்கள் ஆகியவற்றுடன் மேலும் எளிய அணுகலைப் பெறுவதற்கு, இந்த மாற்றம் தேவையானதாக நிறுவனம் கூறியது. ஏடி அண்டு டி இன். சௌத்வெஸ்டர்ன் பெல் கார்ப்ரேஷன் என்று பெயர்பெற்றிருந்த போது, 1992 ஆம் ஆண்டில் செயின்ட் லூயிஸ், மிசௌரியிலிருந்து, சான் அன்டோனியோவுக்கு அதன் கார்ப்ரேட் தலைமையகத்தை மாற்றியது.

22 அமெரிக்க மாநிலங்களில் குடியிருப்பு மற்றும் பிராந்திய வணிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு செயல்பாட்டுக் குழு சான் அன்டோனியோவில் உள்ளது. [சான்று தேவை] ஜார்ஜியாவின் அட்லாண்டா, ஏடி அண்டு டி மொபிலிட்டியின் தலைமையகமாகத் தொடர்கிறது, முந்நாள் ஏடி அண்டு டி வயர்லெஸின் தாயகம் வாஷிங்டனின் ரெட்மண்டில், குறிப்பிடத்தக்க அலுவலகங்கள்.

நியூ ஜெர்சியிலுள்ள பெட்மின்ஸ்டர், நிறுவனத்தின் உலகளாவிய வணிக சேவைகள் குழு மற்றும் ஏடி அண்டு டி லேப்ஸின் தலைமையகமாகும், மேலும் அசல் ஏடி அண்டு டி கார்ப் அங்குதான் உள்ளது.

தொடர்பு விவரங்களைக் கொண்டு செயல்படும் ஏடி அண்டு டி விளம்பரத் தீர்வுகள் நிறுவனத்திற்கு, செயின்ட் லூயிஸ் தாயகமாகத் தொடர்கிறது. [89] 2016 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட ஏடி அண்டு டி துணை நிறுவனமான வார்னர்மீடியா, 2013 இல் அதன் முன்னோடியான டைம் வார்னர் அறிவித்தபடி, நியூயார்க் நகரில் அமைந்துள்ள 30 ஹட்சன் யார்ட்ஸ் டவரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

ஏடி அண்டு டி, ஆசிய பசிபிக் முழுவதிலும் பல இடங்களில் சேவைகளை வழங்குகிறது; அதன் பிராந்திய தலைமையகம் ஹாங்காங்கில் அமைந்துள்ளது. [91] இந்நிறுவனம் மெக்ஸிகோவிலும் செயல்பட்டு வருகிறது, மேலும் நவம்பர் 7, 2014 அன்று, மெக்ஸிகன் கேரியர் யூசாசெல், ஏடி அண்டு டி ஆல் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. [27] கையகப்படுத்தலுக்கு ஜனவரி 2015 இல் ஒப்புதலளிக்கப்பட்டது. ஏப்ரல் 30, 2015 இல் என்ஐஐ ஹோல்டிங்ஸிடமிருந்து (தற்போது ஏடி அண்டு டி மெக்ஸிகோ) நெக்ஸ்டெல் மெக்ஸிகோவின் தந்தியில்லா சேவைகளை ஏடி அண்டு டி கைப்பற்றியது.

இயக்குநர்கள் குழு

தொகு

ஜூலை 2020 நிலவரப்படி ஏடி அண்டு டியின் தற்போதைய இயக்குநர்கள் குழு:

ராண்டால் எல். ஸ்டீபன்சன் - நிர்வாகத் தலைவர்

ஜான் ஸ்டான்கி

மத்தேயு கே. ரோஸ்

சாமுவேல் ஏ. டிபியாஸ்ஸா, ஜூனியர்.

ரிச்சர்ட் டபிள்யூ. ஃபிஷர்

ஸ்காட் டி. ஃபோர்டு

க்ளென் எச். ஹட்சின்ஸ்

வில்லியம் ஈ. கென்னார்ட்

டெப்ரா எல். லீ

ஸ்டீபன் ஜே. லூசோ

மைக்கேல் பி. மெக்காலிஸ்டர்

பெத் இ. மூனி

சிந்தியா பி. டெய்லர்

ஜெஃப்ரி ஒய். யாங்

ஜூலை 2020 நிலவரப்படி தற்போதைய நிர்வாகம் பின்வருமாறு:

ஜான் ஸ்டான்கி - தலைமை நிர்வாக அதிகாரி

எட் கில்லெஸ்பி - வெளி மற்றும் சட்ட விவகாரங்களின் மூத்த நிர்வாக துணைத் தலைவர்

டேவிட் எஸ். ஹன்ட்லி - மூத்த நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை இணக்க அதிகாரி

ஜேசன் கிலார் - வார்னர்மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி

லோரி லீ - ஏடி அண்டு டி லத்தீன் அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்தல் அதிகாரி

ஜெஃப் மெக்ல்ஃப்ரேஷ் - ஏடி அண்ட் டி கம்யூனிகேஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி

