தீவுகள் மாவட்டம்

தீவுகள் மாவட்டம் (Islands District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். அத்துடன் புதிய கட்டுப்பாட்டகம் நிலப்பரப்புக்குள் உள்ள மாவட்டங்களில் ஒன்றும் ஆகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பின் படி 140,188 பேர் இம்மாவட்டத்தில் வசிப்பதாக அறியமுடிகிறது.[1]

தீவுகள் மாவட்டம்
Islands District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Mr. LAM Wai-keung, Daniel, SBS, BBS, JP)
பரப்பளவு
 • மொத்தம்175.03 km2 (67.58 sq mi)
 • நிலம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்140,188
நேர வலயம்Hong Kong Time (ஒசநே+8)
இணையதளம்தீவுகள் மாவட்டம்

நிலப்பரப்பளவு தொகு

 
ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம் வான்பார்வை

ஹொங்கொங் தீபகற்ப நிலப்பரப்புடன் 236 தீவுகளையும் உள்ளட்டக்கியதாகும். அதில் இந்த தீவுகள் மாவட்டத்தில் ஹொங்கொங்கின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடலோரப்பகுதிகளில் 20 பெரிய தீவுகளையும் பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. அத்துடன் இம்மாவட்டம் ஹொங்கொங் முழு நிலப்பரப்பளவின் 16% வீதத்தைக் கொண்டுள்ளது. அதாவது ஹொங்கொங் மாவட்டங்களிலேயே நிலப்பரப்பளவு கூடிய மாவட்டம் இம்மாவட்டமாகும்.

மக்கள் தொகை தொகு

இம்மாவட்டத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு இலட்சம் அளவிலேயே உள்ளது. ஹொங்கொங் மக்கள் தொகையில் 2% வீதமானோர் மட்டுமே இம்மாவட்டத்தில் உள்ளனர். ஹொங்கொங் மக்கள் தொகையில் குறைவான மாவட்டம் இதுவாகும். மக்கள் அடர்த்தி ஒரு கிலோ மீட்டருக்கு 783 மட்டுமே உள்ளது.

அமைதி மற்றும் இயற்கை தொகு

 
டிசுகோவரி குடா வீட்டுத் தொகுதியின் ஒரு பக்கக் காட்சி
 
லந்தாவு வடக்கு அதிவிரைவுப் பாதை
 
தீவுகளுக்கான படகு சேவைகள்
 
இங்கோ பிங் 360 வான்வழி தொங்கு ஊர்தி சேவை

ஹொங்கொங் தீவு மற்றும் கவுலூன் தீபகற்பம் பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இந்த தீவு மாவட்டத்தின் தீவுப் பகுதிகள் மிகவும் அமைதியான தன்மையைக் கொண்டுள்ளன. அத்துடன் கடல்சார்ந்த இயற்கை எழிலையும் கொண்டுள்ளது. அதனால் "ஹொங்கொங் தீவு" மற்றும் "கவுலூன்" பகுதிகளில் தொழில்வாய்ப்பு புரிவோர், இந்த தீவு மாவட்டத்தில் அமைதியான சூழலில் வாழ விரும்புகின்றனர். குறிப்பாக ஐரோப்பியர், அமெரிக்கர், கனடியர் போன்றோர் இந்த தீவுகளிலேயே தமது வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இம்மாவட்டம் மூன்றாவது இளமையான (புதிய) வீட்டுத் தொகுதிகளைக் கொண்டுள்ளன.

சிறப்பு தொகு

இம்மாவட்டத்திலேயே ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அத்துடன் இந்த பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ள செக் லொப் கொக் தீவு, லந்தாவு வடக்கு மற்றும் [டுங் சுங் புதிய நகரம்]] போன்றன முற்றிலும் நவீன அழகிய விடமைப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் லந்தாவு கிழக்கில் உள்ள டிசுகோவரி குடா நிலப்பரப்பில் பிரமாண்டமான அதிநவீன, வசதிகள் மிக்க வீட்டுத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

அத்துடன் இம்மாவட்டத்தில் முய் வூ தீவு, டய் ஓ தீவு, செங் சாவ் தீவு, பெங் சாவ் தீவு போன்றன மக்கள் செறிந்து வாழும் தீவுகளாகும்.

