ஹொங்கொங் மாவட்டங்கள்
ஹொங்கொங் மாவட்டங்கள் (Districts of Hong Kong) என்பன ஹொங்கொங் ஆட்சிப்பரப்பில் அரசியல் நில எல்லைக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலவியல் பிரிவுகளாகும். இவ்வாறு ஹொங்கொங்கில் 18 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மாவட்ட சபை உள்ளது. இந்த மாவட்ட அலகுகள் பிரித்தானிய குடியேற்ற நாடாக ஹொங்கொங் இருந்த காலங்களில் 1980 களில் உருவாக்கப்பட்டவைகளாகும். இருப்பினும் இந்த மாவட்ட சபையின் நிலவியல் எல்லைகளுக்கு அமைவாக ஹொங்கொங் காவல் துறை, தீயணைப்பு படை, உடல்நலம் பேனகம், பாடசாலை போன்றன இயங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு
தொகு1860 களின் சீன மொழியின் உள்ள வெவ்வேறு உற்கூறு மொழிகளை அல்லது பேச்சு வழக்கை கொண்ட மக்கள் குழுமமாக வாழ்ந்த பகுதிகள் ஒவ்வொரு பிரிவுகளாக இனங்காணப்பட்டன. இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகளாகவே இருந்தனர். இக்கூலிகளிடையேயான வணிக நடவடிக்கைகளுக்கு, வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த வணிகர்கள், தமது பொருற்களை விற்பனை செய்ய சட்டத்திற்கு புறம்பான வகையில் உற்புகுந்த வண்ணம் இருந்தனர். இது ஹொங்கொங் மற்றும் பிரித்தானியர் இடையே பல முரண்பாடுகளை தோற்றுவிக்கவும் தொடங்கின. இச்சூழ்நிலை பின்னனியில் 1870 ஆம் ஆண்டுகளில் தான் இந்த மாவட்டங்கள் வரையரை செய்தல் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது.[1] இதன் காரணமாக ஐரோப்பியர்களுக்கான நில ஒதுக்கீடு செய்யும் முகமாக, முதல் சட்ட ரீதியான மாவட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கை "ஐரோப்பிய மாவட்ட ஒதுக்கிட்டுச் சட்டம்" 1888 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.[2][3]. இருப்பினும் 1982 ஆம் ஆண்டே ஹொங்கொங் மாவட்ட சபைக்கான நிர்வாக அலகுகள் உருவாக்கம் பெற்று ஒவ்வொரு மாவட்டத்திற்குமான நிர்வாகச் செயற்குழு திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த மாவட்டங்களை அல்லது மாவட்ட எல்லைகள் 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் ஏற்பட்ட ஆட்சியுரிமை மாற்றத்தின் பின்னர் தொடர்ந்தும் 1999 வரை தற்காலிகமாக நீடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் 2000, சனவரி 1 முதலாம் திகதி மீண்டும் அதே 18 மாவட்டங்களை அதே அலகுகளுடன் வைத்துக்கொள்ளவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்த மாவட்டங்கள் தொடர்பில் 1982 ஆம் ஆண்டின் பின்னர் இரண்டு பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
- குவாய் சிங் மாவட்டத்தில் இருந்து சுன் வான் 1985 ஆம் பிரிக்கப்பட்டது.
- யவ் சிம் மாவட்டம் மற்றும் மொங் கொக் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக இருந்தவை, தற்போது ஒரே மாவட்டமாக யவ் சிங் மொங் மாவட்டம் என 1994 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
மேலதிக தகவல்கள்
தொகுஇந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றினதும் மக்கள் தொகை, அவற்றின நிலப்பரப்பளவு, ஒரு சதுர கிலோ மீட்டரில் மக்கள் அடர்த்தி விகிதம், சராசரி மாத வருமானம், சாதாரண தொழிலாளியின் மாத சராசரி வருமானம் போன்ற புள்ளிவிபரங்கள் கீழே உள்ள அட்டவணையில் இடப்பட்டுள்ளன.
அட்டவணை
தொகுஹொங்கொங் மாவட்டங்கள் |
மக்கள் தொகை (2006 மதிப்பீடு) |
பரப்பளவு (/கி.மீ²) |
அடர்த்தி (/கி.மீ²) |
சராசரி மாதாந்த தனிநபர் வருமானம் |
---|---|---|---|---|
கட்டுப்பாட்டகம் முழுதும் | 6,864,346 | N/A | N/A | 5,750 / 11,049 |
கடல்பரப்பு | 3,066 | N/A | N/A | 3,125 / 5,006 |
முழு நிலப்பரப்பும் | 6,861,280 | 1080.18 | 6,352 | 5,753 / 11,055 |
ஹொங்கொங் தீவு | 1,268,112 | 79.68 | 15,915 | 7,931 / 14,568 |
மையம் மற்றும் மேற்கு | 250,064 | 12.44 | 20,102 | 9,722 / 17,178 |
வஞ்சாய் | 155,196 | 9.83 | 15,788 | 10,185 / 17,788 |
கிழக்கு | 587,690 | 18.56 | 31,664 | 7,235 / 13,558 |
தெற்கு | 275,162 | 38.85 | 7,083 | 6,563 / 12,335 |
கவுலூன் | 2,019,533 | 46.93 | 43,033 | 5,184 / 10,311 |
யவ் சிங் மொங் | 280,548 | 6.99 | 40,136 | 6,034 / 11,114 |
சம் சுயி போ | 365,540 | 9.35 | 39,095 | 4,821 / 9,909 |
கவுலூன் நகரம் | 362,501 | 10.02 | 36,178 | 6,897 / 13,122 |
வொங் டயி சின் | 423,521 | 9.30 | 45,540 | 4,750 / 9,701 |
குவுன் டொங் | 587,423 | 11.27 | 52,123 | 4,845 / 9,908 |
புதிய கட்டுப்பாட்டகம் | 3,573,635 | 953.48 | 3,748 | 5,667 / 10,860 |
குவாய் சிங் | 523,300 | 23.34 | 22,421 | 4,833 / 9,718 |
சுன் மூன் | 288,728 | 61.71 | 4,679 | 6,897 / 12,860 |
சுன் வான் | 502,035 | 82.89 | 6,057 | 5,172 / 9,843 |
யுன் லோங் | 534,192 | 138.46 | 3,858 | 4,777 / 9,606 |
வடக்கு | 280,730 | 136.61 | 2,055 | 5,161 / 10,120 |
டய் போ | 293,542 | 136.15 | 2,156 | 5,806 / 10,824 |
சா டின் | 607,544 | 68.71 | 8,842 | 6,232 / 11,592 |
சயி குங் | 406,442 | 129.65 | 3,135 | 6,774 / 12,183 |
தீவுகள் | 137,122 | 175.12 | 783 | 5,659 / 11,595 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Tsai Jung-fang. [1995] (1995). Hong Kong in Chinese History: community and social unrest in the British Colony, 1842-1913. Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0231079338
- ↑ Fong, Ki. Lai Lawrence Wai-chung. [2000] (2000) Hong Kong University Press. Town Planning Practice: Context Procedures and Statistics for Hong Kong. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962209516X
- ↑ Levine, Philippa. [2003] (2003) Prostitution, Race and Politics: Policing Venereal Disease in the British Empire. United Kingdom: Routledge Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415944465
வெளியிணைப்புகள்
தொகுஒங்கொங்:விக்கிவாசல் |