டேவிட் ஆர். மெக்காட்டி II - மூத்த நிர்வாக துணைத் தலைவர் மற்றும் பொது ஆலோசகர்

ஏஞ்சலா சாண்டோன் - மனிதவளத் துறையின் மூத்த நிர்வாக துணைத் தலைவர்

ஜான் ஜே. ஸ்டீபன்ஸ் - மூத்த நிர்வாக துணைத் தலைவரும் மற்றும் தலைமை நிதி அதிகாரியும் (சி.எஃப்.ஓ)

அரசியல் ஈடுபாடு

விளைவு அரசியல் மையத்தின் கூற்றுப்படி, 1989 முதல் 2019 வரை அமெரிக்காவின் கூட்டாட்சி அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் குழுக்களுக்கு நன்கொடை வழங்கிய பதினான்காவது பெரிய கொடையாளராக, ஏடி அண்டு டி, அமெரிக்க டாலர் 84.1 மில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளது, இதில் 58% குடியரசுக் கட்சியினருக்கும் 42% இது ஜனநாயகக் கட்சியினருக்குச் சென்றது.

உதாரணமாக, 2005 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் இரண்டாவது பதவியேற்புக்கு அதிகபட்சமாக, $250,000 பங்களித்த 53 நிறுவனங்களில் ஏடி அண்டு டியும் ஒன்றாகும். [98] [99] [100] அமெரிக்க லெஜிஸ்லேடிவ் எக்ஸ்சேன்ஞ் கவுன்சிலின் (ALEC) தனியார் நிறுவன வாரியத்தில் ஏடி அண்டு டியின் பிரதிநிதியாக பில் லீஹி அமர்ந்திருக்கிறார். [101] ALEC என்பது பழமைவாத மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளின் இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது அமெரிக்காவில் உள்ள மாநில அரசாங்கங்களிடையே விநியோகிப்பதற்கான மாதிரி மாநில அளவிலான சட்டங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்கிறது.

1998 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், இந்நிறுவனம் அமெரிக்காவில் பரப்புரைக்காக 380.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டது. [105] அமெரிக்காவில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்குவதன் மூலம் எந்த வணிகங்கள் லாபத்திற்கான உரிமையை வெல்லும் என்ற கேள்வியே, ஏடி அண்டு டியின் ஒரு தலையாய அரசியல் பிரச்சினை. [106] இந்நிறுவனம் பல கூட்டாட்சி மசோதாக்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்துள்ளது.

ஏடி அண்டு டி 2013 இன் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் செயல்முறை சீர்திருத்தச் சட்டத்தை (H.R. 3675; 113 வது காங்கிரஸ்) ஆதரித்தது, இது யு.எஸ். ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) அதன் விதிமுறை உருவாக்கும் செயல்முறைகளில் பின்பற்றும் நடைமுறைகளில் பல மாற்றங்களைச் செய்யும் ஒரு மசோதா. [107] இந்த மசோதாவின் விளைவாக, ஒழுங்குமுறைகளைப் பற்றிய பொதுமக்களின் கருத்துகளை ஏற்க நிர்பந்திக்கப்பட்டு, எஃப்.சி.சி மிகவும் வெளிப்படையான முறையில் செயல்பட வேண்டியிருக்கும். [108] இந்த மசோதாவானது, இன்றைய சந்தையின் இணைய வேகத்திற்கு ஈடுகொடுக்கும் கருவிகளை நிறுவனம் கையாள உதவும் மிகவும் தேவையான நிறுவனச் சீர்திருத்தங்களாகும் என்று ஏடி அண்டு டியின் கூட்டாட்சி தொடர்புகளின் நிர்வாக துணைத் தலைவர் டிம் மெக்கோன், கூறினார்.

இன்றைய போட்டிச் சந்தைக்கான காலாவதியான ஒழுங்குமுறை நடைமுறைகள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சரியாக வைக்கப்படுவதையும் இது உறுதி செய்யும்.

மே 2018 இல், அதிபர் டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் அமைத்த எசென்ஷியல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்திற்கு ஏடி அண்ட் டி ஜனவரி மற்றும் டிசம்பர் 2017 க்கு இடையில் 12 மாதாந்திர தொகையாக மொத்தம், $600,000 செலுத்தியதாக அறிக்கைகள் வெளிவந்தன. [110] மே 8 ம் தேதி ஆரம்ப அறிக்கைகள் மொத்தம் $200,000 நான்கு மாதாந்திர கொடுப்பனவுகளை மட்டுமே குறிப்பிட்டிருந்தாலும், மே 10 அன்று வாஷிங்டன் போஸ்ட்டால் பெறப்பட்ட ஆவணங்கள், ஜனாதிபதி பதவியேற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு தொடங்கிய, 12 கொடுப்பனவுகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தின. 113] அதே நாளில், ஏடி அண்டு டி அறிக்கையை உறுதிப்படுத்தியது. [114] டிரம்ப் நிர்வாகத்தின் வரி சீர்திருத்தங்கள் திட்டம், அத்துடன் புதிய FCC இன் கீழ் இணைய நடுநிலைக் கொள்கைகளில் சாத்தியமான மாற்றங்கள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ளவும், டைம் வார்னர் உடனான $85 பில்லியன் பெறுமான இணைப்பு முயற்சி தொடர்பான "வழிகாட்டுதலை வழங்க" வும் கோஹனுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட்டின் அறிக்கையும், ப்ளூம்பெர்க்கின் கூடுதல் அறிக்கையும் [112] [113] வெளிப்படுத்தியது. [115] இருப்பினும், FCC இன் தலைவர் அஜித் பாய், கோஹன் ஏடி அண்டு டி சார்பாக இனைய நடுநிலைமை குறித்து ஒருபோதும் விசாரிக்கவில்லை என்று மறுத்தார். [114] [116] பணம் செலுத்தியது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு விசாரணை ஆணையத்தால் நிறுவனம் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும், கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் நவம்பர் மற்றும் டிசம்பர் 2017 இல் வழங்கியதாகவும் ஏடி அண்டு டிக்கான ஒரு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஜனநாயக சபை நீதித்துறை வெள்ளை மாளிகையில் இருந்து ஏடி அண்டு டி - டைம் வார்னர் இணைப்பு தொடர்பான பதிவுகளை கோரியது.