போக்குவரத்து தொகு

லந்தாவு வடக்கு அதிவிரைவு பாதை புதிய கட்டுப்பாட்டகம் பெருநிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனூடே லந்தாவு தொடுத்தல், கப் சுயி மூன் பாலம், ஹொங்கொங் டிசுனிலாந்து மகிழ்வூட்டகம், மா வான் சாலை மற்றும் சிங் மா பாலம் போன்றப் பாதைகளின் ஊடாக சுன் வான் மாவட்டம் மற்றும் குவாய் சிங் மாவட்டம் இரண்டையும் இணைக்கிறது.

சிறப்பு சேவை தொகு

லந்தாவு தீவு கிழக்கில் உள்ள டிசுகோவரி குடா வீட்டுத் தொகுதிகளுக்கு என்று மட்டும் டிசுகோவரி குடா பேருந்து சேவை சிறப்பானது ஆகும். அந்தப் பேருந்துகள் ஹொங்கொங்கில் வேறு எங்கும் ஓடாது. வேறுப் பகுதிகளில் ஓடும் வாகனங்கள் டிசுகோவரி குடாவில் ஓடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்றே புதிய லந்தாவு பேருந்து சேவையும் ஒரு தனித்த சிறப்பு சேவையாக இயங்குகிறது.

தொடருந்து சேவை தொகு

இம்மாவட்டத்தில் மூன்று தொடருந்து வழிக்கோடுகள் உள்ளன.

படகு சேவை தொகு

பல படகு சேவைகள் உள்ளன. இருப்பினும் அதிகமானோர் பயணிக்கும் படகு சேவை வழிகள்:

தொங்கு ஊர்தி தொகு

  • இங்கோ பிங் 360 இது ஒரு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வான்கம்பி வழி தொங்கு ஊர்திகளைக் கொண்டதாகும்.

தீவுகள் மாவட்டத்தில் உள்ள தீவுகள் தொகு

குறிப்பு தொகு

இம்மாவட்டத்தின் பெயர் தீவுகள் மாவட்டம் என்பதால் பலர் ஹொங்கொங்கில் உள்ள அனைத்து தீவுகளையும் உள்ளடக்கிய மாவட்டமாக தவறுதலாகக் கருதுவோரும் உளர். உண்மையில் இந்த மாவட்டம் லந்தாவு தீவு மற்றும் அதனை அன்மித்த பெரிய தீவுகளான 20 தீவுகளையும், அத்துடன் இணைந்த சிறிய தீவுகள் சிலவற்றையும் மட்டுமே கொண்டுள்ளது.

அதேவேளை ஹொங்கொங் தீவு தனித்த ஒரு தீவாகவும், ஹொங்கொங் ஆட்சிப் பரப்பின் இரண்டாவது பெரிய தீவாகவும் உள்ளது. அத்துடன் ஹொங்கொங் தீவு நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது.

அத்துடன் லந்தாவு தீவு இன் வடக்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மா வான் தீவு, சுன் வான் மாவட்டத்தின் நிர்வாகப் பகுதிக்கு சொந்தமானதாக இருக்கிறது. அதேவேளை சிங் யீ தீவு எனும் தீவு குவாய் சிங் மாவட்டத்தின் நிர்வாகப் பகுதிக்குள் உள்ளது. அதேப்போன்றே சயி குங்கில் உள்ள தீவுகள் சயி குங் மாவட்டத்தில் உள்ளது. டோலோ கால்வாய், டய் போ மாவட்டத்தின் நிர்வாகப் பகுதியிக்கு சொந்தமாக உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-01-26.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவுகள்_மாவட்டம்&oldid=3558688" இலிருந்து மீள்விக்கப்பட்டது