ஹொங்கொங் வட மாவட்டம்
ஹொங்கொங் வட மாவட்டம் (North District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஹொங்கொங்கின் புதிய நகர உருவாக்கங்களில் ஒன்றான பன்லிங் செங் சுயி புதிய நகரம் இம்மாவட்டத்திலேயே உள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டின் கணிப்பீட்டுன் படி 280,730 ஆகும். குறைவான மக்கள் அடர்த்தியைக் கொண்ட மாவட்டங்களில் இம்மாவட்டம் இரண்டாவது ஆகக்குறைந்த தொகையினர் கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டம் 168 கிலோ மீட்டர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது. அத்துடன் இம்மாவட்டம் மேற்கு கடல் பரப்பில் பல தீவுகளையும் கொண்டுள்ளது.
ஹொங்கொங் வட மாவட்டம்
Hong Kong North District | |
---|---|
வரைப்படத்தில் மாவட்டம் | |
அரசு | |
• மாவட்ட பணிப்பாளர் | (Mr SO Sai-chi, BBS, MH) |
பரப்பளவு | |
• மொத்தம் | 168 km2 (65 sq mi) |
• நிலம் | 12 km2 (5 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 2,80,730 |
நேர வலயம் | ஒசநே+8 (Hong Kong Time) |
இணையதளம் | ஹொங்கொங் வட மாவட்டம் |
சிறப்பு
தொகுஇந்த மாவட்டம் சீனப் பெருநிலப்பரப்பின் செஞ்சேன் நகரத்தையும் சம்ச்சுன் ஆற்றையும் வடக்கில் எல்லையாகக் கொண்டுள்ளது. அத்துடன் ஹொங்கொங் மற்றும் சீனாவுக்கான எல்லையையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. சீனாவுக்கு போவோர் அல்லது சீனாவில் இருந்து ஹொங்கொங் வருவோர் குடிவரவு திணைக்களத்தின் நுழைமதி (வீசா) பெறும் இடம் இம்மாவட்டத்தின் வட எல்லையில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
தொகுபுள்ளிவிபரக் கணிப்பின் படி இம்மாவட்டத்தின் 70% வீதமான மக்கள் புதிய நகர் உருவாக்கமான பன்லிங் செங் சுயி புதிய நகரம் பகுதியிலேயே வசிக்கின்றனர். அதன் அன்மித்த நகரங்களான சா டவ் கொக் மற்றும் டா க்வு லிங் ஆகிய நகரங்களையும் மற்றும் இரண்டு நாட்டுப்புற சிறு நகரங்களையும் உள்ளடக்கியப் பகுதியில் கிட்டத்தட்ட 40,000 கிராம மக்கள் வசிக்கின்றனர்.
பெருமளவு நிலப்பரப்பு தேசிய வனங்களாகவே உள்ளது.
பிரதான நகரங்கள்
தொகுஇம்மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள பிரதான நகரங்கள்:
போக்குவரத்து
தொகுஇந்த வட மாவட்டத்தில் எம்டிஆர் கிழக்கு தொடருந்து வழிக்கோடு உள்ளது. மற்றும் பன்லிங் அதிவிரைவுப் பாதை, சன் டின் அதிவேகப் பாதை, சா டவ் கொக் பாதை போன்ற பாதைகளும் இம்மாவட்டத்தின் ஊடாக போகிறது.
எம்டிஆர் தொடருந்தகங்கள்
தொகு- பன்லிங் தொடருந்தகம்
- செங் சுவி தொடருந்தகம்
- லோ வூ தொடருந்தகம் (கிழக்கு தொடருந்து சேவையின் கடைசி (சீன) எல்லை)
சீன எல்லைகள்
தொகுஒங்கொங்:விக்கிவாசல் |
- சா டவ் கொக் (பாதை)
- மன் கம் டோ (பாதை)
- லோ வூ (தொடருந்தகம்)
தீவுகள்
தொகுஇம்மாவட்டத்தில் உள்ள தீவுகள்:
- ஏ சாவ்
- அப் சாவ் மெய் பக் டுன் பை
- அப் சாவ் பக் டுன் பை
- அப் சாவ் (றொபின்சன் தீவு)
- அப் லோ சுன்
- அப் டன் பை
- அப் டாவ் பை
- சாப் மோ சாவ்
- செங் செக் சுவி
- பூ வொங் சாவ்
- பன் சாவ்
- ஹங் பய்
- கட் ஓ சாவ்
- கோ பாய்
- கொக் டாய் பாய்
- லென் சுன் பெய்
- லோச்சி பை
- ங்ஓ மெய் சாவ் (முச்சக்கரத் தீவு)
- பக் காவு சாவ்
- பக் காவு சாய் வடக்கு (வட்டத்தீவு)
- பட் கா சாவ்
- சய் அப் சாவ்
- சா பய்
- சாவு கெய்பாய்
- செங் பாய்
- சுயி சம் பாய்
- சியு நிம் சாவ்
- டா ஹோ பாய்
- டய் நிம் சாவ்
- சிங் சாவ்
- வொங் நய் சாவ்
- வொங் நெய் சாவ்
- வொங் வன் சாவ் (இரட்டைத் தீவு)
- வூ சாவ்
- வூ பய்
- வூ யெங் பய்
- யென் சாவ்
- யென் சாவ், வடக்கு
வெளியிணைப்புகள்
தொகு- North District District Council பரணிடப்பட்டது 2003-08-08 at the வந்தவழி இயந்திரம்
- List and map of electoral constituencies 1 (large PDF file) பரணிடப்பட்டது 2007-06-14 at the வந்தவழி இயந்திரம்
- List and map of electoral constituencies 2 (large PDF file) பரணிடப்பட்டது 2007-06-14 at the வந்தவழி இயந்திரம்
- Fanling-Sheung Shui New Town பரணிடப்பட்டது 2005-11-23 at the வந்தவழி இயந்திரம்
- Satellite image of the new town of Fanling-Sheung Shui and its vicinity by Google Maps