வரலாற்று சிறப்புமிக்க நிதி செயல்திறன்

நிறுவனத்தின் நிதி செயல்திறனானது பங்குதாரர்களுக்கு ஆண்டுதோறும் அறிவிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கான ஆவணமாகவும் உள்ளது. எங்கு செயல்திறன் மறுசீரமைக்கப்படுகிறதோ, அங்கு, வருடாந்திர அறிக்கையிலிருந்து செயல்திறனின் மிக சமீபத்திய அறிக்கை பயன்படுத்தப்படுகிறது.

Year 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018 2019
வருவாய் (பில்லியன் அமெரிக்க டாலர்) 45.38 42.82 40.5 40.79 43.86 63.06 118.9 124 122.5 124.8 126.7 127.4 128.8 132.4 146.8 163.8 160.5 170.8 181.2
நிகர வருமானம் (பில்லியன் அமெரிக்க டாலர் 7.008 5.653 8.505 5.887 4.768 7.356 11.95 12.87 12.12 19.09 3.944 7.264 18.25 6.224 13.69 13.33 29.85 19.37 13.9
சொத்துக்கள் (பில்லியன் அமெரிக்க டாலர்) 96.42 95.17 102 110.3 145.6 270.6 275.6 265.2 268.3 268.5 270.3 272.3 277.8 292.8 402.7 403.8 444.1 531.9 551.7
ஊழியர்களின் எண்ணிக்கை (ஆயிரக்கணக்கான) 193.4 175 168 162.7 190 304.2 309.1 302.7 282.7 266.6 256.4 241.8 243.4 243.6 281.5 268.5 254 268.2 247.8

விமர்சனம் மற்றும் சர்ச்சைகள்

அரைக்கோள தரவுத்தளம்

முக்கிய கட்டுரை: அரைக்கோள திட்டம்

1987 முதல் அதன் வலைப்பின்னல் வழியாக கடந்த அனைத்து தொலைபேசி அழைப்புகளின் அழைப்பு விவரம் பதிவுகளின் தரவுத்தளத்தை இந்நிறுவனம் பராமரிக்கிறது.

ஏடி அண்டு டி ஊழியர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா மற்றும் ஹூஸ்டனில் உள்ள உயர் தீவிர போதைப்பொருள் கடத்தல் பகுதி அலுவலகங்களில் (தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு கொள்கை அலுவலகத்தால் இயக்கப்படுகிறது) பணியாற்றுவதால் தரவை விரைவாக சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு மாற்ற முடியும்.

நீதிமன்றம் அல்லது தலைமை நடுவர் மன்றத்தின் தலையீடு இல்லாமல், நிர்வாக அழைப்பாணை வழியாக ஆவணகள் கோரப்படுகின்றன.

தணிக்கை

ஏடி அண்டு டி அல்லது அதன் தாய் நிறுவனங்கள், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் ஆகியவற்றின் நற்பெயருக்கும், நன்மதிப்பிற்கும் கலங்கம் ஏற்படுத்தும் போக்காக ஏடி அண்டு டி நம்பும் நடத்தைகளுக்காக, "ஏடி அண்டு டி உடனடியாக உங்கள் சேவையின் அனைத்து அல்லது ஒரு பகுதி, அனைத்து உறுப்பினர் அடையாளம், மின்னஞ்சல் முகவரி, ஐபி முகவரி, இணையத்தளம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் இணைய களம் பெயர் ஆகியவற்றை முன்னறிவிப்பின்றி துண்டிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம்” என்று செப்டம்பர் 2007 இல், ஏடி அண்டு டி தனது சட்டக் கொள்கையை மாற்றியது. [127] சந்தாதாரர்களின் பரிமாற்றங்களை தணிக்கை செய்வதற்கான உரிமையை தனுக்குத்தானே வழங்கிக்கொண்டதாக எழுந்த கண்டனக் குரல்களை அடுத்து, அக்டோபர் 10, 2007 க்குள், ஏடி அண்டு டி அதன் இணைய சேவைக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றி தன் சந்தாதாரர்கள் தங்களின் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த, வெளிப்படையாக ஆதரித்தது.

தனியுரிமை சர்ச்சை

மேலும் தகவல்: என்எஸ்ஏ அழைப்பு தரவுத்தளம், அறை 641A, மார்க் க்ளீன், என்எஸ்ஏ உத்தரவற்ற கண்காணிப்பு சர்ச்சை, மற்றும் ஹெப்டிங் வி. ஏடி அண்ட் டி

2006இல், ஏடி அண்டு டி தேசிய பாதுகாப்பு அமைப்பின் (NSA) முகவர்களை ஏடி அண்டு டி வாடிக்கையாளர்களின் தொலைபேசி மற்றும் இணைய தகவல்தொடர்புகளை உத்தரவின்றி கண்காணிக்க அனுமதித்ததாக குற்றம் சாட்டி, எலக்ட்ரானிக் ஃபிரண்டியர் பவுண்டேஷன், ஹெப்டிங் வி. ஏடி & டி என்ற வர்க்க நடவடிக்கை வழக்கை தாக்கல் செய்தது.

உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது 1978 இன் வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு சட்டம் மற்றும் யு.எஸ். அரசியலமைப்பின் முதல் மற்றும் நான்காவது திருத்தங்களை மீறுவதாகும்.

என்எஸ்எ இன் கண்காணிப்பு நிகழ்கிறது என்பதை AT&T இன்னும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

ஏப்ரல் 2006 இல், ஓய்வுபெற்ற முன்னாள் ஏடி அண்ட் டி தொழில்நுட்ப வல்லுநர் மார்க் க்ளீன் இந்த குற்றச்சாட்டை ஆதரிக்கும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். [130] [131] மாநில ரகசியங்கள் சிறப்புரிமை மூலம் இந்த வழக்கில் தலையிடுவதாக நீதித் துறை கூறியது. [132]

ஜூலை 2006 இல், வழக்குத் தாக்கல் செய்யப்பட்திருந்த கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான ஐக்கிய மாகாணங்கள் மாவட்ட நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்வதற்கான மத்திய அரசின் தீர்மானத்தை நிராகரித்தது.

தள்ளுபடி செய்வதற்கான தீர்மானத்தால் தூண்டப்பட்ட மாநில ரகசியங்கள் சிறப்புரிமை, கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் ஏடி அண்டு டி க்கும் இடையிலான கூட்டாண்மை குறித்த எந்தவொரு நீதிமன்ற மதிப்பீடும் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று வாதிட்டது.

இந்த வழக்கு உடனடியாக ஒன்பதாவது அமர்வுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.

வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு சட்டத்தில் பின்னோக்கிச் செல்லும் சட்டத்தை மேற்கோள் காட்டி, இது ஜூன் 3, 2009 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. [விவரங்கள் தேவை]

மே 2006 இல், யுஎஸ்ஏ டுடே அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு அழைப்பு பதிவுகளை ஏடி அண்டு டி, வெரிசோன், எஸ்.பி.சி மற்றும் பெல்சவுத் ஆகியவை தேசிய பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒரு பெரிய அழைப்பு தரவுத்தளத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக ஒப்படைத்துவிட்டதாக அறிவித்தது. [134] நவம்பர் 18, 2005 க்கு முன்னர் எஸ்.பி.சி கம்யூனிகேஷன்ஸின் ஒரு பகுதியாக இருந்த புதிய ஏடி அண்டு டி இன் பகுதிகள் குறிப்பிடப்படவில்லை.

ஜூன் 21, 2006 அன்று, சான் பிரான்சிஸ்கோ க்ரானிக்கிள், ஏடி அண்டு டி அதன் தனியுரிமைக் கொள்கையில் விதிகளை மாற்றி எழுதியுள்ளதாக அறிவித்தது.

ஜூன் 23, 2006 முதல் நடைமுறைக்கு வந்த இந்தக் கொள்கை, "வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவலை ஏடி அண்டு டி சொந்தமாகக் கொண்டுள்ளது, வாடிக்கையாளர்கள் அல்ல என்றும், மேலும் அதன் நியாயமான வணிக நலன்களைப் பாதுகாக்க, மற்றவர்களைப் பாதுகாக்க அல்லது சட்ட செயல்முறைக்கு பதிலளிக்க இதைப் பயன்படுத்தலாம்" என்றும் கூறுகிறது.

ஆகஸ்ட் 22, 2007 அன்று, தேசிய புலனாய்வு இயக்குநர் மைக் மெக்கனெல், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொடர்புகளுக்கிடையேயான அழைப்புகளை ஒட்டுக் கேட்கும் அரசாங்கத்தின் உத்தரவில்லாத திட்டத்திற்கு உதவிய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஏடி அண்டு டி ஒன்றாகும் என்பதை உறுதிப்படுத்தினார். [136]

நவம்பர் 8, 2007 அன்று, முன்னாள் ஏடி அண்ட் டி தொழில்நுட்ப வல்லுநரான மார்க் க்ளீன், எம்எஸ்என்பிசியின் கீத் ஓல்பர்மனிடம், ஏடி அண்டு டி இணைப்புகளை கடந்து செல்லும் அனைத்து இணைய போக்குவரத்தும் அந்நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் பூட்டப்பட்ட அறையில் நகலெடுக்கப்பட்டு, அதை கையாள்வதற்கான உரிமை தேசிய பாதுகாப்பு முகமையின் அனுமதி பெற்ற ஊழியர்களிடம் மட்டுமே இருந்தது என்று கூறினார். [137]

ஏடி அண்டு டி ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை, செய்திகளின் உள்ளடக்கம் தவிர்த்து, யார் யாருக்கு செய்திகளை அனுப்புகிறார்கள், தேதி மற்றும் நேரம், ஆகியவற்றை காப்பு வைத்திருக்கும். [138]

எலக்ட்ரானிக் ஃபிரண்டியர் பவுண்டேஷனின் ஒற்றை நட்சத்திர தனியுரிமை மதிப்பீட்டை ஏடி அண்டு டி கொண்டுள்ளது. [139]

அறிவுசார் சொத்து வடிகட்டுதல் [தொகு]

ஜனவரி 2008 இல், அறிவுசார் சொத்து மீறல்களுக்காக அதன் வலைப்பின்னல் வழியாக செல்லும் அனைத்து இணைய போக்குவரத்தையும் வடிகட்டத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. [140] இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இது ஏடி அண்டு டியை விட்டு வெளியேறும் சந்தாதாரர்களை வழிநடத்தும் ஒரு பெருங்கூட்ட வெளியேற்றமாக இருக்கும் என்றாபோதும், [141] எப்படியும் இணைய போக்குவரத்து நிறுவனத்தின் வலைப்பின்னல் வழியாக செல்லக்கூடும் என்பதைப்போல் இது தவறாக வழிநடத்துவதாகும் என்று ஊடகங்களில் உள்ள வர்ணனையாளர்கள் ஊகித்துள்ளனர். [140] இணைய சுதந்திர ஆதரவாளர்கள் இந்த முன்னேற்றங்களை அரசாங்க ஆணையான வலைப்பின்னல் நடுநிலைமைக்கான நியாயப்படுத்துதலாகப் பயன்படுத்தினர்.

பொதுமக்கள் பார்க்கும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களுக்கு எதிரான பாகுபாடு[edit]

"பார்வையாளர்களைக் கடுமையாக கட்டுப்படுத்தும் தாக்கமாக" பொது, கல்வி மற்றும் அரசாங்க அணுகும் (PEG) உள்ளூர் கேபிள் டிவி சேனல்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக சமூக ஊடகக் குழுக்களால் ஏடி அண்டு டி குற்றம் சாட்டப்பட்டது. [142]

சிகாகோ பொது அணுகல் சேவையான CAN-TV இன் நிர்வாக இயக்குநர் பார்பரா போபோவிக் கருத்துப்படி, புதிய ஏடி அண்டு டி யு- வெர்ஸ் அமைப்பு அனைத்து பொது அணுகல் தொலைக்காட்சிகளையும் ஒரு சிறப்பு மெனு அமைப்பிற்குள் இருப்பதைக் கட்டாயமாக்கியதால், சேனல் எண்கள், நிலையான நிரலுக்கான வழிகாட்டியை அணுகுவது மற்றும் டி.வி.ஆர் பதிவு போன்ற சாதாரண செயல்பாடுகள் மறுக்கப்பட்டுகிறது. [142] "நிலையங்களை தனிப்பட்ட சேனல்களில் வைப்பதற்கு பதிலாக, ஒரு சிக்கலான மற்றும் நீண்ட செயல்முறை மூலம் மட்டுமே செல்லகூடியதாக ஏடி அண்டு டி சமூக நிலையங்களை ஒரு பொதுவான சேனலாக தொகுத்துள்ளது" என்று கலிஃபோர்னியா பொது பயன்பாட்டு ஆணையத்தின் விகிததாரர் வக்கீல்கள் பிரிவு அறிவித்தது. [142]

சூ புஸ்கே (தொலைதொடர்பு ஆலோசனை நிறுவனமான புஸ்கே குழுமத்தின் தலைவரும், உள்ளூர் கேபிள் புரோகிராமர்களின் தேசிய கூட்டமைப்பின் / சமூக ஊடகங்களுக்கான கூட்டணியின் முன்னாள் தலைவர்), இது "அமெரிக்கா முழுவதும் பொது அணுகல், மக்கள் தங்கள் சொந்த சமூகங்களில் தங்கள் சொந்த ஊடகங்களை உருவாக்கக்கூடிய சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் சமூகங்கள் ஆகியவற்றின் மீதான ஒட்டுமொத்த தாக்குதல் [...] என்று வாதிடுகின்றார். [142]

தகவல் பாதுகாப்பு[edit]

ஜூன் 2010 இல், ஆப்பில் ஐபாடிற்கான ஏடி அண்டு டி 3ஜி சேவையின் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான மின்னஞ்சல் முகவரிகளை யாரும் கண்டுபிடிக்க அனுமதிக்கும் ஒரு பாதிப்பு ஏடி அண்டு டிக்குள் இருப்பதை கோட்ஸ் செக்யூரிட்டி என்று அழைக்கப்படும் ஹேக்கர் குழு கண்டறிந்தது. [143] பாதுகாப்பு கடவுச்சொல் இல்லாமல் இந்த மின்னஞ்சல் முகவரிகளை அணுக முடியும். [144] ஒரு ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி, கோட்ஸ் செக்யூரிட்டி ஏடி அண்டு டியிலிருந்து ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்தது. [143] மூன்றாம் நபர் வழியாக, பாதுகாப்பு குறைபாடு குறித்து கோட்ஸ் செக்யூரிட்டி ஏடி அண்டு டிக்கு தெறிவித்தது. [145] கோட்ஸ் செக்யூரிட்டி இந்த மின்னஞ்சல்களில் சுமார் 114,000 ஐ காக்கர் மீடியாவிற்கு வெளியிட்டது, இது பாதுகாப்பு குறைபாடு மற்றும் வெளிப்படுத்தல் பற்றி ஒரு கட்டுரையை வாலிவாக்கில் வெளியிட்டது. [143] [145] கோட்ஸ் பாதுகாப்பு பயன்படுத்திய வலை செயலி "மோசமாக வடிவமைக்கப்பட்டது" என்று பிரிட்டோரியன் பாதுகாப்புக் குழு விமர்சித்தது. [143]

தரவு தனியுரிமைச் சட்டங்களை மீறியதற்காக ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (எஃப்.சி.சி) வழங்கிய மிகப் பெரிய அபராதமாக குறிக்கும் வகையில், ஏப்ரல் 2015 இல், தரவு பாதுகாப்பு மீறல்களுக்கு ஏடி அண்டு டிக்கு $25 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.

மெக்ஸிகோ, கொலம்பியா மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள வாடிக்கையாளர்கள் சேவை மையங்களிலிருந்து சுமார் 280,000 பேரின் விவரங்கள் திருடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. [146] [147]

மோசடி செயல்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகள்

தொகு

மார்ச் 2012 இல், அமெரிக்காவின் மத்திய அரசு ஏடி அண்டு டிக்கு எதிராக ஒரு வழக்கை அறிவித்தது. சேவைக்கு பெற தகுதியற்ற மற்றும் மோசடி நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்த முயன்ற சர்வதேச அழைப்பாளர்களின் ஐபி ரிலே அழைப்புகளுக்கு வசதி மற்றும் கூட்டாட்சி கட்டணம் கோருவதன் மூலம் ஏடி அண்டு டி தவறான உரிமைகோரல் சட்டத்தை மீறியதாக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் கூறுகின்றன.

பதிவு காலக்கெடுவுக்குப் பிறகு மோசடி அழைப்பு அளவு குறையும் என்ற அச்சத்தில், பயனர் அமெரிக்காவிற்குள் இருக்கிறாரா என்பதை சரிபார்க்காமல் ஏடி அண்டு டி தெரிந்தே இணங்காத பதிவு முறையை கடைபிடித்தது என்று புகார், கூறுகிறது.

மோசடி வெளிநாட்டு அழைப்பாளர்களால் ஐபி ரிலே பயன்படுத்துவதற்கு வசதியளித்ததால் ஏடி அண்டு டியின் அழைப்பு அளவில் இது 95 சதவிகிதம் வரை இருந்தது என்ற தெரிந்தே, ஏடி அண்டு டி இந்த முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதாக புகார் மேலும் கூறுகிறது.

இந்த அழைப்புகளுக்கான கட்டனகளைத் திருப்பிப் பெருவதற்காக, ஏடி அண்டு டி முறையற்ற முறையில் டிஆர்எஸ் நிதிக்கு ரசீது கொடுத்ததன் விளைவாக மில்லியன் கணக்கான டாலர்களை கூட்டாட்சி கட்டணமாக பெற்றதாக அரசாங்கத்தின் புகார் குற்றம் சாட்டுகிறது. செப்டம்பர் 2020 இல், ஏடி அண்டு டி மற்றும் வெரிசோன் இணைந்து $116 மில்லியன் தீர்வை செலுத்த ஒப்புக்கொண்டன.

இனவெறி

தொகு

ஏப்ரல் 28, 2015 அன்று, இனவெறி உரைச் செய்திகளை அனுப்பியதற்காக உள்ளடக்க மற்றும் விளம்பர விற்பனைத் தலைவரான ஆரோன் ஸ்லேட்டரை நீக்கியதாக ஏடி அண்டு டி அறிவித்தது. [150] ஆப்பிரிக்க-அமெரிக்க ஊழியர் நொய்ம் கிங்கால், ஸ்லேட்டர் மீது $100 மில்லியன் பாகுபாடு வழக்கு தொடுக்கப்பட்டது. [151] அதற்கு முந்தைய நாள், எதிர்ப்பாளர்கள் டல்லாஸில் உள்ள ஏடி அண்டு டியின் தலைமையகம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அதன் செயற்கைக்கோள் அலுவலகங்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராண்டால் ஸ்டீபன்சனின் வீட்டிற்கும், முறையான இனக் கொள்கைகளை எதிர்ப்பதற்காக வந்தனர்.

கணக்குகளின்படி, எதிர்ப்பாளர்கள் ஏடி அண்டு டி 100% கறுப்பர்களுக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்க வேண்டும் என்று கோரினர். [152]

ஜனவரி 24, 2017 அன்று, அவதூறு மற்றும் தவறான பணிநீக்கத்தால் நிறுவனத்தை குற்றஞ்சாட்டி, ஸ்லேட்டர் ஏடி அண்ட் டி மீது லாஸ் ஏஞ்சல்ஸ் சுப்பீரியர் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து ஏடி அண்டு டியின் $48.5 பில்லியன் பெறுமான டைரெக்டிவி கையகப்படுத்துதலை ஏற்பாடு செய்வதில் ஸ்லேட்டர் ஈடுபட்டிருந்ததாகவும், மேலும் அவரது குறுஞ்செய்திகள் கையகப்படுத்துவதைத் தடுக்கக்கூடும் என்று தலைப்புச் செய்திகள் ஊகித்தபோது, அவர் நிறுவன நிர்வாகிகளால் "பலிகடாவாக" நீக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

குறைந்தது 2013 இன் பிற்பகுதியிலிருந்து உரைச் செய்திகளைப் பற்றி நிர்வாகிகள் அறிந்திருந்ததாகவும், அதற்காக தான் நீக்கப்பட மாட்டேன் என்று அந்த நேரத்தில் அவருக்கு வாக்குறுதி அளித்ததாகவும் அவர் கூறினார். [153] [154]

பெயரிடும் உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள்

தொகு

கட்டிடங்கள்

விட்டாக்ர் டவர் (ஒன் ஏடி அண்ட் டி பிளாசா) - கார்ப்ரேட் தலைமையகம், டல்லாஸ், டெக்சாஸ்

ஏடி அண்டு டி 220 கட்டிடம் - இன்டியானபோலிசில் உள்ள கட்டிடம், இன்டியான

ஏடி அண்டு டி கட்டிடம் - டெட்ராய்டில் உள்ள கட்டிடம், மிச்சிகன்

ஏடி அண்டு டி கட்டிடம் - இன்டியானபோலிசில் உள்ள கட்டிடம், இன்டியான

ஏடி அண்டு டி கட்டிடம் - கிங்மேனில் உள்ள கட்டிடம், அரிஸோனா

ஏடி அண்டு டி கட்டிடம் - நாஷ்வில்லே உள்ள (a.k.a. "தி பேட்மேன் கட்டிடம்"), டென்னிசே

ஏடி அண்டு டி கட்டிடம் - ஒமாஹாவில் உள்ள கட்டிடம், நெப்ராஸ்கா

ஏடி அண்டு டி கூடுதல் கட்டிடம் - டெட்ராய்டில் உள்ள கட்டிடம், மிச்சிகன்

ஏடி அண்டு டு கட்டிடம் - சான் டியாகோவில் உள்ள கட்டிடம்

ஏடி அண்டு டி மையம் - லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கட்டிடம்

ஏடி அண்டு டி மையம் - செயின்ட் லூயிஸில் உள்ள கட்டிடம், மிசௌரி

ஏடி அண்டு டி சிட்டி சென்டர் - பர்மிங்காமில் உள்ள கட்டிடம், அலபாமா

ஏடி அண்டு டி கார்ப்ரேட் சென்டர் - சிகாகோவில் உள்ள கட்டிடம், இல்லினாய்ஸ்

ஏடி அண்டு டி ஹூரான் சாலை கட்டிடம் - கிளீவ்லேண்டில் உள்ள கட்டிடம், ஓஹியோ

ஏடி அண்டு டி லெனாக்ஸ் பார்க் வளாகம் - அட்லாண்டாவிற்கு வெளியே டெக்கால்ப் கவுண்டியில் உள்ள ஏடி அண்டு டி மொபிலிட்டி தலைமையகம், ஜார்ஜியா

ஏடி அண்டு டி மிட் டவுன் மையம் - அட்லாண்டாவில் உள்ள கட்டிடம், ஜார்ஜியா

ஏடி அண்டு டி ஸ்விட்சிங் சென்டர் - லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கட்டிடம்

ஏடி அண்டு டி ஸ்விட்சிங் சென்டர் - ஓக்லேண்டில் உள்ள கட்டிடம், காலிபோர்னியா

ஏடி அண்டு டி ஸ்விட்சிங் சென்டர் - சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கட்டிடம்

ஏடி அண்டு டி டவர் - மினியாபோலிஸில் உள்ள கட்டிடம், எம்என்

ஏடி அண்டு டி கட்டிடம் - கட்டிடம் (மெரிடன்), சிடி

ஏடி அண்டு டி பொழுதுபோக்குக் குழு தலைமையகம் - எல் செகுண்டோவில் உள்ள டைரெக்டிவி கார்ப்பரேட் வளாகம், கலிபோர்னியா

இடங்கள்

ஏடி அண்டு டி மையம் - சான் அன்டோனியோ, டெக்சாஸ் (முன்பு எஸ்பிசி மையம்)

ஏடி அண்டு டி புலம் - சட்டனூகா, டென்னிசே (முன்பு பெல்சவுத் பார்க்)

ஏடி அண்டு டி பிளாசா - சிகாகோ, இல்லினாய்ஸ் (மில்லினியம் பூங்காவில் கிளவுட் கேட் சிற்பத்தைக் கொண்டுள்ள பொது இடம்)

ஏடி அண்டு டி பிளாசா - டல்லாஸ், டெக்சாஸ் (விக்டரி பூங்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மையத்தின் முன் உள்ள பிளாசா)

ஏடி அண்டு டி நிகழ் கலை மையம் - டல்லாஸ், டெக்சாஸ்

ஏடி அண்டு டி ஸ்டேடியம் - ஆர்லிங்டன், டெக்சாஸ் (முன்பு டல்லாஸ் கவ்பாய்ஸ் ஸ்டேடியம்)

ஏடி அண்டு டி ஸ்டேடியம் - க்ளென் ஜீன், மேற்கு வர்ஜீனியா (அமெரிக்காஸ் சம்மிட் பெக்டெல் ரிசர்வின் பாய் ஸ்கவுட்ஸில் உள்ள வெளிப்புற திறந்த இருக்கை அரங்கம்)

ஜோன்ஸ் ஏடி அண்டு டி ஸ்டேடியம் - லுபாக், டெக்சாஸ் (முன்பு கிளிஃபோர்ட் பி. மற்றும் ஆட்ரி ஜோன்ஸ் ஸ்டேடியம், ஜோன்ஸ் எஸ்.பி.சி ஸ்டேடியம்)

டிபிசி சான் அன்டோனியோ - சான் அன்டோனியோ, டெக்சாஸ் (ஏடி அண்டு டி ஓக்ஸ் கோர்ஸ் & ஏடி அண்டு டி கேன்யான்ஸ் கோர்ஸ்)

வார் மெமோரியல் ஸ்டேடியம், ஏடி அண்டு டி பீல்ட் - லிட்டில் ராக், ஆர்கன்சாஸ்

ஆதரவுக்கரங்கள்

தொகு

ஏடி அண்டு டி பைரன் நெல்சன் - இர்விங், டெக்சாஸ் (கோல்ஃப்)

ஏடி அண்டு டி காட்டன் பவுல் கிளாசிக் (முன்பு மொபில் காட்டன் பவுல் கிளாசிக், சௌத்வெஸ்டர்ன் பெல் காட்டன் பவுல் கிளாசிக், எஸ்.பி.சி காட்டன் பவுல் கிளாசிக்) - டெக்சாஸின் ஆர்லிங்டனில் ஏடி அண்டு டி ஸ்டேடியத்தில் (கால்பந்து) விளையாடியது

ஏடி அண்டு டி நேஷனல் - வாஷிங்டன், டி.சி. (கோல்ஃப்)

ஏடி அண்டு டி பெப்பிள் பீச் நேஷனல் புரோ-ஆம் (கோல்ஃப்)

ஏடி அண்டு டி ரெட் ரிவர் ரைவல்ரி - டல்லாஸ், டெக்சாஸ் (முன்பு ரெட் ரிவர் ஷூட்அவுட், எஸ்.பி.சி ரெட் ரிவர் ரைவல்ரி) (கால்பந்து)

யு.எஸ். ஆண்கள் மற்றும் யு.எஸ். பெண்கள் தேசிய அணிகள் உள்பட மேஜர் லீக் சாக்கர் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் சாக்கர் சம்மேளனம், மற்றும் 2009 ஆம் ஆண்டின் மேஜர் லீக் சாக்கர் ஆல்-ஸ்டார் கேம்

மெக்சிகோ தேசிய கால்பந்து அணி

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒலிம்பிக் அணி [155]

தேசிய கல்லூரி தடகள சங்கம் (கார்ப்பரேட் சாம்பியன்) [156]

ஏடி அண்டு டி அமெரிக்கன் கோப்பை, கலை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி.

2011 முதல் ஏடி அண்டு டியால் வழங்கப்படுகிறது.

ரெட் புல் ரேசிங் (ஃபார்முலா 1 பந்தய அணி), 2011 முதல் தொழில்நுட்ப உதவியும் ஆதரவும் வழங்கப்படுகிறது. [157]

கிளவுட் 9, மார்ச் 2019 முதல் வழங்கப்படுகிறது. [158] [159]

கிளப் அமெரிக்கா, ஜூலை 19, 2018 முதல் வழங்கப்படுகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. https://investors.att.com/~/media/Files/A/ATT-IR/financial-reports/quarterly-earnings/2018/4q-2018/IB_4Q2018.pdf
  2. "AT&T Inc. 2018 Quarterly Report (10-Q)". U.S. Securities and Exchange Commission. August 2, 2018. பார்க்கப்பட்ட நாள் September 4, 2018.
  3. Godinez, Victor and David McLemore. "AT&T moving headquarters to Dallas from San Antonio பரணிடப்பட்டது 2009-06-26 at the வந்தவழி இயந்திரம்." The Dallas Morning News. Saturday June 28, 2008. Retrieved June 18, 2009.
  4. "Bloomberg - Are you a robot?". www.bloomberg.com. {{cite web}}: Cite uses generic title (help)
  5. "Fortune 500 Companies 2018: Who Made the List". Fortune (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-01-15. பார்க்கப்பட்ட நாள் 2018-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ_டி_அன்ட்_டி&oldid=4165483" இலிருந்து மீள்விக்கப்பட்டது